Share market துணிவு படத்தில் வருவது போல் பங்கு வர்த்தகம் மோசடியா?
அப்படியெல்லாம் ஒட்டு மொத்தமாக சொல்ல முடியாது.
பங்கு முதலீடு என்பது உலக அளவில் இந்திய அளவில் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் டாடா பிர்லா போன்ற மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் பங்குச்சந்தையின் மூலம் பணம் திரட்டி தங்களின் தொழிலை பிரம்மாண்ட வளர்ச்சி காண வைத்திருக்கிறார்கள்.
கூடவே பங்கு முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கி அவர்களையும் பணக்காரர்கள் ஆக்கியிருக்கிறார்கள்.
இது தவிர இக்குழும பங்குகளின் விலை நீண்ட காலத்தில் கணிசமாக அதிகரித்து அதுவும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்திருக்கிறது.
இதே போல் பங்குச் சந்தையில் ஆயிரக்கணக்கான நிறுவன பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன
பங்கு முதலீடு என்பது குறுகிய காலத்தில் மிக அதிக ரிஸ்க் கொண்டது.
அதே நேரத்தில் நீண்ட காலத்தில் அதாவது ஐந்தாண்டு பத்தாண்டு 15 ஆண்டு 20 ஆண்டு என நீண்ட காலத்தில் அவை பணவிக்கதைவிட சுமார் 5% அதிக வருமானம் கொடுத்திருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக