மொத்தப் பக்கக்காட்சிகள்

கடன் வாங்குவோர் கொடுக்கும் காசோலையில் அதிக தொகைக்கு திருத்தி வழக்கு தொடரும் நபர்களுக்கு நீதிமன்றம் கிடிக்கிப்பிடி Loan

கடன் வாங்குவோர் கொடுக்கும் காசோலையில் அதிக தொகைக்குதிருத்தி Sending வழக்கு தொடரும் நபர்களுக்கு உயர்நீதிமன்றம் கிடிக்கிப்பிடி



பொதுவாக கடன் வாங்குவோர் பல தரப்பில் உள்ளனர். அவர்களில் தொழில் தொடங்க, வீடு கட்ட, மகள்-மகன் படிப்பு, திருமணம் மற்றும் உறவினர்கள் மருத்துவச் செலவு, வாகனக்கடன் போன்ற பல்வேறு காரணங்களுக்காக தேவை உடையோர் கடன் வாங்குகின்றனர். வங்கிகளில் மட்டுமின்றி தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்கள் போன்றவர்களிடமே மக்கள் அதிகளவில் கடன் பெறுகின்றனர்.

அப்படி கடன் பெறுவோரிடம் கடன் வழங்கும் வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும், கந்துவட்டிக்காரர்களும் வெற்று காசோலையில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கடன் வழங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளன.

அப்படி வாங்கும் காசோலையில் கடன் பெறுவோரிடம் கையெழுத்தை மட்டுமே வாங்கிக்கொண்டு கடன் கொடுத்துவிட்டு, பின்னர் அந்த காசோலையில் வாங்கிய தொகைக்கு மேலாக அதிக தொகையை எழுதிக்கொண்டு, அந்த கொகையை தர வேண்டும் என மிரட்டுவதும், அந்த காசோலையை ஆதாரமாக கொண்டு நீதிமன்றங்களில் மோசடி வழக்கு தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களிடமே அபராதத்துடன் பணத்தை கொள்ளையடிப்பதும் அதிகரித்து வருகிறது.

இது போன்று முறைகேட்டில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் செயல்களை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு ஒன்றில் நீதிபதி பி.என்.பிரகாஷ் அளித்த தீர்ப்பில், வெற்று காசோலையில் கையெழுத்து போட்டு கடன் வாங்குபவர்கள் மீது, கடன் வாங்கிய தொகைக்கு மேல் பல மடங்கு அதிக தொகையை இட்டு காசோலையை நிரப்பி, அந்த தொகையை வசூலிக்கும் வகையில் வழக்கு தொடுக்கப்படுகின்றன.

அப்படி தொடுக்கப்படும் வழக்கில், காசோலையில் உள்ள கை எழுத்தை தவிர, மற்ற வாசகங்களை கடன் வாங்கியவர்தான் எழுதினாரா என கண்டுபிடிக்க, கை எழுத்து நிபுணர் முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகி, 30 தடவை அதே காசோலை வாசகங்களை எழுதி காண்பிக்க வேண்டும்.

அதை காசோலையில் உள்ள எழுத்துக்களுடன் ஒப்பிட்டு பார்த்து, கை எழுத்து நிபுணர் அறிக்கை தர வேண்டும். அதை முக்கிய சாட்சியாக கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சந்தை இறக்கத்தை சமாளிப்பது எப்படி? 2024 டிசம்பர் 28, சென்னை BAJAJ FINSERV

ப்ரகலா வெல்த் பி.லிட் மற்றும் BAJAJ FINSERV வழங்கும் சந்தை இறக்கத்தை சமாளிப்பது எப்படி?  சென்னையில்  மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீட...