கவின்கேர் பிரைவேட் லிமிடெட் குறித்து: கவின்கேர் பிரைவேட் லிமிடெட், தனிநபர் பராமரிப்பு, தொழில்முறை பராமரிப்பு, உணவுகள், பால்பொருட்கள், பானங்கள், சூழல் மற்றும் சலூன்கள் ஆகிய துறையில் தொழிற்பிரிவுகளைக்கொண்டு, ஒரு பன்முக செயல்பாடுள்ள ஒரு எஃப்எம்சிஜி பெருநிறுவனமாகும். இதன் பிராண்டுகள் தொகுப்பில் ஷாம்புகள் (சிக், மீரா, கார்த்திகா மற்றும் நைல்), ஹேர் வாஷ் பவுடர்கள் (மீரா மற்றும் கார்த்திகா), தேங்காய் எண்ணெய் (மீரா), சரும பராமரிப்பு (ஃபேர் எவர், ஸ்பின்ஸ்), டியோடரண்ட் மற்றும் டால்க் (ஸ்பின்ஸ்), ஊறுகாய்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் (ருச்சி, சின்னிஸ் & கார்டன்), ஹேர் கலர்ஸ் (இன்டிகா), ரீடெய்ல் சலூன் தயாரிப்புகள் (ராகா புரொஃபஷனல்), பானங்கள் (மா), பால் பொருட்கள் (கவின்ஸ்), மற்றும் பியூட்டி சலூன்கள் (கிரீன் டிரென்ட்ஸ் & லைம்லைட்) Men's grooming (Biker's) and D2C Personal Care products (Buds and Berries)ஆகியவை அடங்கும். இதன் முக்கியமான ஃபர்சனல் கேர் பிராண்டுகளின் கீழ் ஹேண்டு சானிடைசர்கள் மற்றும் லிக்விட் சோப்பு தயாரிப்புகளையும் கவின்கேர் வழங்கி வருகிறது. இதன் பெரும்பாலான பிராண்டுகள் அவைகளுக்குரிய தயாரிப்பு வகையினங்களில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிற பிராண்டுகளாகும். நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்கொண்ட ஒரு பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் மையமானது, பல்வேறு துறைகள் முன்னேற்றம் காண்பதற்கு தொடர்ந்து பெரிதும் உதவுகிறது. மிகப் பெரியளவில் சந்தையாக்கல் செய்வதற்கான யுக்திகளையும், அம்சங்களையும் மிகச்சரியாக புரிந்து கொண்டிருக்கும் இந்நிறுவனம், தேசிய அளவிலான சந்தையில் மிக வலுவாக காலூன்றி இருக்கிறது. "பேரார்வமும், பெருமகிழ்ச்சியும் கொண்ட பணியாளர்கள் வழியாக புத்தாக்கத்தை ஊக்குவித்து மக்களால் பெரிதும் விரும்பப்படும் பிராண்டுகளை உருவாக்குவதன் மூலம், தொழில்துறையின் வளர்ச்சியை விட கணிசமான அளவு இன்னும் சிறப்பாக நாங்கள் வளர்ச்சி காண்போம்" என்ற தனது கார்ப்பரேட் செயல்நோக்கம் மற்றும் திட்டத்தின் மீது வலுவான அடித்தளத்தை அமைத்திருப்பதே கவின்கேரின் வெற்றிக்கு காரணமாகும்.
எபிலிட்டி ஃபவுண்டேஷன் குறித்து: 1995 – ம் ஆண்டு தொடங்கப்பட்ட எபிலிட்டி ஃபவுண்டேஷன், சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு நாடெங்கிலும் தேசிய அளவில் பல்வேறு வகையினங்களின் கீழ் உள்ள ஊனமுற்றோர்கள் நலனுக்காக பணியாற்றிவருகிற ஒரு முதன்மை அமைப்பாகும். ஊனமுற்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் சமவாய்ப்புகள் உள்ள சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாடெங்கிலும் இது தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
ஊனமுற்ற நபர்கள் கொண்டிருக்கும் சாத்தியமுள்ள திறனையும், ஆற்றலையும் வலியுறுத்துவதன் வழியாகவும் புதுமையான முன்னெடுப்புகள் வழியாக ஊனமுற்றோர்கள் மற்றும் ஊனமற்ற மக்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப எபிலிட்டி ஃபவுண்டேஷன் உறுதியாக செயலாற்றி முன்னேற்றம் கண்டு வருகிறது. சமத்துவம் நிலவும் ஒரு குடிமை சமூகம் என்ற குறிக்கோளை அடைய பிரசுரித்தல், பணி வாய்ப்பு வழங்கல், ஊடகம், கலாச்சாரம், கொள்கை அமலாக்கம், சட்டம் இயற்றல் மற்றும் மனித உரிமைகள் என பல துறைகளில் இந்த அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. உடல்சார்ந்த ஊனங்களை விட, சமூகத்தின் மனோபாவங்களால் உருவாக்கப்பட்ட தடைகளே மக்களை உண்மையிலேயே வளர்ச்சி காண விடாமல் தடுக்கின்றன என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு எபிலிட்டி ஃபவுண்டேஷன் செயலாற்றி வருகிறது. சரியான நேரத்தில், சரியான வாய்ப்புகளை கிடைக்குமாறு செய்யும் குறிக்கோளின் மீது தளராத பொறுப்புறுதியினை இது கொண்டிருக்கிறது. அனைவரும் சமஅளவில் போட்டியிடுகின்ற களமும் இருக்குமானால், இன்னும் அதிகமானவை சாத்தியமே. இதற்கு அவசியப்படுவதெல்லாம் ஏற்றுக்கொள்கிற, பக்குவப்பட்ட ஒரு திறந்த மனநிலை மட்டுமே என்பதே இதன் உறுதியான நம்பிக்கையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக