சென்னையில் தனது நான்காவது உற்பத்தி தொழிலகத்தை தொடங்கும் நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ்
- டிசம்பர், 2023-க்குள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 4500 புதிய பணியாளர்களை பணிக்கு சேர்க்கவிருப்பதை அறிவித்திருக்கிறது
- "சீரீஸ் 3 மேக்ஸ்" - தனது சமீபத்திய, புதிய ஹோம் லிஃப்ட் தயாரிப்பினை அறிமுகம் செய்திருக்கிறது
சென்னை, 08 மே, 2023: 2024 டிசம்பர் மாத இறுதிக்குள் பில்லியன் டாலர் பெருமானமுள்ள நிறுவனமாக வளர்ச்சியடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்துவரும் இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் லிஃப்ட் பிராண்டான நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ் (NIBAV Home Lifts), ஹோம் லிஃப்ட்ஸ் உற்பத்திக்கான தனது இந்திய செயல்பாடுகள் விரிவாக்கப்படுவதை இன்று மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறது.
சென்னை மாநகரின் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி அமைந்துள்ள 'அக்கரை' பகுதியில், 50,000 சதுரஅடி பரப்பளவில் தனது நான்காவது உற்பத்தி தொழிலகம் தொடங்கப்படுவதை இந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. உலகின் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு நவீனமான புதிய ஹோம் எலிவேட்டர் (இல்லங்களுக்கான மின்தூக்கி) தயாரிப்பு தொழிலகம் இங்கு அமையவிருக்கிறது.
ஐரோப்பிய தரநிலைகளுக்கேற்ப இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹோம் லிஃப்ட்களை 14 வெளிநாடுகளை உள்ளடக்கி சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் சந்தைக்கு அதிக அளவில் அனுப்புவதற்கு, இந்த கூடுதல் உற்பத்தித்திறன் நிபவ் நிறுவனத்திற்கு உதவும். அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் பிரதான சந்தையாக இந்தியா தொடர்ந்து இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக