முக்கிய அறிவிப்பு
டீமேட் கணக்கு - Nomination
வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள், உங்களது டீமேட் கணக்கிற்கு Nomination செய்யவில்லையென்றால், உங்களால் உங்களது பங்குகளையோ, Mutual Fund யூனிட்டுகளையோ விற்க முடியாது.
🔹Nominee க்கான options என்னென்ன?
1. நீங்கள் ஒருவர் முதல் மூன்று பேர் வரை நாமினியாக நியமிக்கலாம்.
2. யாரையும் நாமினியாக நியமிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கலாம்.
இந்த இரண்டில் ஏதாவது ஒரு option ஐ நீங்கள் தேர்வு செய்தே ஆகவேண்டும்.
🔹Nominee நியமிப்பது எப்படி?
உங்களது டீமேட் கணக்கில் லாகின் செய்து, profile settings சென்று, நாமினிக்கான options தேர்வு செய்து, உங்களது முடிவை தெரிவிக்கலாம்.
NSDL ல் உங்களது டீமேட் கணக்கு இருந்தால் (எப்படி தெரிந்து கொள்வது? - உங்கள் டீமேட் கணக்கில், CML அதாவது Client Master List ஐ தரவிறக்கி பார்க்கவும்), கீழ்காணும் வழியை பின்பற்றவும்.
Step 1: Click on eservices.nsdl.com/instademat-kyc…
Step 2: Enter < DP ID > + < Client ID > + < PAN >. OTP on the mobile number registered in your demat account.
Step 3: Select 'Nominate' OR click on Opt Out.
Step 4: e-sign using AADHAAR. OTP on the mobile number registered with UIDAI (AADHAAR).
🔹Nomination என்றால் என்ன?
உங்களுக்குப் பிறகு, உங்களது டீமேட் கணக்கில் உள்ள சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டுமென்பதை அதிகாரப் பூர்வமாக நீங்கள் தெரிவிப்பதே நாமினேஷன் எனப்படும்.
🔹யார் யாரெல்லாம் நாமினியாக நியமிக்கலாம்?
உங்கள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஒன்று முதல் மூன்று நபர்கள் வரை நியமிக்க வழியுண்டு. அவரவருக்கான % எவ்வளவு என்பதையும் நீங்கள் குறிப்பிட வேண்டும். தனி நபர்கள் மட்டுமே நாமினியாக நியமிக்கப்பட வேண்டும்.
🔹ஒருமுறை கொடுத்த நாமினியை மாற்ற முடியுமா?
நீங்கள் உங்கள் நாமினியை எவ்வ்ளவு முறை வேண்டுமானாலும் மாற்றலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக