மொத்தப் பக்கக்காட்சிகள்

2023-24 நிதி ஆண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 6.5- 6.7 சதவீதமாக உயரும்: சி.ஐ.ஐ தலைவர் தினேஷ்

2024–ம் நிதி ஆண்டில் இந்தியாவின்  மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 முதல் 6.7 சதவீதமாக உயரும்: இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் தினேஷ் தகவல்

சென்னை, ஜூன் 2, 2023:உள்நாட்டில் உள்ள தொழில் துறைகளின் வலிமையான ஆதரவு மற்றும் மத்திய அரசின் அதிவேக மூலதன செலவினம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 2024–ம் நிதி ஆண்டில் 6.5 முதல் 6.7 சதவீதமாக உயரும் என்று  இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் தினேஷ் தெரிவித்தார்.


மேலும் உலக அளவில் பல்வேறு சவாலான சூழல் நிலவியபோதிலும் இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அது நிலையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.



இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த தினேஷ் கூறுகையில்,
அரசின் மூலதன செலவானது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு உந்துசக்தியாக இருப்பதோடு, உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு பெருநிறுவனங்களின் ஆரோக்கியமான செயல்பாடுகள் மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட நிதி அமைப்பு ஆகியவையும் முக்கியமானதாக உள்ளது. மேலும் நடுத்தர கால வளர்ச்சி வாய்ப்புகள் ஆரோக்கியமானவை இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதைப் பற்றி விளக்கமாக கூறினார்.


நிதி மற்றும் பணவியல் கொள்கைகளுடன் கூடிய பல்வேறு  சீர்திருத்தங்களின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 6.6 சதவீதமாக இருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது நிதி ஆண்டு 2021 முதல் 2031 வரையிலான காலத்தில் 7.8 சதவீதமாக உயரும்.  மூலதன முதலீடுகள், மத்திய அரசின் ஜிஎஸ்டி, வரி விதிப்பு, உற்பத்தித்திறனை மேம்படுத்தும் சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை மற்றும் தனியார் துறைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்  நடுத்தர கால வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றார்.

 


மேலும் அவர் கூறுகையில், "வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு, வணிக நிறுவனங்களுக்கு இடையே மற்றும் ஊடகம் உட்பட வணிகம் மற்றும் சமூகம் மற்றும் சமுதாயம் ஆகியவற்றுக்கு இடையே நம்பிக்கை உருவாக்கப்பட வேண்டும். தொழில்துறையில் நம்பிக்கையை வளர்த்தால் நல்ல வளர்ச்சி காண முடியும் என்றார்.

 

மேலும் எங்கள் கூட்டமைப்பு சார்பில் 'தரமான பணி 2.0' திட்டம்  செயல்படுத்தப்படும் என்று கூறிய அவர், 1998–ம் ஆண்டு எங்கள் கூட்டமைப்பின் முதல் தரப் பணி திட்டமானது அரசு பணித் தரநிலைகளை அமைக்க வழிவகுத்தது. தற்போது புதிய தர பணியானது உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப சிறப்பாக உருவாக்கப்படும். இம்முறை சுகாதார வசதிகள், சுற்றுலா மற்றும் பிற சேவைகள் உள்ளிட்ட சேவைகளுக்கான சிறந்த தரம் மற்றும் வரையறைகளை உருவாக்க இருக்கிறோம். நம்பிக்கையை வளர்ப்பது என்பது தரத்திற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இந்த முயற்சியானது தொழிற்துறை வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...