ஆரோக்கியமே,ஆனந்தம்.
Dr. எம். நூருல் அமீன்.
ஆரோக்கியமே,ஆனந்தம்.
------------------------------------------------
நாம் அனுபவிக்கும் நோய்களுக்கெல்லாம் காரணம், நமது உடலின் 'உயிரியல் கடிகார'ம் (Biological Clock) பாதிக்கப் படுவதுதான் என்கிறது சமீபத்திய ஆய்வு.
தமது வாழ்நாளின் 50 சதவிகிதத்தை நோய் களோடு தான் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன், நுரையீரல் , சிறுநீரக நோய்கள், குடல் அழற்சி, அலர்ஜி, கண் நோய், குழந்தையின்மை, மனநோய்... இவை எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து உறுப்புகளையும் தாக்கும் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான வாழ்க்கை முறை நோய்களோடு தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நோய்களுக்கெல்லாம் காரணம், நமது உடலின் 'உயிரியல் கடிகாரம் (Biological Clock) ' பாதிக்கப்படுவதுதான் என்கிறது சமீபத்திய ஆய்வு.
2017-ம் ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ் மற்றும் மைக்கேல் யங் ஆகியோரின் ஆராய்ச்சி.
அது என்ன உயிரியல் கடிகாரம்
என்று நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
நாம் பலவித
கடிகாரங்கள் பயன்படுத்தியும் பார்த்தும் இருப்போம்.
அந்தக் கடிகாரங்களுக்கு,
சாவி கொடுத்தால் அல்லது செல் போட்டால் தான் அவைகள் சரியாக ஓடிக்கொண்டிருக்கும்.
அதுபோலவே, நமது உடலின் செல்கள் அனைத்திலும், கோடிக்கணக்கான கடிகாரங்கள் இயங்குகின்றன.
இந்தக் கோடிக்கணக்கான செல்களுக்கெல்லாம் கீ' தரும் உயிரியல் கடிகாரம் நமது மூளையில் தான் இயங்குகிறது.
இந்த உயிரியல் கடிகாரம் பழுதடையும் போது தான் பல் வேறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன என்கின்றது ஆய்வுகள்.
அதாவது, வீட்டிலுள்ள ஒரு கடிகாரம் சரியாக இயங்கவில்லை என்றால், அந்த நேரத்தை பார்த்து நாம் செய்யும் நமது வேலைகள் எவ்வாறு பாதிக்க படுகிறதோ
அதுபோல இங்கு உறுப்புகளின் கடிகாரம் சரிவர இயங்காத போது தான் நோய்கள் ஏற்படுகின்றன.
மெலட்டோனின் என்பது நமது மூளையில் சுரக்கும் முக்கியமான
ஒரு ஹார்மோனாகும்.
இந்த மெலட்டோனின் என்பது, அதிக வெளிச்சத்தில் மிக குறைந்த அளவிலும், இருளில் அதிகமாகவும் சுரந்து நமது தூக்கத்தையும், அதன் மூலமாக நமது ஆரோக்கியத்தையும் நிர்ணயம் செய்கிறது.
'மெலட்டோனின் அதிகம் சுரக்கும் இரவில் நாம் கண் விழித்திருந்தும், பகலில் உறங்கியும் நாம் செய்கின்ற குழப்பம்தான், இந்த வாழ்க்கை முறை நோய்களுக்கெல்லாம் முக்கியக் காரணம்' என்கின்றனர் நோபல் பரிசு பெற்ற மருத்துவ துறை ஆராய்ச்சியாளர்கள்.
நமது முன்னோர் ஆரோக்கியத்துடன் உடலுறுதி, மன வலிமை, வேகம், நோய் எதிர்ப்பு ஆற்றல் என அனைத்திலும் கூடுதல் பலத்துடன் திகழ்ந்தனர்.
காரணம் அவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். சூரியனின் கதிர், பூமியில் படும்போது கண் விழித்தும் , இரவில் உறங்கியும் வாழ்ந்தனர்.
அன்றிலிருந்து இன்று வரை, மற்ற உயிர்கள் எதுவும் மாறாத போது, மனிதன் மட்டும் மாறி போய் விட்டான்.
அதனால் அவன் உடல் உழைப்பை மாரி பசி குறைந்தன. பசி குறைந்ததால் உணவைச் சரியான நேரத்தில் உட் கொள்வதை மறந்தான்.
புதிய ருசிகள் பழக, உட் கொள்ளும் அளவையும் மறந்தான். தூக்கத்தையும், உழைப்பையும் மறந்தான்
'எலிமினேஷன்' (elimination) எனப்படும் கழிவுகளை வெளியேற்றும் நேரம். 'ஆப்ரோபிரியேஷன்' (appropriation) எனப்படும் உணவு உட்கொள்ளும் நேரம்,
'அஸிமிலேஷன்' (assimilation) எனப்படும் செரிமானமான உணவினை கிரகித்துக் கொள்ளும் நேரம் போன்ற எல்லாமே மாறிவிட்டன.
இதனால், மனிதனின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரித்துவிட்டது. அதைச் சமன் செய்ய வியர்வை நாளங்களும், சிறுநீரகமும் அதிக வேலை செய்யத் தொடங்கின.
உடலின் வெப்பநிலை அதிகமாகி, இயற்கையாக உறங்கி ஓய்வெடுத்த உடல், இப்போது ஏ.சியின் குளிருக்கு உடல் வெப்பத்தைச் சமன் படுத்த, ஓய்விலும் வேலை செய்து கொண்டிருக்கிறது.
கல்லீரல் மற்றும் பித்தப்பை ஓய்வுக்கான நேரமான நள்ளிரவில் விழித்திருப்பதால் பெருமளவில் அது பாதிப்படைந்து
வாழ்க்கைமுறை நோய்களும் ஒவ்வொன்றாக தோன்றத் துவங்கின.
இவற்றுக்கெல்லாம் தீர்வுதான் என்ன..?
சற்றே யோசிப்போம்..!
அதிகாலையில் விழிப்பது, முடிந்தளவில் இரவில் உறங்கும் நேரத்தைத் சீக்கிரமாக்குவது என படிப்படியாக நம்மை நாமே மாற்றிக்கொள்வோம்...
இந்தச் சிறிய மாற்றங்கள் ஒவ்வொன்றும், பல்வேறு நோய்களிலிருந்து நம்மை
காப்பாற்றும் என்பதை உறுதியாக நம்புவோம்.
ஆரோக்கியமே ஆனந்தம்.
என்பதை இனியாவது வாழ்வில் காண்போம்.
நேசதுடன்,
Dr.எம். நூருல் அமீன்,
THAHIRA CLINIC &
SOUTH INDIAN INSTITUTE OF INDIGENOUS MEDICINE'S
CHENNAI.1 CELL.9360691377.