இந்தியன் வங்கியில் சப்ளை செயின் ஃபைனான்ஸ் (SCF) அறிமுகம்,
அதன் தற்போதைய டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துகிறது..!
சென்னை, மே 10, 2023: இந்தியன் வங்கியின் (Indian Bank) நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி (MD & CEO), திரு. எஸ்.எல் ஜெயின் (Shri. S.L Jain), இன்று வங்கியின் செயல் இயக்குநர்களான (Executive Directors) திரு. இம்ரான் அமின் சித்திக், திரு. அஷ்வனி குமார், திரு. மகேஷ் குமார் பஜாஜ் மற்றும் திரு. அசுதோஷ் சவுத்ரி மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் வங்கியின் டிஜிட்டல் தளத்தின் (Digital Platform), சப்ளை செயின் ஃபைனான்ஸ் (Supply Chain Finance - SCF) வசதியை சென்னையில் அறிமுகப்படுத்தினார்.
சப்ளை செயின் ஃபைனான்ஸ் வசதி என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் விற்பனையாளர்கள் / டீலர்களுக்கு குறுகிய கால செயல்பாட்டு மூலதனக் கடன் (short-term working capital finance) வழங்குவதாகும். எஸ்.சி.எஃப் தளத்தின் மூலம் கடன் வழங்குவது, வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் வங்கி ஆகியவை ஒரே தளத்தில் இருப்பதன் மூலம் முன்பே ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் தடையற்ற பரிவர்த்தனையை எளிதாக்குகிறது..
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் டீலர்கள் மற்றும் சப்ளையர்கள், பெரும்பாலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (Micro, Small & Medium Enterprises – MSME) பிரிவைச் சேர்ந்தவர்கள், இந்த டிஜிட்டல் கடன் வழங்கும் தளத்தின் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இந்தக் கடன் உதவி அவர்களின் வணிக வளர்ச்சியை அதிகரிக்கும். சாதகமான விதிமுறைகள் மற்றும் குறைவான வட்டியில் செயல்பாட்டு மூலதனக் கடனை நிதியை எளிதாக பெற முடியும்.
இந்தியன் வங்கி, எஸ்.சி.எஃப் தளத்துடன் பல டிஜிட்டல் வசதிகளையும் தொடங்கி உள்ளது.
காகிதமில்லா டிஜிட்டல் சேமிப்பு வங்கி கணக்கு திறப்பு, ஆதித்ய பிர்லா சன் லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசி மீது ரூ. 10.00 லட்சம் வரையிலான ஓவர் டிராஃப்ட் கடன் வசதி, ஏற்கெனவே வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நகைக் கடன், மற்றும் எம்.எஸ்.எம்.இ வாடிக்கை நிறுவனங்களுக்கு, ஃடெபாசிட்கள் மீது ஓவர் டிராஃப்ட் கடன் (Over-Draft Against Deposits – ODAD) வசதி போன்ற டிஜிட்டல் வசதிகள் இன்று தொடங்கப்பட்டன. இந்தியன் வங்கி, வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் ஆவண செயலாக்கத்துடன் முன்-அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன் (Pre-Approved Personal Loan- PAPL) ரூ. 5.00 லட்சம், IndOASIS, இணையதளம் மற்றும் இணைய வங்கி மூலம் ரூ.10.00 லட்சம் வரை கடன் அட்டை (Credit Card) வசதி ஆகியவற்றை அளிக்கிறது.
காசோலைப் புத்தகக் கோரிக்கை, டெர்ம் டெபாசிட் கணக்குத் திறப்பு, படிவம் 15G/H சமர்ப்பித்தல், நாமினி நியமன வசதி மற்றும் ஜன் சுரக்ஷா திட்டங்களில் பதிவு செய்தல் ஆகியவற்றுடன் டேப் வங்கிச் சேவைகள் (Tablet Banking services) மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இறப்பு உரிமைகோரல்களை சமர்ப்பிப்பதற்கான செயலாக்குவதற்கும் வசதியாக ஓர் இணைய தளத்தையும் (Portal) இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக