மொத்தப் பக்கக்காட்சிகள்

L & T லார்சன் & டூப்ரோ நிகர லாபம்: 2022-23 நிதி ஆண்டு, ரூ.10,000 கோடிக்கு மேல்; வளர்ச்சி 21%

 

L & T மார்ச் 31, 2023-ல் முடிவடைந்த காலத்திற்கான நிதி நிலை முடிவுகள்

பணி ஆணை வரத்து : 2022-23 நிதி ஆண்டு,
ரூ. 2  லட்சம் கோடிக்கு மேல் ,   வளர்ச்சி 19% ஆண்டு கணக்கில்

நிகர லாபம்: 2022-23 நிதி ஆண்டு,
ரூ.10,000 கோடிக்கு மேல்;    வளர்ச்சி    21% ஆண்டு கணக்கில்

பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்ட்
ரூ.24 வழங்க இயக்குநர் குழு பரிந்துரை
மும்பை, மே 10, 2023

லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) நிறுவனத்தின்  ஒருங்கிணைந்த வருவாய் மார்ச் 31, 20-ல் முடிவடைந்த நிதி ஆண்டில், 17% வளர்ச்சி கண்டு ரூ.183,341 கோடியாக உள்ளது. இது உள்கட்டமைப்பு (Infrastructure) திட்டங்கள் பிரிவில் ஒரு பெரிய  பணி ஆணையை (Order) செயல்படுத்தியது மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளின் (IT & TS) வலுவான வேக வளர்ச்சியால் சாத்தியமாகி இருக்கிறது. 2022-23 ஆண்டுக்கான சர்வதேச வருவாய் ரூ.68,787 கோடியாக அதிகரித்துள்ளது. இது மொத்த வருவாயில் 38%  

மார்ச் 31, 2023- ல் முடிவடைந்த காலாண்டில், ஒருங்கிணைந்த வருவாய் 10% வளர்ச்சியைப் பதிவு செய்து, ரூ. 58,335 கோடியாக உள்ளது. மார்ச் காலாண்டில் சர்வதேச வருவாயின் பங்களிப்பு 39% ஆகும். மார்ச் 31, 2023-ல் முடிவடைந்த நிதியாண்டிற்கான, வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) ரூ. 10,471 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 21% வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மார்ச் 31, 2023-ல் முடிவடைந்த காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 3,987 கோடியாக உள்ளது. இது 10% வளர்ச்சி ஆகும். நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, ஒரு பங்குக்கு  ரூ.24  இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது.

மார்ச் 31, 2023-ல் முடிவடைந்த நிதியாண்டில் இந்தக் குழுமத்தின் பணி ஆணை 230,528 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 19%  ஆரோக்கியமான வளர்ச்சி ஆகும். இந்த ஆண்டில், பொது இடங்கள், நீர் மின்சாரம் & சுரங்கங்கள், நீர்ப்பாசன அமைப்புகள், இரும்பு உலோகங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சார பரிமாற்றம் & விநியோகம் மற்றும் பாதுகாப்புத் துறைகள் போன்ற பல பிரிவுகளில் அதிக பணி ஆணைகள் பெறப்பட்டன. இந்த ஆண்டில் சர்வதேச பணி ஆணைகள் ரூ. 86,523 கோடிக்கு பெறப்பட்டது. இது மொத்த பணி ஆணை வரவில் 38% ஆகுமமார்ச் 31, 2023-ல் முடிவடைந்த காலாண்டில் பணி ஆணை வரத்து ரூ. 76,099 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட 3% வளர்ச்சியாகும். சர்வதேச  பணி ஆணைகள் வரத்து ரூ. 36,046 கோடியாகும். இது மொத்தம் பெறப்பட்ட பணி ஆணையில் வரத்தில் 47% ஆகும்.

இந்தக் குழுமத்தின் ஒருங்கிணைந்த பணி ஆணையின் மதிப்பு, மார்ச் 31, 2023 -ல் ரூ. 3,99,526 கோடியாக உள்ளது. இதில், சர்வதேச பணி ஆணைகளின் பங்களிப்பு 28% ஆகும். பணி ஆணையின் மதிப்பு ரூ. 3,99,526 கோடி என்பது 12% வளர்ச்சியைக் குறிக்கிறது. இது, மார்ச் 31, 2022 நிலவரப்படி 3,57,595 கோடியாக இருந்தது.

உள்கட்டமைப்பு திட்டப் பிரிவு: மார்ச் 31, 2023  உடன் முடிவடைந்த நிதியாண்டில், உள்கட்டமைப்பு திட்டப் பிரிவு, அதன் துணைப் பிரிவுகளில் ரூ.1,17,119 கோடி மதிப்புகளை, பல பெரிய மதிப்பு ஆர்டர்களைப் பெற்றது. இதன் மூலம், முந்தைய ஆண்டைக் காட்டிலும், 25% கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச ஆர்டர்கள் ரூ. 26,184 கோடி ஆகும். இது ஆண்டின் மொத்த ஆர்டர் வரவில் 22% ஆகும்.

எரிசக்தி திட்டங்கள் பிரிவு:மார்ச் 31, 2023-ல் முடிவடைந்த நிதியாண்டில் எரிசக்தி திட்டங்கள் (Energy Projects segment) பிரிவில் 30,750 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களைப் பெற்றது. முக்கியமாக அனல் மின் நிலைய வணிகத்தில் டெண்டர் நடவடிக்கையால் 5%  குறைவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சர்வதேச ஆர்டர் வரத்து, மொத்த ஆர்டர் வரவில் 61% ஆகும்.

உயர் தொழில்நுட்ப (Hi-Tech) உற்பத்திப் பிரிவு: மார்ச் 31, 2023-ல் முடிவடைந்த நிதியாண்டில் உயர் தொழில்நுட்ப (Hi-Tech) உற்பத்திப் பிரிவு 15,762 கோடி ரூபாய் ஆர்டர்களைப் பெற்றது. இது முந்தைய ஆண்டை விட 39% கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்தது. பெரிய மதிப்பு ஆர்டர்களை டிஃபென்ஸ் இன்ஜினியரிங் வணிகம் பெற்றுள்ளது. ஏற்றுமதி ஆர்டர்கள், மொத்த ஆர்டர் வரவில் 17% ஆகும்.

LTIMindtree லிமிடெட்: 2022-23-ம் நிதியாண்டில், லார்சன் & டூப்ரோ இன்ஃபோடெக் லிமிடெட் மற்றும் மைண்ட்ட்ரீ லிமிடெட் (Larsen & Toubro Infotech Limited and Mindtree Limited) ஆகியவை தங்கள் இணைப்பை வெற்றிகரமாக முடித்து, ஒன்றிணைக்கப்பட்ட நிறுவனமாக செயல்படத் தொடங்கியது.  LTIMindtree லிமிடெட் நவம்பர் 14, 2022 முதல் செயல்பட தொடங்கியது. மார்ச் 31, 2023-ல் முடிவடைந்த ஆண்டில், இந்த பிரிவு வாடிக்கையாளர் வருவாய் ரூ.40,737 கோடியாக உயர்ந்துள்ளது.இது 26% வலுவான வளர்ச்சி ஆகும். இது தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான தேவையைப் பிரதிபலிக்கிறது.

மார்ச் 31, 2023 இல் முடிவடைந்த ஆண்டிற்கான பிரிவின் மொத்த வாடிக்கையாளர் வருவாயில் சர்வதேச ஆர்டர் 93% பங்களித்தது. இந்த பிரிவில் பட்டியலிடப்பட்ட இரண்டு துணை நிறுவனங்களின் (LTIMindtree மற்றும் L&T டெக்னாலஜி சர்வீசஸ்) மொத்த வருவாய்  5,095 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 16% ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.  மார்ச் 31, 2023 -ல் முடிவடைந்த காலாண்டில் இந்தப் பிரிவு வாடிக்கையாளர் வருவாய் ரூ.10,645 கோடியாக உயர்ந்துள்ளது. இது 21% வளர்ச்சி ஆகும்.

மொத்த வாடிக்கையாளர் வருவாயில் சர்வதேச பில்லிங்  93% பங்களித்தது.அமெரிக்க டாலர் அடிப்படையில், காலாண்டில் பிரிவின் வருவாய் 1,313 மில்லியன் ஆகும். இது முந்தைய ஆண்டை விட 12% வளர்ச்சியாகும்.

நிதிச் சேவைகள் பிரிவு: பட்டியலிடப்பட்ட துணை நிறுவனமான எல்&டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸின் (L&T Finance Holdings-LTFH) செயல்திறனை இந்தப் பிரிவு பிரதிபலிக்கிறது. மார்ச் 31, 2023 -ல் முடிவடைந்த ஆண்டில், இந்தப் பிரிவு செயல்பாடுகளின் மூலம் ரூ.12,575 கோடி கிடைத்துள்ளது. இது 5% வளர்ச்சி ஆகும். முக்கியமாக கவனம் செலுத்தப்பட்ட சில்லறை கடன்களின் அதிக விநியோகம் காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மார்ச் 31, 2023-ல் முடிவடைந்த காலாண்டில் இந்தப் பிரிவு செயல்பாடுகளின் மூலம் 3,116 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது 5% வளர்ச்சி ஆகும்.
மேம்பாட்டுத் திட்டப் பிரிவு; மார்ச் 31, 2023  உடன் முடிவடைந்த நிதியாண்டில், மேம்பாட்டுத் திட்டப் பிரிவு (Development Projects Segment) வாடிக்கையாளர்களின் வருவாய் ரூ.5,024 கோடியாக உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 15% ஆரோக்கியமான வளர்ச்சி ஆகும். இது நபா மின் உற்பத்தி நிலையத்தின் அதிக PLF மற்றும் ஹைதராபாத் மெட்ரோவில் பயணிகளின் அதிகரிப்பு ஆகியவற்றால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மார்ச் 31, 2023-ல் முடிவடைந்த காலாண்டில், வாடிக்கையாளர் வருவாய், 12% உயர்ந்து ரூ. 1,229 கோடியாக உள்ளது.

 இதர பிரிவு:  இதர பிரிவில் (அ) ரியல் எஸ்டேட் (ஆ) தொழில்துறை வால்வுகள் (இ) ஸ்மார்ட் வேர்ல்ட் மற்றும் கம்யூனிகேஷன் (எஸ்டபிள்யூசி) வணிகம் (ஈ) கட்டுமான உபகரணங்கள் மற்றும் சுரங்க இயந்திரங்கள் மற்றும் (இ) ரப்பர் செயலாக்க இயந்திரங்கள் ஆகியவை அடங்கும்.

மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த  நிதியாண்டில் வாடிக்கையாளர் வருவாய் ரூ. 6,845 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15% ஆரோக்கியமான வளர்ச்சி ஆகும். முதன்மையாக அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை அதிக அளவில் ஒப்படைத்தல் மற்றும் ரியல் எஸ்டேட் வணிகத்தில் வர்த்தகச் சொத்து விற்பனை மற்றும் கட்டுமான உபகரணங்கள் மற்றும் ரப்பர் செயலாக்க இயந்திர வணிகத்தில் மேம்பட்ட தேவை ஆகியவற்றால். ஏற்றுமதி விற்பனையானது ஆண்டின் மொத்த வாடிக்கையாளர் வருவாயில் 8% ஆகும். இது முக்கியமாக தொழில்துறை வால்வுகள் மற்றும் ரப்பர் செயலாக்க இயந்திர வணிகங்களுடன் தொடர்புடையதாகும். மார்ச் 31, 2023-ல் முடிவடைந்த காலாண்டில் இந்தப் பிரிவின் வாடிக்கையாளர் வருவாய், 14% வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.2,073 கோடியாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி விற்பனை மொத்த வாடிக்கையாளர் வருவாயில் 9%  ஆக உள்ளது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...