இந்த உலகத்தை இயக்கி வரும் பெட்ரோலியம் என்ற திரவத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம் பெட்ரோலியம் உலகத்தை இயக்கி வரும் வாகனங்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் நேரடியாக உணவாக்கப்படுகிறது எப்படி என்றால் நாம் வயலுக்கு இடம் உரங்களில் பெரும்பாலான உரங்கள் பெட்ரோலிய பொருட்களை அடிப்படையாகக் கொண்டவை பெட்ரோலியம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயம் வேடிக்கையானது முதலில் அசாம் மாநிலம், டிக்பாய் என்ற இடத்தில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது அதுவரை இந்தியாவில் பெட்ரோலியம் எங்கும் இல்லை என்று நம்பப்பட்டது ஒரு டிக்பாய் என்ற இடத்தில் உள்ள ஒரு குளத்தில் குளித்துவிட்டு வந்த காட்டுயானைகள் மேல் பிசுபிசுப்பான ஒரு திரவம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
அதை சோதித்துப் பார்த்ததில் அது பெட்ரோலியம் என்றும் பூமிக்கு அடியில் உள்ள பெட்ரோலியம் தானாக அழுத்தம் தாங்காமல் வெளியில் வந்து அந்த குளத்தின் நீரில் கலந்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அங்கு பெட்ரோலிய கிணறு தோண்டப்பட்டு இந்தியாவின் முதன்மை பெட்ரோலிய உற்பத்தி இடமாக அசாம் டிக்பாய் திகழ்கிறது பெட்ரோலியத்தில் பலவிதமான வகைகள் உண்டு.
அதில் குறைந்த அடர்த்தி அதிகமான அடர்த்தி என வகைகள் உண்டு. அடர்த்தி அதிகம் என்றால் பெட்ரோலியத்தில் கந்தகம் அதிகமாக கலந்து இருக்கிறது என்று அர்த்தம் இதனை பிரித்தெடுப்பது மிகவும் சிரமம் இதனால் சில நாடுகளில் உதாரணமாக ரஷ்ய பெட்ரோலியம் மிகவும் குறைவான விலைக்கும் அரபு நாடுகளில் உற்பத்தியாகும் பெட்ரோலியம் அதிகமான விலைக்கும் வாங்கப்படும் குறிப்பாக லிபியா நாட்டில் எடுக்கப்படும் பெட்ரோலியம் மிகவும் கந்தகம் குறைவான பெட்ரோலியம் என்பதால் தான் அந்த நாட்டில் உள்ள பெட்ரோலிய வளத்தை கைப்பற்றுவதற்காக அமெரிக்கா படையெடுத்து அந்த நாட்டில் இருந்த சர்வாதிகாரி முகமது கடாபி என்பவரை கவிழ்த்து விட்டு வேறு அரசை நிறுவியது எல்லோருக்கும் தெரியும் பெட்ரோலியத்தை அப்படியே பயன்படுத்த முடியாது அதை ஆலையில் சுத்திகரித்து அதில் இருக்கும் பல்வேறு பொருட்களை வடி த்தெடுப்பு முறையில் பிரித்து ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதமான பயன்பாட்டுக்கு அனுப்பப்படும் அதை கீழே உள்ள படத்தில் காணலாம்....
முதலில் பெட்ரோலியத்தை சுத்திகரிக்கும் பொழுது அது சூடுபடுத்தப்படும் பொழுது முதலில் அதிலிருந்து எரி வாயு வெளியேறும் அது சேகரிக்கப்பட்டு குளிர்விக்கப்பட்டு எல்பிஜி என்ற வடிவத்தில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது அடுத்ததாக பெட்ரோலியம் சுமார் 110 டிகிரி சென்டிகிரேட்டில் சூடுபடுத்தப்படும் பொழுது அதில் பெட்ரோல் வாயுவாக மாறி அது குளிர்விக்கப்பட்டு கார்களுக்கு பெட்ரோல் என்ற வடிவில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது அதற்கு அடுத்தபடியாக 180 டிகிரி வெப்பத்தில் நாப்தா அல்லது நாப்தலின் என்ற பொருள் வெளியேறுகிறது அது குளிர்விக்கப்பட்டு உரம் போன்ற இடுபொருட்களுக்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றது
இதன் பின்னர் மண்ணெண்ணெய் வெளியேறுகிறது அது சேகரிக்கப்பட்டு மண்ணெண்ணெய் என்ற வடிவில் அடுப்பு எரிபொருளாகவும் விமானங்களுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது பின்னர் கனரக வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் டீசல் எரிபொருள் பிரித்தெடுக்கப்படுகின்றது சுமார் 260 டிகிரி சென்டி கிரேட் வெப்பத்தில் எரி எண்ணெய் தயாரிக்கப்படுகிறது இது பாய்லர்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது கப்பல்கள் பெரும் தொழிற்சாலைகள் மற்றும் வெப்பமூட்டும் எண்ணையாகவும் ஃபர்னேஸ் ஆயில் என்று சொல்லப்படும் இந்த உலை எண்ணெய் பயன்படுகிறது இதற்கு மேலும் வெப்பமூட்டும் பொழுது அதில் அடர்த்தியான மசகு எண்ணெய் வெளியேறுகின்றது இது சேகரிக்கப்பட்டு இன்ஜின்களுக்கு லூப்ரிகேட்டிங் ஆயில் என்று சொல்லப்படும் எண்ணெயாக எடுக்கப்படுகின்றது
இவை அனைத்தும் எடுக்கப்பட்ட பின்னர் அடியில் கெட்டியான பிசின் போன்ற ஒரு கழிவு தேங்கும் இது தார் அல்லது பிட்யுமன் என்று அழைக்கப்படும் இதை பார்த்திருப்போம் சாலையில் தார் போடும் பொழுது நுண் கற்களோடு கலந்து ஒரு பிடிப்பானாக சாலை போடுவதற்கு இந்த இந்த பிட்யுமன் கழிவை உருக்கி அதை கற்களோடு கலந்து சாலை போடுவதை பார்த்திருப்பீர்கள் இதுதான் பெட்ரோலியத்தின் இறுதியான ஆனால் உறுதியான பயன்பாடு ஆகும்
இறுதியாக பெட்ரோலியம் என்பது பல கோடி நூற்றாண்டுகளுக்கு முன்பு பூமிக்கு அடியில் மக்கிப்போன மரங்கள் உருமாறி திரவமாகவும் திடமாகவும் மாறியது தான்...இப்பொழுது நாம் திரவத்தை பெட்ரோலியம் என்றும் திடப்பொருளை நிலக்கரி என்றும் நாம் அழைக்கிறோம்
ஆ ஆறுமுக நயினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக