கிரெடாய் தமிழ்நாடு மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
ü திரு.ஆர்.இளங்கோவன், தலைவர், கிரெடாய் தமிழ்நாடு & தலைவர், விஷால் ப்ரோமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், மதுரை
ü திரு.மதன் பி லண்ட், துணைத் தலைவர் கிரெடாய் தமிழ்நாடு & இயக்குநர், ஸ்ரீவாரி இன்ஃப்ராஸ்ரக்சர் பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூர்
ü திரு.எஸ்.ஆனந்த், செயலாளர், கிரெடாய் தமிழ்நாடு & நிர்வாக பங்குதாரர், ஜெயம் பில்டர்ஸ், திருச்சி
ü திரு.வி.சதாசிவம், பொருளாளர், கிரெடாய் தமிழ்நாடு & தலைவர், கிரீன்ஃபீல்ட் ஹவுசிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஈரோடு
சென்னை, மே 4– 2023: கிரெடாய் தமிழ்நாடு மண்டலத்தின், 2023-2025 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் கிரெடாய் தமிழ்நாட்டின் புதிய நிர்வாக குழுவின் பதவி ஏற்பு விழா மே 3–ந்தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்த அமைப்பின் 7வது தலைவராக ஆர். இளங்கோவன் பதவி ஏற்றார். அவருடன் துணைத் தலைவராக மதன் பி.லண்ட், செயலாளராக எஸ்.ஆனந்த், பொருளாளராக வி. சதாசிவம் மற்றும் தேர்வுத் தலைவராக டபிள்யூ.எஸ். ஹபிப் ஆகியோர் பதவி ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்பி.கே.சேகர் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கவுரவ விருந்தினர்களாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா ஐ.ஏ.எஸ்., சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ், டிடிசிபி இயக்குனர் பி. கணேசன் ஐ.ஏ.எஸ். மற்றும் கிரெடாய் நேஷனல் தெற்கு துணைத் தலைவர் எஸ். ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய தலைவராக பதவி ஏற்ற இளங்கோவன் கூறுகையில், எங்களின் செயல்பாடுகள் தமிழக அரசின் நடவடிக்கைகளுடனும், தொழில்துறை மற்றும் அரசாங்க நடைமுறைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவது தொடர்பாகவும், மாநில அரசின் ரியல் எஸ்டேட் தொலைநோக்கு பார்வை 2030 உடன் ஒருங்கிணைந்து இருக்கும். மேலும் குறிப்பாக எங்கள் அமைப்பு, ரியல் எஸ்டேட் துறையில் நிலையான வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
கிரெடாய் என்னும் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு 1999–ல் துவக்கப்பட்டது. இது இந்தியாவில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனங்களின் உச்ச அமைப்பாகும், இது இந்திய ரியல் எஸ்டேட் துறையின் செயல்பாடுகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 230 நகரங்களில் செயல்பட்டு வரும் கிரெடாய் அமைப்பில் மொத்தம் 13,300 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த அமைப்பின் தலைமையகம் சென்னையில் உள்ளது. சென்னை தவிர இதன் மண்டல அலுவலகங்கள் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, ஈரோடு, திருநெல்வேலி, தர்மபுரி, ஓசூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. கிரெடாய் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தற்போது இதில் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.