மொத்தப் பக்கக்காட்சிகள்

கவின்கேர் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷன்இணைந்து நடத்தும் 21-வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள்

கவின்கேர் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் 21-வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள்


 

மிகச்சிறப்பான சாதனைகளை நிகழ்த்திய ஊனமுற்ற  சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு

சென்னை: 25 பிப்ரவரி, 2023:   அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் ஊனமுற்ற சாதனையாளர்களை இந்திய மக்கள் அறிய வேண்டுமென்ற நோக்கத்துடன் கவின்கேர் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷன், ஒருங்கிணைந்து 21-வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள் (CAVINKARE ABILITY AWARDS) 2023 என்ற நிகழ்வின் மூலம் அவர்களை  கௌரவித்திருக்கிறது.   வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு குறுக்கீடு செய்த தடைகளை தங்களது மனஉறுதியாலும், நம்பிக்கையாலும் உடைத்தெறிந்து, வெற்றி கண்டிருக்கின்ற ஊனமுற்ற ஐந்து சிறந்த சாதனையாளர்களுக்கு கௌரவம்மிக்க இவ்விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின்போது ஒளிபரப்பப்பட்ட ஒரு  காணொளி காட்சியின் வழியாக ஆஸ்கார் விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் திரு. .ஆர். ரகுமான் இந்நிகழ்ச்சியை நடத்துவதற்காக கவின்கேர் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷனையும் மற்றும் கௌரவம்மிக்க இவ்விருதுகளை பெற்ற சாதனையாளர்களையும் மனமார பாராட்டினார்.  புகழ்பெற்ற இசைக்கலைஞரான அனில் ஸ்ரீனிவாசன் இசைக்கு பிரபல ஓவியர்T. அதிவீரபாண்டியன் மற்றும் வாயினால் ஓவியம் வரையும் ஜோயல் K. பிஜு ஆகியோர் வழங்கிய இசை- ஓவிய நிகழ்ச்சியானது, திறமையும், அழகும், கலைத்திறனும், ஊனத்தை கடந்து ஒளிவீசும் திறன் கொண்டவை என்ற உண்மைக்கான சாட்சியமாக இருந்தது.

 

தடைகளையும், சிரமங்களையும் தவிடுபொடியாக்கி சாதனை வெற்றிகளை நிகழ்த்தியதன் மூலம் இந்த ஆண்டு விருதுக்கு தகுதியானவர்களை, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பான ஆளுமைகளை உள்ளடக்கிய நடுவர் குழு தேர்வு செய்தது. தக்ஷின் பாரத் பிராந்தியத்தின் தலைமை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் A. அருண், பிரபல இசைக்கலைஞர் திருமதி. சுதா ரகுநாதன், சன்மார் மேட்ரிக்ஸ் மெட்டல்ஸ்ன் பிரசிடெண்ட் திரு. ஜார்ஜ் ராஜ்குமார், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தா திரு. மதன் கார்க்கி மற்றும் கிஸ்ஃபுளோன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. சுரேஷ் சம்மந்தம் ஆகியோர் இந்த ஆண்டுக்கான நடுவர் குழுவில் இடம்பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர்.

 

இந்நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த கவின்கேர் பிரைவேட் லிமிடெட் - ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. சி.கே. ரங்கநாதன், "கவின்கேர் எபிலிட்டி விருதுகள் என்ற இந்நிகழ்வு, செழுமையான 20 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து 21-வது ஆண்டில் நுழைந்திருக்கிறது.  இந்த காலகட்டத்தின்போது உடல் ஊனங்கள் இருத்த போதிலும், அவைகளைப் பொருட்படுத்தாது சாதித்திருக்கின்ற தனிப்பட்ட சாதனையாளர்களை பாராட்டுவதும் மற்றும் அவர்களது பங்களிப்பை அங்கீகரிப்பதும் எங்களுக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பாகவும், கௌரவமாகவும் நாங்கள் கருதுகிறோம்.  நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல்வேறு வழிமுறைகளில் தங்களது அசாத்திய திறனை வெளிப்படுத்தியிருக்கும் தைரியமும், திறனும் கொண்ட இந்த சாதனையாளர்களை பார்ப்பது உண்மையிலேயே உத்வேகமளிக்கிறது. ஊனங்கள் இருக்கின்ற இதுபோன்ற இன்னும் பல தைரியசாலிகளை ஊக்குவிக்கவும் மற்றும் அவர்கள் மீது எங்களது நேர்மறையான தாக்கத்தை வழங்கவும் நாங்கள் விரும்புகிறோம்.  இந்த விருது நிகழ்வில் பங்கேற்றிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் வெற்றிகரமான எதிர்காலம் அமைய வேண்டுமென்றும் மற்றும் அவர்களது எதிர்கால முயற்சிகள் சிறப்பான வெற்றியை அடைய வேண்டுமென்றும் நாங்கள் வாழ்த்துகிறோம்."

 

எபிலிட்டி ஃபவுண்டேஷனின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான திருமதி. ஜெ ய்ஸ்ரீ ரவீந்திரன் கூறியதாவது: "ஊனங்கள் இருப்பினும் சாதனைகளை நிகழ்த்தியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் கவின்கேர் எபிலிட்டி அவார்ட்ஸ்ன் 21-வது ஆண்டு பதிப்பினை நாங்கள் கொண்டாடுகின்ற இன்றைய தினம், மக்களது மனப்பான்மையில் ஓரளவு மாற்றத்தை எங்களால் கொண்டு வர முடிந்திருக்கிறது என்பது எனக்கு திருப்தியையும் உத்வேகத்தையும் தருகிறது.  இந்த நிகழ்வு நடைபெறும் அரங்கத்தில் நுழையும் நபர்கள் இதைவிட்டு வெளியே செல்லும்போது மாறியிருக்கின்ற மற்றும் வேறுபட்ட கண்ணோட்டங்களோடு செல்வதை நான் பார்க்கிறேன்.  இவ்விருதுகள் நிகழ்வு நடைபெற்ற முதல் ஆண்டிலிருந்தே இதை செய்ய வேண்டுமென்பதே திரு. ரங்கநாதன் மற்றும் எனது குறிக்கோளாகவும், செயல்பாடாகவும் இருக்கிறது.  உற்சாகமும், மகிழ்ச்சியும் நிலவுகின்ற ஒரு இனிய மாலைநேர நிகழ்வில் ஊனமுற்ற நபர்களிடம், அதிகம் வெளிப்படாமல் மறைந்திருக்கும் திறன்களையும், அவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகளையும் பலரும் அறியுமாறு வெளிப்படுத்துவதே இந்த விருது நிகழ்வின் நோக்கமாக எப்போதும் இருந்து வருகிறது.  அதுபோலவே, பார்வையாளர்கள் மீதும் மற்றும் அதன் தொடர்ச்சியாக சமூகத்தின் மீதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இவ்விருதுகள் நிகழ்வு ஏற்படுத்தி வந்திருக்கின்றன. பிரச்சனைகள் என்பதிலிருந்து, சாதிக்கக்கூடிய சாத்தியத்திறன்கள் பற்றி பார்வையாளர்களின் கவனத்தை மாற்றுவதும் இதன் நோக்கங்களுள் ஒன்றாகும்.

 

வேறுபிற இடங்கள் அல்லது பிரிவுகளை விட ஊனங்கள் இருக்கும் நபர்கள் மத்தியில் தான் அதிக எண்ணிக்கையிலான முன்மாதிரி நபர்கள் இருக்கின்றனர் என்று நான் எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.  இவ்வாறு கூறியிருப்பினும், முன்மாதிரி நபர்களை முன்னிலைப்படுத்துவது மட்டும் இந்நிகழ்வின் நோக்கமல்ல; நம்பிக்கையும், தைரியமும் நிறைந்த வாழ்க்கை மற்றும் வாழும் முறை பற்றியதே இது. ஊனமுற்ற நபர்கள், முதலில் நபர்களே.  எல்லொரையும்போல சம வாய்ப்புகள், மற்றும் சமஅளவு கண்ணியத்தோடு ஏற்றுக்கொள்ளப்படுவது அவசியம்.  எமது குறிக்கோளை நோக்கிய பயணத்தில் நாங்கள் நீண்ட தொலைவை கடந்து வந்திருக்கிறோம் என்பது உண்மையே.  ஆனால், நாங்கள் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருக்கிறது.  எதிர்காலத்தில் மிக விரைவிலேயே அந்த நாள் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்."

 

தேசிய அளவிலான இவ்விருது கவின்கேர் எபிலிட்டி எமினன்ஸ் விருது மற்றும் கவின்கேர் எபிலிட்டி மாஸ்ட்டரி விருது என்ற இரு வகையினங்களில் வழங்கப்படுகிறது. நாடெங்கிலுமிருந்து விருதுக்காக 191  விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஊனமுற்ற சாதனையாளர்கள் எதிர்கொண்ட சிரமத்தின் அளவு, தடைகளின் மீது கண்ட வெற்றி மற்றும் சாதித்த பணியின் தனித்துவத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அவைகளிலிருந்து விருதுக்கான குறும்பட்டியலுக்கு சிறப்பான நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேற்குறிப்பிடப்பட்ட விருதுகளுக்கும் மேலாக, மிகச்சிறப்பான சாதனைகளை தனிநபராகவோ அல்லது ஒரு நிறுவன அமைப்பு வழியாகவோ செய்துபரவலான அங்கீகாரத்தைப் பெற்று தலைவராக திகழும் ஊனமுற்ற ஒரு நபருக்கு "கவின்கேர் எபிலிட்டி சிறப்பு அங்கீகார விருது", வழங்கப்படுகிறது. 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...