மொத்தப் பக்கக்காட்சிகள்

எல்ஐசியின் ‘ஜீவன் ஆசாத்’ திட்டம் அறிமுகம் life insurance


எல்ஐசியின் 'ஜீவன் ஆசாத்' திட்டம் அறிமுகம்

சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சார்பில் 'எல்ஐசி ஜீவன் ஆசாத்' என்ற புதிய திட்டம் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.

 இதுகுறித்து எல்ஐசி வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எல்ஐசி 'ஜீவன் ஆசாத் திட்டம்' பங்குச்சந்தையில் சேராத, தனி நபர், சேமிப்பு ஆயுள்காப்பீடு திட்டமாகும். இதன்மூலம் சேமிப்பும், பாதுகாப்பும் கிடைக்கும்.

பாலிசிகாலத்தின்போது ஆயுள்காப்பீட்டாளர் துரதிருஷ்டவசமாக இறந்தால் அவரது குடும்பத்துக்கு இத்திட்டம் மூலம் நிதி ஆதரவு கிடைக்கும். மேலும் இதிலிருந்து கடன் பெறவும் முடியும். பாலிசி முதிர்வுத் தேதியில் உறுதிசெய்யப்பட்ட உத்தரவாதமான பணம் பாலிசிதாரருக்கு கிடைக்கும்.


இத்திட்டத்தில் குறைந்தபட்ச அடிப்படை உத்தரவாத தொகை ரூ.2 லட்சமாகவும், அதிகபட்ச அடிப்படை உத்தரவாத தொகை ரூ.5 லட்சமாகவும் உள்ளது. இந்த பாலிசியை 15 முதல் 20 ஆண்டுக் காலத்துக்கு எடுக்க முடியும். மொத்த பாலிசி காலத்தில் 8 ஆண்டுகள் மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். இதில் 90 நாள் குழந்தை முதல், 50 வயது பெரியவர் வரை சேர முடியும்.


பிரீமியத்தை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, மாத இடைவெளியில் செலுத்தலாம். முகவர்கள் மூலமும், ஆன்லைனிலும், எல்ஐசி அலுவலகங்களிலும் இந்த பாலிசியில் சேர முடியும். மேலும் விவரங்களுக்கு www.licindia.in என்ற இணையதளத்தைக் காணலாம். .
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வணிக நிறுவனங்கள், தனிநபர்கள் தங்களுக்கு ஏற்ற காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்ய கவர்டன் இன்சூரன்ஸ்..!

வணிக நிறுவனங்கள் , தனிநபர்கள் தங்களுக்கு ஏற்ற காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்ய புதிய இன்சூரன்ஸ் தரகு சேவைகள் வழங்கும் நிறுவனம் – "...