சென்னை எழும்பூர்- திருச்செந்துார் விரைவு ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றம் - தெற்கு ரயில்வே
திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரையிலான அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்த நிலையில், சமீபத்தில்தான், பணிகள் நிறைவடைந்தன. பிறகு, மின்சார ரயில் சேவையாக மாற்றப்பட்டதுடன், கடந்த ஏப்ரல் மாதம் முதல், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் 10 நிமிடம் பயண சேவையாக நேரம் அதிகரிக்கப்பட்டது.
அதாவது இந்த மின்சார சேவை ரயிலானது திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம், கடலூர், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும். இதுவரை டீசல் மூலம் மட்டுமே இயக்கப்பட்டு வந்த ரயில்கள் இப்போது, மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
ரயில் பாதை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடந்து வரும்நிலையில், ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் விரைவு ரயில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக இயக்கப்படுகிறது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
"எழும்பூரில் இருந்து மாலை 4:10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை 6:10 மணிக்கு திருச்செந்துார் செல்லும். இதற்கு முந்தைய நேரத்தை ஒப்பிடுகையில் 40 நிமிடங்கள் முன்னதாகவே செல்லும் மறுமார்க்கமாக திருச்செந்துாரில் இரவு 8:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:25 மணிக்கு எழும்பூர் வந்தடையும். அதற்கு முந்தைய நேரத்தை ஒப்பிடுகையில், 15 நிமிடங்கள் பயண நேரம் குறையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல், பயண நேரம் 40 நிமிடங்கள் குறையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக