கணவன் மனைவி இருவரும் ஷாப்பிங் முடித்து, பெரிய ஓட்டலில் போய் சாப்பிட்ட பிறகு காருக்கு வந்தனர்.
அப்போது ஒரு வயதான அம்மாள் அவர்களிடம் கையேந்தியபடி வர, கணவன் அவளுக்கு பர்சிலிருந்து நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தான்.
அவள் நிறைய நன்றி சொல்லிவிட்டு போனாள்.
மனைவி,
எதற்கு நூறு ரூபாய்?
கர்ணப் பரம்பரையோ?
அஞ்சோ பத்தோ கிழவிக்குப் போட்டிருக்க கூடாதா? என்றாள்.
கணவன் சிரித்துக்கொண்டு சொன்னான், உனக்கு புடவை நகைகள் எனக்கு துணிகள் செருப்பு பசங்களுக்கு துணிகள் என்று கிட்டத்தட்ட சர்வ சாதாரணமாக லட்சத்தில் செலவு பண்ணினோம்.
ஆனால் அந்த வயசான அம்மா, வயித்துப் பசிக்கு சாப்பிட நம்மைத் தேடி வந்திருக்கா.
நம்மாலே ரெண்டு நேரம் அந்தம்மா சாப்பிடும்போது நம்மை மனசார நினைக்குமே.
அதனாலே நமக்கு புண்ணியம் கிடைக்க வேண்டாம்.
அந்தம்மாவோட பசி போகுது.
மனுஷனுக்கு மூன்று விஷயங்கள் எப்ப வரும்ன்னு தெரியாது.
அது எப்ப வேணும்ன்னாலும் வரலாம்.
அது என்ன தெரியுமா?
Disability - இயலாமை
Disease. - நோய்
Death. - இறப்பு
நமக்கும் இந்த மூன்றும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
நம்மால் முடியும்போது, முடியாதவர்களுக்கு சிறு உதவி பண்றதாலே, கடவுள் நமக்கு அந்த மூன்றையும் தள்ளிப்போடலாம்" என்றான்.
மனைவி கண் கலங்கி நின்றாள்.
எனவே,
மேலே சொன்ன 3 Ds நமக்கும் எப்போதும் வரலாம்.
அதுவரை நம்மால் முடிந்த நல்லதைச்செய்வோம்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக