மொத்தப் பக்கக்காட்சிகள்

கவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2023 – ஐ பெற்ற சாதனையாளர்கள்

கவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2023 – பெற்ற சாதனையாளர்கள்:

கவின்கேர் எபிலிட்டி சிறப்பு அங்கீகார விருது

S. சங்கர ராமன்

ஆய்க்குடி, தமிழ்நாடு

ஒரு தலைவர், ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர் மற்றும் மாற்றத்தை நிகழ்த்துபவர்திரு. சங்கர ராமன் அவர்களை விவரணை செய்ய மக்கள் பயன்படுத்தும் சில வார்த்தைகள் இவை.  ஒரு பட்டயக் கணக்காளரான திரு. சங்கர ராமன், பல ஆண்டுகளாக அமர் சேவா சங்கம் என்ற அமைப்போடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டு புரட்சிகரமான புதிய பாதை படைக்கும் பல நடவடிக்கைகளை வெற்றிகரமாக அறிமுகம் செய்திருக்கிறார்.  ஊனமுற்ற நபரான இவர், கல்விக்கான வசதி வாய்ப்பை பெற்ற மற்றும் பெறாத ஊனமுற்ற நபர்களுக்கு அவர்களுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வுகளை நன்கு உணர்ந்திருக்கிறார்.

இதன் காரணமாக, கல்வியின் ஆற்றல் மீது வலுவான நம்பிக்கை கொண்டிருக்கும் இவர், ஒரு இளவயது சிறுவனாக தான் பெற்ற அதே வாய்ப்பை கிராமப்புறங்களைச் சேர்ந்த ஊனமுற்ற சிறார்கள் பெறுவதை உறுதி செய்வதை தனது வாழ்க்கையின் நோக்கமாகவும், செயல்திட்டமாகவும் கொண்டு செயல்பட்டு வந்திருக்கிறார்.  இவரது தலைமைத்துவத்தின் கீழ், இவர்களுள் அதிக தகுதியுள்ள நபர்கள் சேவைகளுக்கான அணுகுவசதி பெறுவதை உறுதிசெய்ய ஒரு ஸ்க்ரீனிங் செயல்முறையை அமர் சேவா சங்கம் அறிமுகம் செய்திருக்கிறது.  தொழிற்கல்வியை கற்பிக்கும் முயற்சிகளை அறிமுகம் செய்திருப்பதோடு, அனைவரும் தொடக்க நிலையிலேயே சமவாய்ப்புகளை பெறுகின்ற கல்வி நிலையமாக இச்சங்கம் நிர்வகிக்கும் பள்ளியை இது மாற்றியிருக்கிறது.  ஊனங்கள் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவாக வும் கண்ணியத்தோடு நடத்தும் சமவாய்ப்புகளை வழங்குகின்ற ஒரு உலகை உருவாக்க வேண்டுமென்ற குறிக்கோளின் மீது அமர் சேவா சங்கத்தோடு சேர்ந்து, சங்கர ராமன் வலுவான பொறுப்புறுதியை கொண்டிருக்கிறார். 

 

கவின்கேர் எபிலிட்டி எமினென்ஸ் விருது
Dr. M.A. அபுல் ஹசன் சஹானி

கொல்கத்தா, மேற்கு வங்கம்

ஊனமுற்றோர் மற்றும் பின்தங்கிய மக்களுக்கான நிறுவனத்தின் (IHBP) நிறுவனர்இயக்குனராக டாக்டர். அபுல் ஹசன் சஹானி செயலாற்றி வருகிறார்.  IHBP என்பது, ஊனமுற்ற குழந்தைகள், பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய நபர்கள் மற்றும் சமூகபொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மக்களுக்காக உழைக்கும் ஒரு லாபநோக்கற்ற, சமயம் சாராத ஒரு தொண்டு நிறுவனமாகும்.  செவித்திறன் மற்றும் அறிவுசார் ஊனமுற்ற வற்களுக்காக ஒரு நர்சரி, தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளிகளை இத்தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறது.  இன்றைக்கு மொத்தத்தில் 750 மாணவர்கள்  இக்கல்வி நிறுவனத்தில் கல்வி பயில்கின்றனர்.  சிறப்பு பாடத்திட்டங்களை கொண்டுள்ள இப்பள்ளிகளில், திறனும், பயிற்சியும் பெற்ற ஆசிரியர்களை உள்ளடக்கிய குழுவால் சிறப்பான கல்வி வழங்கப்படுகிறது.  தங்களது அம்மாவிடமிருந்து பிறவி நோயாகப் பெற்ற தசை வலுவிழப்பு என்ற நிலையால் இவரும் மற்றும் இவரோடு உடன்பிறந்த சகோதர சகோதரிகளும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் டாக்டர். ஹசன்.  எனவே, சிறுவயதிலிருந்தே ஊனமுற்ற நபர்கள் எதிர்கொள்கின்ற சிரமங்களை இவர் நன்கு அறிந்திருந்தார்.  இந்த புரிதலே ஊனமுற்ற நபர்களின் நலவாழ்விற்காக பாடுபடுவதை இவரது செயல்திட்டமாக மாற்ற வேண்டுமென்ற மனஉறுதியை இவருக்குத் தந்தது.  ஊனமுற்ற நபர்களை பொது சமூகத்தின் ஒரு அங்கமாக  சமவாய்ப்பும், திறனும் உள்ளவர்களாக மாற்றுவதற்கான பயனுள்ள வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்தும் பணியில் இவரை ஈடுபடச் செய்திருக்கிறது. 

 

கவின்கேர் எபிலிட்டி மாஸ்டெரி விருதுகள்

டாக்டர்.சுஷ்ஸ்ரீ சாரங்கி

புவனேஸ்வர், ஒடிசா

புவனேஸ்வரிலுள்ள IMS & SUM மருத்துவமனையில் டாக்டர். சுஷ்ஸ்ரீ சாரங்கி, உட்சுரப்பியியல் துறையில் உதவி மருத்துவராக பணியாற்றி வருகிறார்இதே மருத்துவமனையில் இரண்டாவது ஆண்டு எம்பிபிஎஸ் மாணவராக இருந்தபோது ஒரு சாலை விபத்தின் காரணமாக, இடுப்பிற்கு கீழே உடலியக்க திறனிழப்பு இவருக்கு ஏற்பட்டதுவிபத்திற்கு பிறகு ஏற்பட்ட இப்பாதிப்பினால் கல்வியை தொடர்வது சாத்தியமற்றதாக தோன்றிய போதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களது ஆதரவோடும், தனது சொந்த மனஉறுதியாலும், ஒரு மருத்துவராக ஆகவேண்டுமென்ற கனவை எப்படியாவது தடைகளை மீறி அடைய வேண்டுமென்ற நம்பிக்கையை இவரால் பெற முடிந்தது. ஒரு மருத்துவராக தேர்ச்சி பெறுவதற்கான நான்கு ஆண்டுகள் பயணமானது எளிதானதாக இவருக்கு இருக்கவில்லைசெய்முறை பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற தொடர்ந்து வகுப்புகளில் அமர முடியாத நிலை போன்ற பல்வேறு சவால்களை இவர் சமாளிக்க வேண்டியிருந்தது. மருத்துவராக பணிபுரிவதென்பது ஒரு கடுமையான செயல்பாடாக இருக்கிற போதிலும், தான் தேர்வு செய்த துறையில் வெற்றி காண வேண்டுமென்ற கனவை டாக்டர். சுஷ்ஸ்ரீ பல தடைகளை தாண்டி நிஜமாக்கினார்மருத்துவத்தில் அல்லது அதை சார்ந்த மருத்துவம் அல்லாத பிரிவில் முதுகலை பட்டப்படிப்பை தொடரவேண்டுமென்பது இவரது இப்போதைய நோக்கமாக இருக்கிறதுஎதிர்காலத்தில் ஒரு ஆசிரியராக கல்விப்பணியை தேர்வு செய்யலாமா என்பதையும் இவர் தற்போது பரிசீலித்து வருகிறார்

 

ரசித் குல்ஸ்ரேஸ்தா

புனே, மஹாராஷ்டிரா

ரசித் குல்ஸ்ரேஸ்தா ஒருதிறன் வாய்ந்த சைக்கிள் வீரராகவும், தீவிர சாகச ஆர்வலராகவும் இருக்கிறார்.  இருமுறை புற்றுநோயிலிருந்து பிழைத்திருக்கும் இவருக்கு ஒரு கை அகற்றப்பட்டிருக்கிறது.  எனினும், புதிய விஷயங்களை முயற்சிப்பதில் எப்போதும் ஆர்வம் கொண்டிருக்கும் ரசித், தனது கனவுகளை நிஜமாக்க தனது ஊனத்தை அனுமதிக்கக்கூடாது என்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருக்கிறார். 

 

சைக்கிளிங் பற்றி பேரார்வம் கொண்டிருக்கும் இவர், மணாலியிலிருந்து கர்துங் லா என்ற இடம் வரை 10 நாட்கள் சைக்கிளிங் நிகழ்வு உட்பட, பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.  இயற்கையை தான் ரசித்து அனுபவிப்பதைப்போல ஊனமுற்ற பிற நபர்களும் அந்த அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்காக தனது சைக்கிளிங் நிகழ்வுகளிலும் மற்றும் இயற்கையை ரசிக்கும் நடை பயணங்களிலும் அவர் உடன் அழைத்துச் செல்கிறார்.  சாகசம் மீதான இவரது பேரார்வம், சியாச்சின் அடிப்படை முகாம் வரை இவரை அழைத்துச் சென்றிருக்கிறது. ஊனமுற்ற நபர்களுக்கும் சமவாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வரும் இவர், மக்களுக்கு உத்வேகமளிக்க தனது வாழ்க்கை கதையை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் தங்களது தனித்துவ தன்மையை கைவிடாமல் முன்னேறிச் செல்ல தைரியத்தை வழங்கவும் பல்வேறு செயல்தளங்களை திறம்பட பயன்படுத்தி வருகிறார்.  ரசித்ன் வாழ்க்கை, அவர் மீது பல தாக்குதலை தொடர்ந்து நடத்தியிருக்கின்ற போதிலும் கூட, வாழ்க்கையை முழுமையாக தான் வாழ்வதை தொடர்வதற்கு சரியான வழிமுறைகளை கண்டறிவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார் மற்றும் அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். 

 

வித்யா குமாரி

சமஸ்திபூர், பீகார்

வித்யா குமாரி, ஆன்லைன் உணவு வழங்கல் செயல்தளமான ஸ்விகியில் ஒரு டெலிவரி பார்ட்னராக பணியாற்றி வருகிறார்.  ஒரு விபத்திற்கு பிறகு பிறரை சார்ந்திருக்க வேண்டும் அல்லது படுக்கையிலேயே விழுந்து கிடக்க வேண்டும் என்பதையே தங்களது வாழ்க்கை என்று நம்புகின்ற ஊனமுற்ற பெண்கள் அத்தகைய எண்ணங்களை தூக்கி எறிவதற்கான உத்வேகம் அளிப்பவராகவும் மற்றும் ஒரு முன்மாதிரி நபராகவும் வித்யா குமாரி திகழ்கிறார்.  மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி, உணவு டெலிவரியை மேற்கொள்ளும் இவர், ஊனம் என்பது, ஒரு தடைச்சுவர் அல்ல என்று தினமும் நிரூபிக்கிறார்.  ஸ்விகி நிறுவனத்தில் பணியாற்றுவது மட்டுமின்றி, தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் வீராங்கனையாகவும் வித்யா திகழ்கிறார்.  பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் நம் நாட்டிற்காக தங்கப்பதக்கம் வெல்வது இவரது பெருவிருப்பமாக இருக்கிறது.  இவருக்கு ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு வித்யாவின் பயணம், அவரது வறுமை, உடல் ஊனம் மற்றும் பாலினம் காரணமாக பல்வேறு சாவல்கள் நிறைந்ததாகவே இருந்த்து.  எனினும், அவரது மனஉறுதியையும், தைரியத்தையும் இச்சவால்கள்  தோற்கடிக்க இவர் ஒருபோதும் அனுமதித்ததில்லைசாதிக்க வேண்டுமென்ற கனவைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான தைரியத்தை இவர் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை.  இவரது சாதனைகளும், பயணமும் ஊனமுற்றோர்களுக்கு மட்டுமன்றி, அனைவருக்குமே உத்வேகமளிப்பதாக இருக்கிறது. 

 


இவர் தற்போது வசிக்கும் சண்டிகர் ஸ்பைனல் ரீஹாப் என்பதில் தங்கியிருக்கும் அனைவருமே பெரிதும் பாராட்டும் பண்பியல்பாக  இவரது எளிமை இருக்கிறது. . 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...