ஓய்வூதியர்களுக்கு வருமான வரி கூடாது. ஏன் என்று தெரியுமா?
30 முதல் 36 வருடங்கள் அரசுபணி புரிந்தோம் அதற்கு வருடா வருடம் வருமான வரி செலுத்தினோம்.
ஆனால் தற்பொழுது நாம் ஒய்வூதியர்கள் எந்த அரசுபணியோ, வேறு பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை.
அரசுபணி பார்க்கும் பொழுது அதற்கு ஊதியம் வழங்கப்பட்டது.
ஒய்வூதியர்களுக்கு கொடுக்கப்படும் ஒய்வூதியம் ஒதுக்கி வைக்கப்பட்ட (Deferred wage) ஊதியம் ஆகும். எனவே இதற்கு நாம் வரி செலுத்த தேவையில்லை.
நாம் ஒரு பணி அமர்த்தும் அதிகாரியின் கீழ் பணி புரியவில்லை.
எனவே பென்ஷனுக்கு நாம் வருமானவரி செலுத்த கடமைப்பட்டவர்கள் அல்ல.
ஓய்வு பெற்றபின் நமக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் என்பது நமது வயது மூப்பிற் க்கான நிதி ஆகும்.
நாம் எந்த பணியும் அல்லது வேலையும் செய்யாத பொழுது எதற்காக வரி செலுத்த வேண்டும்
எனவே உங்கள் குரலை உயர்த்துங்கள் ஓய்வூதியர்களுக்கு விதிக்கப்படும் வருமான வரியினை மத்திய அரசு நிறுத்தும் வரையில்
MLA, MP கள் வரி செலுத்தாத பொழுது நாம் ஏன் வரி செலுத்த வேண்டும்.
R. S. வர்மா I. A. S (Rtd)
தலைவர், அரசு ஒய்வூதியர்கள் நலச் சங்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக