மொத்தப் பக்கக்காட்சிகள்

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, பிரத்யேக எம்.எஸ்.எம்.இ செயலாக்க மையம் TMB

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, அதன் முதல் பிரத்யேக எம்.எஸ்.எம்.இ  செயலாக்க மையத்தை  சென்னையில் திறக்கிறது

சென்னை, ஜூன் 6, 2023: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank Ltd -TMB), தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்ட, புகழ்பெற்ற பழைய தலைமுறை  தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும். அது  இன்று  அதன் முதல் பிரத்யேக எம்.எஸ்.எம்.இ (MSME - Micro, Small & Medium Enterprises) செயலாக்க மையத்தை  (Processing Hub) சென்னையில்  திறந்துள்ளதாக அறிவித்தது. இந்தச் செயலாக்க மையம், எம்.எஸ்.எம்.இ வாடிக்கை நிறுவனங்களின் தேவைகளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்யும், கடன் செயலாக்க நேரத்தை வெகுவாக குறைக்கும் மற்றும் வங்கியின் எம்.எஸ்.எம்.இ பிரிவில் வழங்கப்படும் கடன் அளவை அதிகரிக்கவும் உதவும்.

நடப்பு நிதியாண்டின் (2023-24) முதல் காலாண்டில், தமிழகத்தில் கோயம்புத்தூர், மதுரை மற்றும் தூத்துக்குடியில் மற்ற எம்.எஸ்.எம்.இ செயலாக்க மையங்களை விரைவில் திறக்க, இந்த வங்கி இலக்கு வைத்துள்ளது. இந்த ஆண்டு (2023) ஜூலை முதல் செப்டம்பர் வரை, இந்தியா முழுக்க பிற நகரங்களில் எம்.எஸ்.எம்.இ செயலாக்க மையங்களைத் தொடங்கவும் இந்த வங்கி இலக்கு வைத்துள்ளது. எம்.எஸ்.எம்.இ மையத்துடன் இணைக்கப்பட்ட ரிலேஷன்ஷிப்  மேலாளர்கள் (Relationship Managers)  வாடிக்கையாளர்களுக்கு முன்மொழிவை (Proposal) வழங்குவதிலிருந்தே கடன் வழங்குவதற்கு இறுதிவரை உதவுவார்கள். இந்தச் சேவைகள் ஆரம்ப கட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள  இந்த வங்கியின் 200 கிளைகளை உள்ளடக்கியதாகும்.  இந்த எம்.எஸ்.எம்.இ மையம், வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் மற்றும் கடன்களை திறமையாக வழங்குவதை உறுதி செய்யும். முன்மொழிவுகள் மற்றும் கடன் முடிவுகளைப் பிரிக்கவும், கடன் மதிப்பீடு மற்றும் அனுமதியில் சிறந்த முன்னேற்றத்தை உறுதி செய்யவும், சீரான மதிப்பீட்டுத் தரத்தைப்  பேணவும், உயர் மதிப்பீட்டுத் தரத்தைப் பராமரிக்கவும், கடன் அனுமதி அளிப்பதற்கான நேரத்தைக் குறைக்கவும் (Turnaround Time- TAT) மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிப்பதற்காகவும் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.


இதற்கான முடிவு குறித்து பேசிய  தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு.  எஸ் கிருஷ்ணன் (Shri S Krishnan, MD & CEO of TMB) கூறியதாவது, "எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரம் எனலாம்.  எங்கள் கடன் திட்டங்கள் மற்றும் சேவைகளை சிறந்த முறையில் வழங்க கவனம் செலுத்துவது மூலம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு  சிறந்த சேவை அளிக்க உறுதி பூண்டுள்ளோம். அவர்களுக்கு ஆதரவு வழங்குவது எங்கள் கடமையாகும். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் முக்கிய மையமாக இருக்கும் மையங்களில் எம்.எஸ்.எம்.இ செயலாக்க மையத்தை நிறுவுவதன் மூலம், கடன் தரத்துடன் (Credit Quality) கடன் விரிவாக்கத்தில் சிறப்பாக கவனம் செலுத்த நாங்கள் உறுதியளிக்கிறோம்." என்றார்.

டி.எம்.பி  ஆனது, அதன் 100+ ஆண்டு கால வரலாற்றில் வலுவான அடிப்படைகள் மற்றும் தொழில்துறையில் தொடர்ச்சியான லாபம் ஈட்டும் சாதனைப் பதிவைக் கொண்டுள்ளது. இந்த வங்கி, 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் 533 கிளைகள் மற்றும் 12 பிராந்திய அலுவலகங்களுடன் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. 50 லட்சத்துக்கும் அதிகமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.

 

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பற்றி..!

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank Ltd -TMB), தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்ட முன்னணி நிதிச் சேவை அமைப்பாகும்.  இந்த வங்கி, 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் 533 கிளைகள் மற்றும் 12 பிராந்திய அலுவலகங்களுடன் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. 50 லட்சத்துக்கும் அதிகமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. அதன் தொடக்கத்திலிருந்து, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களை அதன் ஒருங்கிணை பல்வேறு வங்கித் திட்டங்கள் மற்றும் சேவைகள் மூலம் மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது.

பத்திரிக்கை தொடர்புக்கு

: tmb@adfactorspr.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...