மொத்தப் பக்கக்காட்சிகள்

வட்டியில்லா இஎம்ஐ வீடுகளுக்கான லிப்ட் வசதி: நிபாவ் ஹோம் லிப்ட்ஸ் Nibav Lifts

வட்டியில்லா இஎம்ஐ  வீடுகளுக்கான லிப்ட் வசதி: நிபாவ் ஹோம் லிப்ட்ஸ் Nibav Lifts

 

-    வீடுகளுக்கான லிப்ட்களை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்வதற்கான முயற்சி

சென்னை, செப்டம்பர் 29, 2023: வீடுகளுக்கான லிப்ட் வசதியை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக திகழும் நிபாவ் ஹோம் லிப்ட்ஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தங்களது தயாரிப்புகளை கொண்டும் செல்லும் வகையில் அவர்கள் எந்தவித சிரமும் இல்லாமல் தாங்கள் விரும்பிய லிப்ட்டை வாங்க வசதியாக வட்டியில்லா இஎம்ஐ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதுஇதன் மூலம் வாடிக்கையாளர் தங்கள் வீடுகளில் எந்தவித கூடுதல் செலவும் இல்லாமல் பாதுகாப்பான லிப்ட் வசதியை பெற முடியும்.

இஎம்ஐ திட்டம் என்று வரும்போது அதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் நிபாவைப் பொறுத்தவரை அவ்வாறு இல்லாமல் அந்த வசதியை சில நொடிகளில் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இதன் இணையதளத்தில் உள்ளன. இந்த எளிமையான வசதியை வாடிக்கையாளர்கள் https://nibavlifts.com/emi-eligibility/ என்ற இணையதளம் மூலம் அணுகலாம்.

 


இது குறித்து நிபாவ் ஹோம் லிப்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான விமல் ஆர். பாபு கூறுகையில், இந்த சிறப்பான திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவதோடு, "வீடுகளுக்கான லிப்ட் பிரிவில் வட்டியில்லா இஎம்ஐ திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் முன்னோடியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இதன் காரணமாக தங்கள் வீடுகளில் லிப்ட் வசதியை செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். மேலும் எங்களின் விரிவாக்கப்பட்ட நெட்வொர்க் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எங்களால் சிறப்பான சேவைகளை வழங்க முடியும். அத்துடன் எங்கள் வாடிக்கையாளர்கள் சரியான நேரத்தில் பராமரிப்பு ஆதரவு சேவைகளை பெறுவதற்கும் உத்தரவாதம் அளிக்கிறோம். இந்த எளிய இஎம்ஐ திட்டத்தின் மூலம் அதிக வாடிக்கையாளர்களிடம் எங்களின் தயாரிப்புகளை கொண்டு செல்லவும், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நாங்கள் தொடர்ந்து எங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்த இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

 

வாடிக்கையாளர்களிடம் அதிகரித்து வரும் இதன் தேவையை கருத்தில் கொண்டு இந்நிறுவனம் உலகம் முழுவதும் கடந்த 4 மாதங்களில் மட்டும் தனது அனுபவ மையங்களை 44–ல் இருந்து 71ஆக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் நெட்வொர்க் விரிவாக்கம், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதோடு, அவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி, பராமரிப்பு மற்றும் ஆதரவு சேவைகளை உடனுக்குடன் வழங்குகிறது. இவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி மற்றும் மன அமைதியை உறுதி செய்கிறது.

ஐரோப்பிய தரத்தில் உருவாக்கப்படும் நிபாவ் லிப்ட்கள், ஒவ்வொரு வீட்டு உரிமையாளர்களுக்கும் சிறப்பான அனுபவத்தை வழங்குவதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் இவை தயாரிக்கப்படுகின்றன. நிபாவின் காப்புரிமை பெற்ற வீடுகளுக்கான எலிவேட்டர்கள் வழக்கமான ஹைட்ராலிக் அமைப்புகளை விட குறைவான ஆற்றலை பயன்படுத்துகின்றன. மேலும் ஜீரோ சிவில் வேலை, சிறந்த கட்டமைப்பு, கிரீஸ் இல்லாத தொழில்நுட்பம் மற்றும் சக்கர நாற்காலி பயன்பாடு உள்ளிட்ட தொழில்துறையில் முன்னணி சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.

நிபாவ் ஹோம் எலிவேட்டர்ஸ் பற்றி:

தமிழ்நாட்டின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிபாவ் ஹோம் லிப்ட்ஸ் நிறுவனம் TUV-சான்றளிக்கப்பட்ட, ஐரோப்பிய தரத்திலான ஹோம் லிப்ட்களை தயாரித்து வருகிறது. காற்றில் இயங்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ள இந்த லிப்ட்கள் குறைந்த விலையில், ஆற்றல் திறன், எளிதில் உடைந்து விடாத வெளிப்புறங்கள், சக்கர நாற்காலி பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்நிறுவனத்திற்கு சொந்தமாக சென்னையில் 4 அதிநவீன உற்பத்தி மையங்கள் மற்றும் 2 ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்கள் உள்ளன. இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, மெக்சிகோ, கனடா, கென்யா, நைஜீரியா, கானா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் 71 அனுபவ மையங்கள் மற்றும் அலுவலகங்களுடன் உலக அளவில் சிறப்பான நெட்வொர்க்கை கொண்டுள்ள நிபாவ் நிறுவனம் வீட்டு லிப்ட் துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமாக மாறி வருகிறது.

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...