விடுமுறை சம்பள வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்வு..!
தனியார் துறை ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் போது தாங்கள் சேமித்து வைத்த விடுமுறை நாட்களை பணமாக பெறும் (leave encashment) வசதி உள்ளது
இதற்கு ரூ. 3 லட்சம் வரை வரி விளக்கு அளிக்கப்பட்டது. இந்த உச்சவரம்பு கடந்த 2002 ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டது ஆகும்
விடுமுறை சம்பள உச்ச வரம்பை ரூ. 25 லட்சமாக உயர்த்த மத்திய பட்ஜெட் 2023- 24 இல் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்தார். .இந்தச் சலுகை 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது..
தனியார் துறை ஊழியர்கள் அவர்களின் வாழ்நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்து பெறும் விடுமுறை சம்பளத்துக்கு அதிகபட்சம் ரூ 25 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும் அதற்கு மேற்படும் தொகைக்கு அந்த பணியாளர் எந்த அடிப்படை வருமான வரி வரம்பில் (பழைய வரி வரம்பில் 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக