மலையமாதேவி சரித்திரப் புதினம்
டாக்டர் எல். கைலாசம்
*********************
மலையமாதேவி
சோழநாட்டுச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்தப் புதினம், வலுவான வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில். எதிர்பாராதத் திருப்பங்களையும், அதிசயமான மாற்றங்களையும் கொண்டு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது.
சோழநாட்டு வடஎல்லையில் ஏற்பட்டக் கொடியயுத்தத்தில் சோழச்சக்ரவர்த்தி ராஜேந்திரசோழரின் மகன் ராசாதிராசர், கொப்பத்தில் நடந்த யுத்தத்தில் சாளுக்கியர்களின் சூழ்ச்சியால் இறந்து போக, அவரது சகோதரர் இரண்டாம் ராஜேந்திரசோழர் போர்க்களத்திலேயே முடிசூடி சோழ சக்கரவர்த்தியாகிறார்.
இரண்டாம் ராஜேந்திரசோழரின் மகன் மகேந்திரவர்மர், சாளுக்கியர்களுடன் போரிட்டு வெற்றிபெற்று சோழநாடு திரும்பிய பிறகு மர்மமான முறையில் காணாமல் போகிறார்.
மகனை இழந்த அதிர்ச்சியில் இரண்டாம் ராஜேந்திரரும் இறந்து போக, சிக்கலானக் கொடியச் சூழலில் இரண்டாம் ராஜேந்திரரின் சகோதரர் வீரராஜேந்திரர் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று சாணக்கியத்தனமாகச் சோழநாட்டை எவ்விதம் காக்கிறார் என்பதைக் கற்பனை கலந்து இந்தப் புதினம் சொல்கிறது.
சிவபக்தி, வாழ்வியல் முறை, படைநிர்வாகம், போர்த்தந்திர தொழில்நுட்பங்களுடன், சிலிர்பூட்டும் போர் வர்ணனைகளையும் 'வீரத்துக்குள் ஈரம்', 'காதலன் வழியிலே காதலி' போன்ற கவிதையான மனித உறவுகளையும் சொல்லும் இந்தப்புதினம், படிப்பவர்களை நிச்சயம் ஈர்க்கும்.
வானதியில் கிடைக்கும்.
88387 61217
88387 61217
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக