மொத்தப் பக்கக்காட்சிகள்

வர்த்தக ரியல் எஸ்டேட் பிரிவில் நுழையும் காசாகிராண்டு;காசாகிராண்டு கமர்ஷியல் casagrand camercial

 வர்த்தக ரியல் எஸ்டேட் பிரிவில் நுழையும் காசாகிராண்டு;காசாகிராண்டு கமர்ஷியல் எனும் புதிய வர்த்தக பிரிவு  உருவாக்க திட்டமிட்டிருக்கிறது

---

 

சென்னை: 21 மார்ச் 2023: காசாகிராண்டு கமர்ஷியல் என்ற பெயரில் புதிய பிரிவு தொடங்கப்படுவதை பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்டு அறிவித்திருக்கிறது.  இதன்மூலம் வர்த்தக ரியல்எஸ்டேட் பிரிவில் இந்நிறுவனம் கால்பதிக்கிறது.  காசாகிராண்டு குழும நிறுவனங்களில் மற்றுமொரு புதிய நிறுவனமாகத் தொடங்கப்பட்டிருக்கும் இது அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.8000 கோடி முதலீடு செய்ய திட்டங்கள் வகுத்திருக்கிறது

 

ஐடி/ஐடிஇஎஸ் (IT/ITes) கட்டிடங்கள்பணியமைவிடங்கள்ரீடெய்ல் மால்கள்தனிப்பட்ட ரீடெய்ல் அமைவிடங்கள் உட்படஉலகத் தரத்தில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வர்த்தக ரீதியிலான கட்டிட அமைவிடங்களை 2027-ம் ஆண்டிற்குள் 10 மில்லியன் ச.அடி பரப்பளவில் உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதுஆண்டுக்கு ரூ.900 கோடி வாடகை வருவாய் ஈட்டும் சாத்தியம் கொண்டதாக இந்த அமைவிடங்கள் இருக்குமென மதிப்பிடப்பட்டிருக்கிறது.   சென்னையில் மில்லியன் ச.அடி பரப்பளவில் வர்த்தக அமைவிட திட்டத்தை தொடங்க தயார்நிலையிலிருக்கும் இந்நிறுவனம், 100 ஏக்கர் பரப்பளவுள்ள நிலப்பரப்பை மிக விரைவில் கைவசப்படுத்த திட்டமிட்டிருக்கிறது.  மொத்த முதலீட்டில் 40% அளவிற்கு பெங்களூருஹைதராபாத் மற்றும் பிற பெருநகரங்களிலும் வர்த்தக அமைவிட செயல்திட்டங்களை காசாகிராண்டு கமர்ஷியல் உருவாக்கவிருக்கிறது

 

தென்னிந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் தனிச்சிறப்பான இடத்தைக் கொண்டிருக்கும் இந்நிறுவனம்நவீன கருத்தாக்கங்களையும்புதுமையான அம்சங்களையும் உள்ளடக்கிய முதன்மையான பல வீட்டுவசதி திட்டங்களை உருவாக்கி ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.  வாடிக்கையாளர்களுக்கு மதிப்புதிட்டமிட்டவாறு உரிய நேரத்தில் பணி நிறைவு செய்து டெலிவரிதனித்துவ அம்சங்கள் கொண்ட திட்டம்சிறப்பான வசதிகள் மற்றும் காசாகிராண்டின் செழுமையான பாரம்பரியம் என்ற 5 வலுவான தூண்களின் மீது இந்த பிசினஸ் மாடலையும் கட்டமைப்பதன் மூலம் அதே திசையில் துடிப்போடு பயணிக்கும் மற்றுமொரு புதிய செயல்பாடாக காசாகிராண்டு கமர்ஷியல் திகழும் என்பது நிச்சயம்.

 

திட்ட உருவாக்கம்கொள்முதல்பொறியியல்விற்பனைசந்தைப்படுத்தல்நிதிநிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை காசாகிராண்டு கமர்ஷியல் தன்னோடு இணைத்துக் கொண்டிருக்கிறது.  புதுமையான செயல்திட்டங்களை உருவாக்குவதற்காக திறனும்அனுபவமும் மிக்க ஆலோசகர்களையும் இந்நிறுவனம் நியமனம் செய்திருக்கிறது.  சரியான விலையில் உருவாக்கப்பட்டுகுறிப்பிட்ட நேரத்திற்குள் வாடகைதாரர்கள் / வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படவிருக்கும் இந்த வர்த்தக ரீதியிலான கட்டிட வளாகங்கள்அவர்களுக்கு சிறந்த மதிப்பையும்வருவாயையும் வழங்கும்

 

விசாலமானபசுமைப்பரப்புகள் நிறைந்த மற்றும் உலகத்தரத்திலான வசதிகளுடன் கண்களையும்மனதையும் கவரும் அழகான அம்சங்களும்நிலைப்புத்தன்மையும் கொண்ட கட்டிட வளாகங்களை காசாகிராண்டு கமர்ஷியல் உருவாக்கவிருக்கிறது.  ஸ்மார்ட் தீர்வுகளையும்மேம்பட்ட தானியக்க வசதிகளையும் வழங்கும் எதிர்காலத்திற்குரிய நவீன அணுகுமுறையோடு இவ்வர்த்தக வளாகங்கள் உருவாக்கப்படும்.  மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் மற்றும் திறம்பட பணியாற்றவதற்குரிய அலுவலக அமைவிடங்களையும் இச்செயல்திட்டங்கள் வழங்கும்.  LEED, WELL மற்றும் பிற முக்கியமான சான்றிதழ்கள் பெற்ற செயல்திட்டங்களாக இவைகளை உருவாக்க காசாகிராண்டு கமர்ஷியல் திட்டமிட்டிருக்கிறது

 

சர்வதேச தரநிலைகளுக்கு நிகராக வடிவமைக்கப்படும் அனைத்து வர்த்தக அமைவிடங்களும்இங்கு பணியாற்றுகின்றவர்த்தகம் மற்றும் தொழில் செயல்பாடுகளில் ஈடுபடுகிறவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்படும்.  தினசரி வாழ்க்கையில் வசதியையும்மனநிறைவையும்நிம்மதியையும் மேம்படுத்தும் வகையில் வசிக்கவும்பணியாற்றவும்விளையாடவும் உரிய அமைவிடங்களாக இவைகள் திகழும்.  ஸ்பாஉள்ளரங்க விளையாட்டறைகள்காஃபி கார்னர்உடற்பயிற்சிக் கூடும்லவுஞ்ச் மற்றும் இன்னும் பல உலகத் தரத்திலான அம்சங்கள் இவ்வர்த்தக வளாகங்களில் இடம்பெறவிருக்கின்றன.  குத்தகைதாரர்கள் / வாடகைதாரர்களின் பணி / வர்த்தக அமைவிடங்கள் அவர்களது தேவைகளுக்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும்

 

இந்திய ரியல்எஸ்டேட் துறையில் கடந்த 18 ஆண்டுகளாக மக்கள் மனதில் நிலையான இடம்பிடித்த சிறப்பான பிராண்டாக இருந்து வரும் காசாகிராண்டுசந்தையின் தேவைக்கேற்ப நிகரற்ற சேவைகளை வழங்கி இக்காலகட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கிறது.  சிறந்த விலையில் உயர்வான வீட்டுவசதி திட்டங்களை நேர்த்தியாக உருவாக்கி வழங்கும் நிறுவனம் என பெயர் பெற்றிருக்கும் காசாகிராண்டுதனது சிறப்பான பாரம்பரியத்தை இன்னும் தொடரும் வகையில் சர்வதேச தரங்களில் வர்த்தக அமைவிடங்களை வழங்கும் வாக்குறுதியோடு இப்பிரிவை இப்போது தொடங்கியிருக்கிறது

 

இப்புதிய பிரிவு தொடங்கப்படுவது குறித்து காசாகிராண்டின் மேலாண்மை இயக்குநர் மற்றும் நிறுவனர் திருஅருண் Mn கூறியதாவது"வர்த்தக ரீதியிலான ரியல் எஸ்டேட் பிரிவில் நாங்கள் கால்பதித்திருப்பதை தெரிவிப்பதில் நாங்கள் பெருமையும்மகிழ்ச்சியும் கொள்கிறோம்.  உட்கட்டமைப்பு வசதியை உருவாக்க அரசு பல முன்னெடுப்புகளை தற்போது எடுத்து வரும் நிலையில் இப்பிரிவில் மிகப்பெரிய வாய்ப்பை நாங்கள் பார்க்கிறோம்.  அதே நேரத்தில் நவீன தேவைக்கும் மற்றும் அதை பூர்த்திசெய்யும் வழங்கலுக்கும் இடையே இடைவெளி இருப்பதாகவும் நாங்கள் கருதுகிறோம்.  தரம்நம்பகத்தன்மை மற்றும் புதுமை ஆகிய  மதிப்பீடுகள் எப்போதும் எங்களை வழிநடத்தியிருக்கின்றன.  வர்த்தக மற்றும் தொழில் பிரிவினரின் தேவைகளை எதிர்கொள்ள தொடங்கப்பட்டிருக்கும் இந்த வர்த்தக ரீதியிலான முனைப்புத்திட்டத்திலும் இதே கோட்பாடுகளை நாங்கள் செயல்படுத்துகிறோம்.  உருவாக்கப்படவிருக்கும் எமது வர்த்தக அமைவிட திட்டங்களை அதிக வசதிகள் கொண்டநவீன பணி மற்றும் வர்த்தக அமைவிடங்களாக பல நிறுவனங்கள் வரவேற்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்சிறப்பான வேலைவாய்ப்புகளோடு உகந்த பிசினஸ் சூழலை உருவாக்குவதற்கு இந்த அமைவிடங்கள் வழிவகுக்கும் என்பது உறுதி.  2027 -ம் ஆண்டுக்குள் பல்வேறு பெருநகரங்களில் ஒட்டுமொத்தமாக 10 மில்லியன் சதுரஅடி பரப்பளவில் வாடகை மற்றும் குத்தகைக்கான வர்த்தக அமைவிடங்களை உருவாக்குவது எங்களது குறிக்கோளாகும்.  இனிவரும் ஆண்டுகளில் வர்த்தக ரீதியிலான ரியல் எஸ்டேட்டில் வலுவான வளர்ச்சித் திட்டங்களை நாங்கள் வகுத்திருப்பதால் இந்த வெற்றிகரமான பயணத்தில் எங்களோடு இணையுமாறு நில உரிமையாளர்களையும் மற்றும் நிறுவனங்களையும் அன்போடு நாங்கள் வரவேற்கிறோம்."

 

சென்னையின்  நந்தம்பாக்கத்தில் தரைத்தளம் மற்றும் மேல்தளங்களுடன் கூடிய அலுவலக கட்டிடத்தை 2,75,000 .அடி பரப்பளவில் காசாகிராண்டு அஸ்டியூட் என்ற பெயரில் நிறுவ இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.  அத்துடன்சோழிங்கநல்லூரில் தரைத்தளம் மற்றும் 14 மேல் தளங்களுடன் 6,00,000 .அடி பரப்பளவில் ஐடி / ஐடிஇஎஸ் நிறுவனங்களுக்காக காசாகிராண்டு பிஸ்பார்க் என்ற திட்டமும் மற்றும் ரேடியல் சாலையில் 30000 .அடிபரப்பளவு கொண்ட அலுவலக கட்டிட திட்டத்தை காசாகிராண்டு தி பாரகன் என்ற பெயரிலும் இந்நிறுவனம் தொடங்குகிறது

 

சிறிய ரீடெய்ல் அமைவிடப் பிரிவில் அம்பத்தூர் மற்றும் மேலக்கோட்டையூர் ஆகிய இடங்களில் முறையே ,65,000 .அடி மற்றும்  1,75,000 .அடி என்ற கட்டிட பரப்பளவு திட்டங்களை காசாகிராண்டு கனெக்ட் என்ற பெயரில் காசாகிராண்டு கமர்ஷியல் தொடங்கியிருக்கிறது.  இந்த வர்த்தக ரீதியிலான அமைவிடங்களில் இடம்பெறப்போகும் வாடகைதாரர்கள் / குத்தகைதாரர்களுக்கு உலகத்தரத்தில் அற்புதமான அனுபவங்களை உருவாக்குவதன் மூலம் தென்னிந்திய ரியாலிட்டி தளத்தில் காசாகிராண்டு கமர்ஷியலின் பயணம் வெற்றியையும்ஆதாயத்தையும் சேர்த்து வழங்கும்

 

 

 


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...