மொத்தப் பக்கக்காட்சிகள்

அவர்கள் எப்போதும் தன் மனைவிக்காக தியாகம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள் joke

ஒரு பெண் ஷாப்பிங் போனார்.
கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்கு ஆச்சரியம்!

"நீங்க டி.வி ரிமோட்டை எப்பவுமே உங்க பையிலதான் வச்சிருப்பீங்களா?" என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண், "இல்லை. இல்லை. என் கூட ஷாப்பிங் வரமாட்டேன்னு என் ஹஸ்பண்ட் சொல்லிடாரு. அதான் அவர் டி.வி பார்க்காம இருக்கறதுக்காக ரிமோட்டை கையோட தூக்கிட்டு வந்துட்டேன்." என்றாள்.

*கருத்து: மனைவி எங்கே கூப்பிட்டாலும்*
*செல்ல மறுக்காதீர்கள்* ..!!

இதைக்கேட்டு கடைக்காரர்
சிரித்தபடி அந்த பெண் வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்து உள்ளே வைத்தார்.

"என்னாச்சு?" என்று ஆச்சரியத்தோடு
அந்த பெண் கேட்டார்.

அதற்கு அந்த கடைக்காரர் சொன்னார், "உங்க கிரடிட் கார்டை உங்க ஹஸ்பண்ட் பிளாக் பண்ணிருக்கார்." என்று.

*கருத்து: உங்கள் கணவரின் ஆசைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்*.

அந்த பெண் உடனே தன் பையிலிருந்து தனது கணவனின் கிரடிட் கார்டை எடுத்து நீட்டினார்.

அது பிளாக் செய்யப்படாமலிருந்தது

இப்போது அந்த பெண் கடைக்காரரைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்பு சிரித்தார்.

*கருத்து: மனைவியின் பவரை குறைத்து மதிப்பிடாதீர்கள்*.

அந்த கிரடிட் கார்டை ஸ்வைப் செய்தவுடன் 'ஒன் டைம் பாஸ்வேர்டை என்டர் செய்யவும்.
அது உங்கள் மொபைலுக்கு
அனுப்பப்பட்டிருக்கிறது' என்று 
மெஷின் ஒளிர்ந்தது.

*கருத்து: ஆண்கள் சமத்தாக இருந்தாலும் கூட* *மெஷின்கள் அவர்களை சாமர்த்தியமாக காப்பாற்றும்* ..!!

அந்த பெண் பொருட்கள் எதுவும் வாங்காமல் மனம் நொந்து போய் 
கடையிலிருந்து வெளியே வந்தார்.

அப்போது அவளுடைய மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அது ஒரு ஃபார்வர்டு மெஸேஜ்.

அது அவளுடைய கணவர் அனுப்பியது.

அதில் 'உங்கள் ஒன் டைம் பாஸ்வேர்ட்' 
என்றிருந்தது.

உடனே அவள் முகம்மலர்ந்தது. ஆனால், அவள் கண்களில் கண்ணீர் மட்டும் தேங்கி நின்றது.

மீண்டும் கடைக்குள் நுழைந்தவள் 
வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்கினாள்.


*கருத்து: உங்கள் கணவரைப் பற்றி நீங்கள் வேண்டுமானாலும்
நினைத்துக்கொள்ளுங்கள் 

ஆனால், அவர்கள் எப்போதும் தன் மனைவிக்காக தியாகம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள் இருப்பார்கள்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வணிக நிறுவனங்கள், தனிநபர்கள் தங்களுக்கு ஏற்ற காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்ய கவர்டன் இன்சூரன்ஸ்..!

வணிக நிறுவனங்கள் , தனிநபர்கள் தங்களுக்கு ஏற்ற காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்ய புதிய இன்சூரன்ஸ் தரகு சேவைகள் வழங்கும் நிறுவனம் – "...