டிபிஎஸ் பேங்க் இந்தியா, நிதியாண்டு 2022-23-ல் வலிமையான வளர்ச்சி..!
சில்லறை வணிகம் மற்றும் கார்ப்பரேட் வங்கி ஆகிய இரண்டின் விரிவாக்கம் மற்றும் கிளைகள் எண்ணிக்கை அதிகரிப்பால் நிதி நிலை மேம்பட்டுள்ளது.
இந்தியா, 20 ஜூன் 2023 – டிபிஎஸ் பேங்க் லிமிடெட் (DBS Bank Ltd) -ன் முழுச் சொந்தமான துணை நிறுவனம் டிபிஎஸ் பேங்க் இந்தியா லிமிடெட் (DBS Bank India Limited) ஆகும். இந்த வங்கி, 2023 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளது. இந்த வங்கியின் நிகர லாபம் 2022-23-ம் நிதி ஆண்டில் 37% வளர்ச்சிக்கண்டு ரூ. 228 கோடியாக உள்ளது. இது முந்தைய 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ. 167 கோடியாக இருந்தது.
வங்கியின் வணிக வளர்ச்சி சிறப்பாக உள்ளது. ஒட்டு மொத்த டெபாசிட் வளர்ச்சி 25% ஆகவும் வாடிக்கையாளர் சொத்து வளர்ச்சி 10% ஆகவும் உள்ளது. வலுவான சில்லறை வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் வங்கிச் செயல்பாடுகளால் உந்தப்பட்டு, நிகர வருவாய் (Net revenue) ஆண்டுக்கு 16% அதிகரித்துள்ளது. 2022-23-ம் நிதி ஆண்டில் சொத்து தரம் (Asset quality) மேலும் மேம்பட்டுள்ளது. மொத்த மற்றும் நிகர வாராக் கடன்கள் (NPAs) முறையே 5.61% (2021-22-ல் 9.5%-லிருந்து) மற்றும் 1.17% (2021-22-ல் 1.61%-லிருந்து) ஆக குறைந்துள்ளது.
ஐந்தொகை (Balance Sheet) 32% வலுவான வளர்ச்சியை வெளிப்படுத்தியது, மொத்த சொத்துகள் ரூ.1.1 லட்சம் கோடியை எட்டி உள்ளது.
முக்கிய நிதி நிலை செயல்திறன் சிறப்பம்சங்கள்:
· வாடிக்கையாளர்கள் சொத்துகள்*, 2022-23-ம் நிதி ஆண்டில் 10% வளர்ச்சிக்கண்டு ரூ.50,701 கோடியாக உள்ளது. இது 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ.46,250 கோடியாக இருந்தது.
· நிகர வருவாய், 2022-23-ம் நிதி ஆண்டில் 16% வளர்ச்சிக் கண்டு ரூ.3,351 கோடியாக உள்ளது. இது 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ.2,892 கோடியாக இருந்தது.
· நிலைவான வருமானம் (நிகர வட்டி வருமானம் மற்றும் கட்டண வருமானம்), 2022-23-ம் நிதி ஆண்டில் 18% வளர்ச்சிக் கண்டு ரூ.3,068 கோடியாக உள்ளது.
· நிகர லாபம் (PAT), 2022-23-ம் நிதி ஆண்டில் ரூ.228 கோடியாக உள்ளது. இது 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ.167 கோடியாக இருந்தது.
· நிகர வாராக் கடன் விகிதம் 1.17% ஆக மேம்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 1.61% ஆக இருந்தது. மொத்த வாராக் கடன் விகிதம், 2022-23-ம் நிதி ஆண்டில் 5.61% ஆக மேம்பட்டுள்ளது. இது முந்தைய 2021-22-ம் ஆண்டில் 9.5% ஆக இருந்தது. இந்த மேம்பாடு காரணமாக, வாராக் கடன் ஒதுக்கீட்டு விகிதம் 87.7% ஆக உள்ளது.
· நிதி ஆண்டு 2022-23-ல் மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio) 15% ஆக உள்ளது. பொது பங்கு மூலதனம் டயர் 1 (CET1) 12.55% ஆக உள்ளது. .
டி.பி.எஸ் வங்கி இந்தியாவின் நிதி ஆண்டு 2022-23-க்கான நிதி நிலை முடிவுகள் குறித்து, டிபிஎஸ் பேங்க் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி சுரோஜித் ஷோம் (Surojit Shome, Managing Director & Chief Executive Officer, DBS Bank India) கூறும் போது, "நிதியாண்டு 2022-23-ல், முந்தைய லக்ஷ்மி விலாஸ் வங்கியின் இணைப்பின் மூலம் பெறப்பட்ட வணிகத்தின் ஒருங்கிணைப்பை நாங்கள் கணிசமாக முடித்தோம். தொழில்நுட்ப தளம், கிளை நெட்வொர்க் ஒருங்கிணைப்பு போன்ற செலவினங்கள் இந்த நிதியாண்டில் ஒரு முறை மற்றும் நடப்பு செலவுகளை உயர்த்தியது.
அதேநேரத்தில், ஒட்டுமொத்த செயல்திறன் அளவீடுகள் முந்தைய ஆண்டை விட சிறப்பாக இருந்தன. எங்கள் வணிகங்கள் அனைத்திலும் வலுவான வளர்ச்சியுடன், எங்கள் வணிக வேகம், சொத்து தரம் மற்றும் எங்கள் திறமையின் ஆழத்தை மேம்படுத்துவதில் அர்த்தமுள்ள முன்னேற்றங்களைத் தொடர்ந்து மேற்கொண்டோம். வலுவான டிஜிட்டல் திறன்களுடன் கூடிய விரிவாக்கப்பட்ட கிளை நெட்ஒர்க், எங்கள் எஸ்.எம்.இ (SME) மற்றும் நுகர்வோர் வணிகங்களை கணிசமாக அளவிடவும், எங்கள் தளத்தை மிகவும் திறம்பட மேம்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த நிதி செயல்திறனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்." என்றார்.
*Advances plus credit substitutes.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக