மொத்தப் பக்கக்காட்சிகள்

டி.பி.எஸ் பேங்க் இந்தியா & இந்தியாஃபைலிங்ஸ் இந்தியாவில் ஸ்டார்ட்-அப்கள்களை மேம்படுத்துகிறது Start-ups


டி.பி.எஸ் பேங்க் இந்தியா மற்றும் இந்தியாஃபைலிங்ஸ் இணைந்து இந்தியாவில் ஸ்டார்ட்-அப்கள் மற்றும் எஸ்எம்இகளை மேம்படுத்துகிறது
 
இணை பிராண்டட்  இணைய தளம் மூலம், டிபிஎஸ் பேங்க் இந்தியா, வணிக நிறுவனங்கள் தங்கள் நிதியை நிர்வகிக்க உதவும் விரிவான நிதித் தீர்வுகளை வழங்கும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 16,000 முதல் 25,000 புதிய எம்.எம்.-கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களுக்கு இந்தத் தளம் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்தியாவில் ஸ்டார்ட்-அப்கள் (Start-ups)  மற்றும் சிறு வணிகங்களுக்கான முன்னணி தளமான இந்தியாஃபைலிங்ஸ் (IndiaFilings) உடனான தனது கூட்டுத் திட்டத்தை டி.பி.எஸ் பேங்க் இந்தியா அறிவித்துள்ளது. புதிய நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு இணை பிராண்டட் போர்ட்டல் (Co-branded Portal) மூலம்  அனைத்து நிதிச் சேவைகளை வழங்க இந்தக் கூட்டுத் திட்டம் வங்கிக்கு உதவும். மதிப்பு மிக்க சேவைகளை வழங்குவதற்கான புதிய வழிகளைக் கண்டறியும் அதே வேளையில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு லாபகரமாகச் சேவை செய்வதில் இந்த நிறுவனங்கள் தங்கள்  உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்தியாவில் புதிய வணிக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களாக, நிறுவனத்தை நிறுவுதல் (incorporation), ஜிஎஸ்டி பதிவு, நிதி மேலாண்மை மற்றும் செயல்பாடுகள் தொடர்பான உள்கட்டமைப்பை அமைத்தல், பிராண்ட் மதிப்பை உருவாக்குதல் மற்றும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கூட்டாளர்களை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை அணுகுதல் ஆகியவை உள்ளன. இவற்றில் அதிக விழிப்புணர்வு தேவையாக உள்ளது.

கோ-பிராண்டட் போர்ட்டல் மூலம்,  டிபி.எஸ் பேங்க் இந்தியா மற்றும்  இந்தியாஃபைலிங்ஸ் நிறுவனம் ஆகியவை ஸ்டார்ட்-அப்களுக்கு ஓர் இலவச நிறுவன நிறுவுதல் செயல்முறையை வழங்குகிறது.  மேலும் அவற்றின் நிறுவுதல் செலவுகளில் 100% அதாவது ரூ. 8,000 வரை திரும்ப வழங்கப்படுகிறது.

கூடுதலாக, டி,பி,எஸ் வணிகக் கணக்குடன் புதிய நிறுவனங்கள் மற்றும்  ஊழியர்களுக்கு அனைத்து நிதிச் சேவைகளும் இணை பிராடெண்ட் போர்ட்டல் மூலம் வழங்கப்படுகிறது. வணிகம் சார்ந்த நிதி மற்றும் பணியாளர் செலவுகளை நிர்வகிக்க உதவும் விரிவான தீர்வுகள் இதில் அடங்கும். கோ-பிராண்டட் போர்டல் இப்போது செயல்பாட்டில் உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும்  சுமார் 16,000 முதல் 25,000 புதிய எம்.எம்.இகள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிபிஎஸ் வங்கியின் செயல் இயக்குநர் மற்றும் வணிக வங்கித் தலைவர் சுதர்சன் சாரி (Sudarshan Chari, Executive Director & Head Business Banking, DBS Bank India) கூறியதாவது:,"இந்தியாவின் வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பு அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4-5% பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்தத் துறை சமீபத்தில் 2 மற்றும் 3-ம் நிலை சந்தைகளிலிருந்து அதிகரித்து வரும் பங்கேற்பை கொண்டுள்ளது. எங்களின் நிதி நிபுணத்துவம் மற்றும் இந்தியாஃபைலிங்ஸ் நிறுவனத்தின் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை இணைப்பதன் மூலம், இன்றைய சிக்கலான மற்றும் போட்டி நிறைந்த வணிக  உலகில் சிறப்பாக செயல்பட தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்தக் கூட்டு திட்டமானது, இந்தியாவில் தொழில் முனைவோரை  ஊக்கப்படுத்துவதற்கும், வணிக உரிமையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தடையற்ற, தொந்தரவு இல்லாத வங்கித் தீர்வுகளை வழங்குவதற்கும் எங்களின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது." என்றார்.
 
நிறுவனத்தின் கேப் டேபிள் அட்டவணை மேலாண்மை, பணியாளர் நல தீர்வுகள், பணியாளர் ஊதிய அமைப்பு மற்றும் இது போன்ற வங்கி அல்லாத தீர்வுகளையும் இந்த போர்டல் வழங்கும். இந்தக் கூடுதல் சேவைகள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும், அவர்களின் செயல்திறனை மேம்படுத்தவும் மற்றும் அவர்களின் முக்கிய வணிக நோக்கங்களில் கவனம் செலுத்த நேரத்தையும் வளங்களையும் விடுவிக்கும்.  அதேநேரத்தில் அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும் எனலாம்.

இந்தியாஃபைலிங்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் & முதன்மை செயல் அதிகாரி  லியோனல் சார்லஸ் (Lionel Charles, Founder & CEO, IndiaFilings) கூறும் போது, "இந்தியாஃபைலிங்ஸ் நிறுவனத்தில் எங்களின் பணி எப்போதும் தொழில்முனைவோருக்கான வணிகங்களைத் தொடங்குதல் மற்றும் நிர்வகித்தல் செயல்முறையை எளிதாக்குவதாக உள்ளது. ஆரம்பத் தடைகளைத் தாண்டி,  வணிகத்தை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல உதவும் விரிவான நிதிச் சேவைகளை ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வழங்க டி.பி.எஸ் பேங்க் இந்தியாவுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

டி.பி.எஸ் பேங்க் இந்தியாவின் நிபுணத்துவம் மற்றும் தொந்தரவு இல்லாத தீர்வுகள் மூலம், புதிய வணிக நிறுவனங்கள் தங்கள் லட்சியங்களை உணரவும், இந்தியாவின் துடிப்பான ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலுக்கு பங்களிக்கவும் நாங்கள் உதவ முடியும் என்பதில் உறுதியாக உள்ளோம்." என்றார்.
 
டிபிஎஸ் பேங்க் இந்தியா, முழு அளவிலான நுகர்வோர், எஸ்எம்இ மற்றும் கார்ப்பரேட் வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்தப் புதிய கூட்டானது, பாரம்பரிய வங்கித் தொழிலுக்கு அப்பால் வங்கியின் சேவைகளை விரிவுபடுத்தும். மேலும் எஸ்எம்இகள் மற்றும் எம்எஸ்எம்இகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். கடன்கள் மட்டுமின்றி ஊதிய மேலாண்மை, பண மேலாண்மை, காப்பீடு மற்றும் மூன்றாம் தரப்பு திட்டங்கள் போன்ற சேவைகளையும் வழங்கும்.
 
இந்தியாவின் நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட் அப்களை ஆதரிப்பதற்கான அதன் நோக்கத்துக்கு ஏற்ப, டிபிஎஸ் பேங்க் இந்தியா கடந்த ஆண்டு ஸ்டார்ட்அப் வென்ச்சர் கேப்பிட்டல் ஃபண்ட் ஆன்டில் வென்ச்சர்ஸ் (Anthill Ventures) மற்றும் எவாஞ்சலிஸ்ட் நெட்வொர்க் ஹெட்ஸ்டார்ட் நெட்வொர்க் ஃபவுண்டேஷன் (Evangelist network Headstart Network Foundation) உடன் இணைந்து டிபிஎஸ் பிசினஸ் கிளாஸ் ஃபவுண்ட்ஈடி (DBS Business Class foundED)  நிறுவப்பட்டது. மேலும் நிலையான வணிகங்களாக மாறுவதற்கு விரும்பும்  எஸ்எம்இகளை ஆதரிப்பதற்காக ஒரு புதிய மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும் டி.பி.எஸ் பேங்க் அறிவித்தது.
 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...