மொத்தப் பக்கக்காட்சிகள்

சென்னை நகரின் முக்கிய இடங்களில் நவீன முறையில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட காசாகிராண்ட் திட்டம்



சென்னை நகரின் முக்கிய இடங்களில் நவீன முறையில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட காசாகிராண்ட் திட்டம்

 

~ பிரமாண்ட ஒருங்கிணைந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்தில் சிறந்து விளங்கும் இந்த நிறுவனம் சிறு குடியிருப்புகள் கட்டுமானத் துறையிலும் நுழைகிறது ~

 

சென்னை, பிப்ரவரி 23, 2023: தென்னிந்தியாவில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் காசாகிராண்ட் சென்னை நகரின் முக்கிய இடங்களில் நவீன வடிவமைப்பில் நேர்த்தியான சிறு குடியிருப்புகள் கட்டுமானத் துறையிலும் நுழைய இருப்பதாக அறிவித்துள்ளது.

 

அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம் மற்றும் அடையாறு போன்ற சென்னை நகரின் பிரபலமான சில இடங்களில் புகழ்பெற்ற கட்டுமான நிறுவனங்களால் கட்டப்படும் குடியிருப்புகளை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் இந்தச் சூழலில், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்தக் கட்டுமான திட்டங்களை செயல்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நகரில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் சிறந்த விலையில் தரமான மற்றும் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய சிறு அடுக்குமாடி குடியிருப்புகளை இந்த நிறுவனம் கட்டி விற்பனை செய்ய உள்ளது.

 

உயரமான குடியிருப்புகள், ஒருங்கிணைந்த குடியிருப்பு வளாகங்கள் மற்றும் வில்லாக்கள் கட்டுமானத்தில் இந்நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வந்த சூழலில் தற்போது இந்த துறையிலும் இந்த நிறுவனம் தீவிர கவனம் செலுத்த உள்ளது. அந்த வகையில் சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 12 மாதங்களில் குறைந்தபட்சம் 100 நவீன குடியிருப்புகளை கட்ட காசாகிராண்ட் இலக்கு நிர்ணயித்துள்ளது. இவை அனைத்தும் சிறந்த தரத்துடன், சிறப்பான தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு நவீன முறையில் கட்டப்பட உள்ளது. மேலும் இந்த வீடுகளில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

 

இந்தப் புதிய முயற்சியின் மூலம் 500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

 

இந்த புதிய வர்த்தகம் குறித்து காசாகிராண்ட் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான திரு அருண் கூறுகையில், " எங்கள் வாடிக்கையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த புதிய திட்டத்திற்கான முயற்சியை நாங்கள் மேற்கொண்டு இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். எங்களைப் போன்ற பெரிய நிறுவனங்கள் ஒருங்கிணைந்த குடியிருப்புகள் கட்டுமானத்தில் தீவிர கவனம் செலுத்தி வந்த காரணத்தால் இதுபோன்ற ஒன்று அவர்களால் கவனிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், வீடு வாங்கும் பலரும் சிறிய குடியிருப்புகளை இது போன்ற பெரிய நிறுவனங்கள் கட்ட வேண்டும் என்பதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொண்ட நாங்கள் இந்த துறையில் இறங்கி உள்ளோம். வரும் காலங்களில் நகரின் ஒவ்வொரு இடத்திலும் காசாகிராண்ட் வீடுகளை கட்ட நாங்கள் விரும்புகிறோம். எங்களின் பிராண்ட் மற்றும் சிறந்த தரம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் காரணமாக எந்தவொரு வீட்டை வாங்குபவரும் விரும்பும் பிற முக்கிய அம்சங்களால் எங்களின் இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

 

இதனை குறித்து இந்த புதிய முயற்சியின் இயக்குனர் திரு.  சுகுமார் கூறுகையில், வீடு வாங்குபவர்களின் பல்வேறு தரப்பினர் முக்கியமான இடங்களில் தங்கள் வீடு இருக்க வேண்டும் என்பதை அதிகம் விரும்புகின்றனர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். இவர்கள் பெரும்பாலும் கடந்த சில தலைமுறைகளாக இதுபோன்ற பகுதிகளில் வசித்து வருகின்றனர், மேலும் இப்போது அவர்கள் வசிக்கும் இடங்களில் எந்தவித சமரசம் செய்யாமல் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். இதை பூர்த்தி செய்யும் வகையில், நாங்கள் இந்தத் திட்டத்தை தேர்வு செய்துள்ளோம். அந்த வகையில் எங்கள் பிராண்டின் தரத்தை நிரூபிக்கும் வகையில் இந்த வீடுகள் இருக்கும். எனவே அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தில் எந்தவித சமரசம் செய்து கொள்ளத் தேவையில்லை. என்றார்.

 

இந்த புதிய கட்டுமான திட்டத்திற்காக கூட்டு வர்த்தகத்தில் ஈடுபட விரும்பும் 2 கிரவுண்ட் முதல் 2 ஏக்கர் வரை உள்ள நில உரிமையாளர்கள் எங்களை 9047120000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இது சம்பந்தமான வழிகாட்டுதலுக்கான சேவை வல்லுனர்களை தொடர்பு கொள்ளலாம் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

இதுவரை காசாகிராண்ட் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் 3 கோடியே 60 லட்சம் சதுர அடியில் 140-க்கும் மேற்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி உள்ளது. இதில் 27 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வசித்து வருகிறார்கள். வரும் காலங்களிலும் இதுபோன்ற நிலை தொடர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...