இந்திய தொழில் கூட்டமைப்பு: சர்ஃபேஸ் & கோட்டிங் 2023 எக்ஸ்போ
இந்திய தொழில் கூட்டமைப்பு, தென் மண்டலம், அதன் 4வது சர்ஃபேஸ் & கோட்டிங் எக்ஸ்போ 2023 ஜூன் 29 முதல் ஜூலை 1, 2023 வரை, சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது, இக்கண்காட்சியை தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் லிமிடெட் (TIIC) கூடுதல் தலைமைச் செயலாளர் & CMD திரு ஹன்ஸ் ராஜ் வர்மா I.A.S தலைமை விருந்தினராகப் பங்கேற்று எக்ஸ்போவை இன்று தொடங்கி வைத்தார். இந்த எக்ஸ்போ 250 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சி யாளர்கள், 15,000 வணிக மற்றும் வர்த்தக பார்வையாளர்களை கலந்து கொள்கின்றனர்.
தற்போதைய பதிப்பு 21 துறை சார்ந்த சங்கங்களால் ஆதரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 25+ தயாரிப்புகள் அறிமுகம் மற்றும் தானியங்கி பொருட்கள் & ஃபேப்ரிகேஷன் பற்றிய திறந்த தள விளக்கக்காட்சி நடைபெறுகின்றது.
திரு கமல் பாலி, தலைவர், CII தெற்கு மண்டலம் மற்றும் தலைவர் & நிர்வாக இயக்குனர், வோல்வோ குரூப் இந்தியா பிரைவேட் லிமிடெட்; திரு ஸ்ரீ வத்ஸ் ராம், துணைத் தலைவர், சிஐஐ தமிழ்நாடு மற்றும் நிர்வாக இயக்குநர், வீல்ஸ் இந்தியா லிமிடெட்; டாக்டர் யு காமாட்சி முதலி, தலைவர், சர்ஃபேஸ் & கோட்டிங் எக்ஸ்போ 2023 & துணை அதிபர், ஹோமி பாபா தேசிய நிறுவனம் (HBNI); திரு ரமேஷ் ராமதுரை, நிர்வாக இயக்குனர், 3எம் இந்தியா லிமிடெட்; திரு பாரத் பூரி, பிடிலைட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக