உணவு
மூன்று வகை உணவு
மனித வாழ்வில் உணவு என்பது மிகவும் முக்கியமானது.
'உணவே மருந்து' என்ற வாக்கியம் இதை மெய்ப்பிக்கும்.
மூன்று வகை உணவு
உணவை மருந்து போன்று அளவாக உண்ண வேண்டும். அந்த அளவைப் பற்றி நம் முன்னோர்களும்.. ஆன்றோர்களும்.. பலவாறாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஒருவர் தன்னுடைய காலை உணவை, பாதசாரியைப் போல உண்ண வேண்டும். மதிய உணவை, ஒரு அரசனைப் போல உண்ண வேண்டும். அதே நேரம் இரவு உணவை, யாசகம் பெறுபவனைப் போல சாப்பிட வேண்டும்.
பாதசாரி நீண்ட தூரம் பயணிப்பவன் என்பதால், அவன் பாதி அளவே உணவருந்துவான். அதைப் போல காலை உணவை, ஒவ்வொருவரும் நமது உடலில் முழு கொள்ளவில் இருந்து பாதி அளவுக்கான உணவையே உண்ண வேண்டும்.
அரச குடும்பத்தினர், பல விதமான உணவுகளை வைத்து, அதை அளவற்று உண்பார்கள். அதைப் போல நாமும் மதிய உணவை திருப்திகரமாக அளவின்றி உண்ணலாம். யாசகம் (பிச்சை) பெறுபவன், அன்று கிடைத்ததில் பாதிலும் பாதியையே உண்பான். மீதியை மறு வேளைக்கு வைத்துக் கொள்வான். அவனைக் போல நாமும் இரவு உணவை பாதியிலும் பாதியாக உண்ண வேண்டும். உணவை 'ரஜோ உணவு', 'தாமச உணவு', 'சாத்வீக உணவு' என்று மூன்று வகையாக பிரித்துள்ளனர்.
ரஜோ உணவு:- அசைவ உணவுகள், மசாலா மற்றும் எண்ணெய் போன்றவற்றை முக்கிய பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் இந்த வகையில் அடங்கும். இந்த வகை உணவுகளை அறவே தவிர்த்து விட வேண்டும் என்று ஆன்மிகப் பாதை வலியுறுத்துகிறது.
தாமச உணவு:- பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் கிழங்கு போன்ற உணவுகள், இந்த தாமச உணவு வகையில் அடக்கம். இவை நமது உடலுக்கு மந்த நிலையை உண்டாக்கும். இந்த உணவு வகைகளை மிகவும் குறைவான அளவே உட்கொள்ள வேண்டும்.
சாத்வீக உணவு:- அதிக சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் ஆகியவை இந்த சாத்வீக உணவு முறையில் அடங்கும். இவை நமது உடலுக்கும், மனதுக்கும் அமைதி நிலையைக் கொண்டு வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக