இந்தியா ஃபைலிங்ஸ் பற்றி (About IndiaFilings):
இந்தியாஃபைலிங்ஸ் (IndiaFilings) என்பது இந்தியாவில் தொழில் முனைவோரின் பயணத்தை எளிதாக்க தொடங்கப்பட்ட ஆன்லைன் ஆலோசனை இணைய தளம் (Online Consulting Web Portal) கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வணிக அனுபவத்தை மேம்படுத்தவும் திறமையாக வளரும் அமைப்பை இயக்கவும் இந்த நிறுவனம் ஏராளமான சேவைகளை வழங்குகிறது. இந்த நிறுவனத்துக்கு 1,00,000-க்கு மேலான விசுவாசமான வாடிக்கையாளர்கள் இருப்பதால் இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ள்ளது.
இந்த நிறுவனத்துக்கு 170+ நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் பரவியுள்ள வல்லுநர்களின் வலுவான நெட்வொர்க் உள்ளது. அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் பயனர்களுக்கு சேவை செய்ய உதவியுள்ளனர். தற்போது 7 பெரிய அலுவலகங்களில் 800-க்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட குழு உள்ளது. ஏறக்குறைய அனைத்து இந்திய மொழிகளும் சரளமாகத் தெரிந்த உறுப்பினர்கள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளனர்.
ஜிஎஸ்டி சேவைகள், அறிவுசார் சொத்து (Intellectual Property), வருமான வரிக் கணக்குத் தாக்கல், கணக்கியல் மற்றும் இணக்கம் (Accounting and Compliance) மற்றும் பல சேவைகளை அளிக்கிறது. இவற்றின் மூலம் தொழில்முனைவோரின் வளர்ச்சியைப் பூர்த்தி செய்யும் பரந்த அளவிலான சேவைகள் இந்த நிறுவனத்திடம் உள்ளது.
ஃப்ளிப்கார்ட் (Flipkart) போன்ற எங்கள் வாடிக்கையாளர்கள் இந்தச் சேவைகளை பல்வேறு தரப்பினருக்கும் வழங்க எங்களுக்கு உதவுகிறது. வணிக நிறுவனங்கள் வழங்கும் திட்டங்கள் மற்றும் சேவைகளில் வாடிக்கையாளர்கள் மதிப்பைக் கண்டால், வணிகம் செழிக்கும் என்று இந்த நிறுவனம் நம்புகிறது. வாடிக்கையாளர்கள் ஒரு வணிகத்தில் மதிப்பைக் காணவில்லை என்றால், ஒரு வணிகம் மூடப்படும். எனவே, வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை வளர்ப்பதில் இந்த நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஐசிஐசிஐ பேங்க், BEENEXT, UDTARA வென்ச்சர்ஸ் மற்றும் CreedCap போன்ற புகழ்பெற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கை நிறுவனங்களான உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக