மொத்தப் பக்கக்காட்சிகள்

நாம் உயிருடன் இருக்கும் போது செய்ய வேண்டிய முக்கிய வேலைகள் Documents

ஒரு முக்கிய அறிவிப்பு *நாம் உயிருடன் இருக்கும் போது செய்ய வேண்டிய முக்கிய வேலைகள்*
ஆயுள் காப்பீடு, வங்கி கணக்கு, போஸ்ட் ஆபீஸ் முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட், ஓய்வூதியம் பெறுவதற்கும்,பங்கு முதலீடு வைத்திருப்பவர்களுக்கு சிறு ஆலோசனை

✓வாரிசு (nomination) நியமனம் செய்யப்பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்

✓வாரிசின்  பெயர் ஆதார் கார்டு, பான் கார்டு , வங்கிக் கணக்கு மூன்றிலுமே சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

** முகவரியில் மாற்றம் இருந்தால் உடனடியாக மாற்றவும் முகவரி அத்தாட்சி என்பது நீங்கள் இருக்கும் வீட்டிற்கு இருந்த வீட்டிற்கு அல்ல

** நீங்கள் புதிய வீட்டிற்கு குடியேறினார்கள் என்றாள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று POSTAL ID படிவத்தினை பூர்த்தி செய்து பணம் செலுத்தி புதிய வீட்டிற்கான முகவரி அத்தாட்சியை பெறலாம் அதை வைத்துக்கொண்டு எல்லா ஆவணங்களையும் மாற்றிக்கொள்ளலாம்

  ##திருமணமான பெண்கள் அவர்கள் பெயருடன் கணவரின் பெயரை சேர்த்துக் கொள்கிறார்கள் அப்படி சேர்த்தால் உடனடியாக பான் கார்டு ஆதார் கார்டு வங்கி கணக்கு எல்லாவற்றிலும் அந்த மாற்றம் இடம்பெற வேண்டும்

## பெயர் மாற்றம் இருந்தால் government gazette இல் மாற்றி வைத்துக்கொள்வது நல்லது அதற்கு 415 ரூபாய் மட்டுமே செலவு

** வங்கியில் கணக்கு தொடங்கும் போதும் கணவன் மனைவி இருவருமே இயங்கும் படியான E or S (either or survivor) வைத்துக் கொள்வது நல்லது 

எந்த காரணம் கொண்டும் ஒருவர் இறந்த பிறகு அவரது வங்கி கணக்கில் எந்த பரிவர்த்தனை செய்யக்கூடாது குறிப்பாக ATM PIN தெரிந்திருந்தால் கூட பணம் எடுக்கக் கூடாது (EITHER or SURVIVOR ACCOUNT  ATM உபயோகித்து பணம் எடுக்கலாம்)

வங்கி கணக்கு துவங்கும் போது கணவன் மனைவி இருவரும் பரிவர்த்தனை  செய்யும்படி கணக்கு துவங்க வேண்டும் வாரிசு பதிவு செய்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் வாரிசு பதிவு செய்யவில்லை என்றால் வங்கியில் இருக்கும் பணம் வாங்குவது மிக மிக கடினம்

** ஓய்வுதியம் பெறுவர் கணவன் மனைவி ( E or S ) கணக்கு வைத்துக்கொள்ளலாம் ஆனால் குடும்ப ஓய்வூதியம் பெறுவர் வாரிசு மட்டுமே நியமிக்க முடியும் 

***மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது கண்டிப்பாக(mode of holding anyone or survivor) இருக்க வேண்டும்

***   பங்குசந்தையில் முதலீடு செய்திருந்தால் அதை  உடனடியாக  D-MAT கணக்கு ஆரம்பிக்கவும்

** முக்கியமாக LIC பாலிசி வைத்திருப்பவர்கள் முகவரி மாற்றம் வங்கி கணக்கு எண் மாற்றம் உடனடியாக மாற்றவும் ஏனென்றால் எல்ஐசி மட்டுமே முதிர்வு தேதியன்று உங்கள் வங்கி கணக்கில் உங்களுக்கு சேர வேண்டிய தொகையை வரவு வைக்கும் அல்லது கடைசியாக பதிவு செய்த முகவரியில் பதிவுத் தபாலில் உங்கள் முதிர்வு விவரத்தை தெரிவிக்கும்

**  தற்போது வசிக்கும் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடி போயிருந்தால் கூட கேஸ் ,ரேஷன், எல்ஐசி பாலிசி, வங்கி கணக்கு, ஆதார் கார்டு ,பான் கார்டு, கேபிள் டிவி கனெக்ஷன் மாற்றுவது போல மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்
** முக்கியமாக திருமணமாகாதவர்கள் அவர் கூடப் பிறந்தவர்களுடன் வங்கி கணக்கு (E or S) வைத்துக் கொள்ளலாம் 

**  நீங்கள் உங்கள் குடும்பத்தை நேசிப்பவராக இருந்தால் ஒருவேளை உங்கள் வருமானம் நின்று போனால் (விபத்து, வேலை இழப்பு, மரணம்) உங்கள் குடும்பத்தை பராமரிக்க பணத்தை கொடுக்கவும் அது எவ்வளவு (மாத செலவு X12X20) இல்லையென்றால் மிக மிக குறைந்த பிரிமியத்தில் காலக் காப்பீடு செய்து கொள்ளவும் (TERM INSURANCE)

*** குழந்தைகள் பெயரில் முதலீடு, இன்சூரன்ஸ், தவிர்க்கவும்

***  இருசக்கர வாகனம் கார் வாங்கினால் அதை மட்டும் பெயர் மாற்றம் செய்துவிட்டு இன்ஷூரன்ஸ் மாற்றவில்லை என்றால் விபத்து நடந்தால் நஷ்ட ஈடு கிடைக்காது வாகனம் ஒருவர் பெயரிலும் இன்சூரன்ஸ் வேறொரு பெயரிலும் இருந்தால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் பழைய வண்டி வாங்கும்போது அந்த ஓனரிடம் ஆர் சி பெயர் மாற்றம் படிவங்கள் அனைத்தையும் வாங்கி பெயர் மாற்றாமலே வண்டி ஓட்டிக் கொண்டிருப்பார்கள் அப்படி ஓட்டும் போது அந்த ஓட்டுனர் விபத்தில் மரணம் அடைந்தால் அவரது குடும்பத்திற்கு 15 லட்ச ரூபாய் நஷ்டம் ஆகும் இந்த 15 லட்சம் காப்பீடு ஓட்டுனரும் உரிமையாளரும் ஒருவராக இருந்தால் மட்டுமே அந்த 15 லட்சம் கிடைக்கும்
*** பழைய வீடு வாங்கும் போது பத்திரப்பதிவு முடிந்தவுடன் அதை அத்தாட்சியாக வைத்துக்கொண்டு மின்சாரம், கழிவு நீர், குடிநீர் இவற்றில் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் இப்பொழுது EB ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற பொழுது 15 ,20 வருடங்களாக EB மாற்றாமலே வீடு வித்தவர் பெயரில் இருக்கிறது

உபயோகித்துக் கொண்டிருக்கும் கைபேசி (MOBILE) தொலைந்துவிட்டால், அல்லது சிம் (SIM) வேலை செய்யவில்லை புது சிம் வாங்கும்போது அதே எண் அதே (NETWORK) நெட்வொர்க் வாங்கவும் புதிதாக நம்பர் மாற்றினால் வங்கி கணக்கு ,கேஸ், ஆதார் கார்டு,  குடும்ப அட்டை, வருமான வரி, இன்ஷூரன்ஸ், ஆர்டிஓ, குழந்தைகளுடைய பள்ளிக்கூடம் எல்லாவற்றிற்கும் பிரச்சனை வரும் மொபைல் தொலைந்தவுடன் வாங்க வேண்டும் இல்லையென்றால் அந்த எண் வேற ஒருவருக்கு வழங்கப்பட்டு விடும் 

 நீங்கள் வெளிநாட்டுக்கு செல்வதாக இருந்தால் பெற்ற தாய் தந்தை, உடன் பிறந்தவர்கள் விட்டு செல்வது போல உங்கள் சேமிப்பு கணக்கையும் விட்டுவிட்டு செல்லுங்கள் இல்லையென்றால் உங்கள் குடும்பத்தார் ஒரு உடன். E or S சேமிப்பு கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்  இது இன்சூரன்ஸ் பணம், பிஎஃப் பணம் பெறுவதற்கு பெரும் உதவியாக இருக்கும்

பார்ப்பதற்கு எல்லாம் சிறு விஷயம் தான் இதில் எதில் சிக்கினாலும் உங்களுடைய பணம் விரயம் கால விரயம் ஏற்படும்


மேற்கூறிய  எப்பொழுது கடைபிடிக்க வேண்டும் *நாம் உயிருடன் இருக்கும்போது*

*பின்குறிப்பு இந்தப் பதிவை படித்தவுடன் பான் கார்டு ஆதார் கார்டு எங்கு இருக்கிறது கண்டுபிடிப்பீர்கள்  என்று நம்புகிறேன்*

*மேலும் விவரங்களுக்கு தவறுகள் இருந்தால் தெரிவிக்கவும்  கன்னி குமார்  9444087486 & 9962907346*
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...