ஹைக்கூவைக் கொண்டாடுவோம்!
கவிக்கோ நினைவைப் போற்றுவோம்!
*
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி 2023 பரிசளிப்பு விழாவும் கவிக்கோ நினைவு நாளும் வருகிற ஜூன் மாதம் 2 ஆம் நாள் சென்னை, தி.நகர் பிட்டி தியாகராஜர் அரங்கில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழ்க் கவிதை உலகின் மகத்தான கவிஞர்
கவிக்கோ அப்துல் ரகுமான் புகழ் போற்றுவதாகவும்,
ஹைக்கூ கவிதைத் திருவிழாவாகவும் நிகழ்ச்சிகள் அமையும்.
பரிசு பெற்ற ஹைக்கூ கவிஞர்கள், போட்டியில் பங்குபெற்றோர், மற்றும்
ஹைக்கூ ரசிகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரலை அழைப்பிதழில் காண்க.
*
அன்புடன்,
பிருந்தா சாரதி