மொத்தப் பக்கக்காட்சிகள்

ரியல் எஸ்டேட் துறையில் புதிய திட்டங்கள், வீடுகள் விற்பனை அதிகரிப்பு –கிரெடாய் சென்னை real estate


 

 

நிதி ஆண்டின் 2வது காலாண்டில் ரியல் எஸ்டேட் துறையில் புதிய திட்டங்கள், வீடுகள் விற்பனை அதிகரிப்பு

–––––––

கிரெடாய் சென்னை தகவல்

–––––––––––

 

சென்னை, ஆக.17– 2023: நடப்பு நிதி ஆண்டின் ஜூன் மாதம் முடிவடைந்த 2வது காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை கிரெடாய் சென்னை வெளியிட்டுள்ளது. இது ரியல் எஸ்டேட் துறையில் இதன் செல்வாக்கை மீண்டும் நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த காலாண்டில் ரியல் எஸ்டேட் துறையில் பதிவு செய்யப்பட்ட சொத்துகளில் 50 சதவீதம் கிரெடாய் உறுப்பினர்களின் திட்டங்கள் என்றும் இந்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

 

இந்த அறிக்கை குறித்து கிரெடாய் சென்னை கூறியிருப்பதாவது:முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 2வது காலாண்டில் ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை குடியிருப்பு திட்டங்கள் 4.26 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ள அதேசமயம், கடந்த நிதி ஆண்டின் 2வது காலாண்டுடன் ஒப்பிடுகையில் அது 9.26 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் இதே காலத்தை ஒப்பிடும்போது, இது மக்களிடையே நிலவும் மனமாற்றத்தைக் காட்டுகிறது. சென்னையில் கடந்த நிதி ஆண்டின் 2வது காலாண்டில் 3,889ஆக இருந்த சொத்துகள் விற்பனையானது தற்போது நடப்பு நிதி ஆண்டின் 2வது காலாண்டில் மொத்தம் 6,435 சொத்துகள் விற்பனையாகி உள்ளது. இது 65.47 சதவீதம் அதிகரித்துள்ளதைக் காட்டுவதோடு, இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குடியிருப்பு சொத்துகளுக்கான தேவை அதிகரித்து இருப்பதையும் காட்டுகிறது.

 

இதேபோல சென்னையில் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களைப் பொறுத்தவரை நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டைக் காட்டிலும் 2வது காலாண்டில் 11.74 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 2வது காலாண்டில் மத்திய சென்னையில் 31 சதவீத திட்டங்களும், அதனைத் தொடர்ந்து தெற்கு புறநகர் மற்றும் தெற்கு மத்திய சென்னையில் முறையே 28 மற்றும் 14 சதவீத திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

 

இதேபோல் வீடுகளைப் பொறுத்தவரை நடப்பு ஆண்டின் 2வது காலாண்டில்தெற்கு புறநகர்ப் பகுதிகளில் 43 சதவீத வீடுகள் விற்பனையாகி உள்ளன. அதைத் தொடர்ந்து மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 20 சதவீதம் மற்றும் தெற்கு மத்திய பகுதிகளில் 14 சதவீதம் விற்பனையாகி உள்ளன.

 

இது குறித்து கிரெடாய் சென்னை தலைவர் சிவகுருநாதன் கூறுகையில், நடப்பு நிதி ஆண்டின் 2வது காலாண்டில்சென்னையில் ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. மத்திய சென்னை கட்டுமான திட்டங்களில் முதன்மையாக இருப்பதோடு, தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இது சென்னையின் குடியிருப்புகளுக்கான சாதகமான வளர்ச்சி மற்றும் வலுவான தேவையை ஒருசேர வெளிப்படுத்துகிறது. கட்டுமான திட்டங்கள் மற்றும் வீடுகள் விற்பனை ஆகியவற்றின் வளர்ச்சியானது ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் நேர்மறையான வேகத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

 

மேலும் அவர் கூறுகையில்,

இதே காலத்தில் கிரெடாய் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட குடியிருப்பு திட்டங்களில் 89 சதவீதம் விற்பனையாகி உள்ளன. இந்த காலாண்டில் மொத்தம் சென்னையில் 5,498 வீடுகள் விற்பனையாகி உள்ளன. கடந்த 2021–ம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனையான 5,574 வீடுகளுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவாகும்

 

இந்தக் காலாண்டில் கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகாத 7,938 வீடுகளில் 5,296 வீடுகள் அதாவது 67 சதவீதம் கிரெடாய் உறுப்பினர்களுக்கு சொந்தமானவை ஆகும். 5,296 விற்கப்படாத வீடுகள் இருந்தாலும், இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவாகவே உள்ளனஇதனால் விற்பனைக்கும் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளியை இது குறைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 

சென்னையில் கடந்த ஜூன் மாதம் விற்பனையான மொத்த வீடுகளில் 502 வீடுகளில் 234 வீடுகள் அதாவது 46.8 சதவீதம் கிரெடாய் உறுப்பினர்களால் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். 268 வீடுகள் அதாவது 53.4 சதவீதம் கிரெடாய் உறுப்பினர்கள் அல்லாதவர்களின் திட்டங்கள் ஆகும்.

ஒட்டுமொத்தமாக, நடப்பு நிதி ஆண்டின் 2வது காலாண்டில் சென்னையைப் பொறுத்தவரை ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...