மொத்தப் பக்கக்காட்சிகள்

5G ரிலையன்ஸ் ஜியோ அதிரடி : தூத்துக்குடி, ஈரோடு, தர்மபுரி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இந்தியாவின் 50 நகரங்களில் ஒரே நாளில் 5ஜி சேவைகள் தொடக்கம்.



ரிலையன்ஸ் ஜியோ அதிரடி  :  தூத்துக்குடி, ஈரோடு, தர்மபுரி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இந்தியாவின்
50 நகரங்களில் ஒரே நாளில் 5ஜி சேவைகள் தொடக்கம்.

இந்தியாவில் 5G சேவைகளை செயல்படுத்துவதில் முன்னோடியாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனம், இன்று ஒரே நாளில் 17 மாநிலங்களில் உள்ள 50 நகரங்களில் 5G சேவைகளை தொடங்கியுள்ளது. இதில் தமிழகத்தில், தூத்துக்குடி, ஈரோடு மற்றும் தர்மபுரி உள்ளிட்ட மூன்று நகரங்களும் அடங்கும். இதன் மூலம், 184 நகரங்களில் உள்ள ஜியோ பயனர்கள் இதுவரை Jio True 5G சேவைகளை பெற்றுள்ளனர். 

இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "5G சேவைகள் அறிமுகமாகியுள்ள நகரங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள், வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்பட்டு, அன்லிமிடெட் டேட்டாவை 1 GBPS+ வேகத்தில் அனுபவிக்க, கூடுதல் கட்டணமின்றி, இன்று முதல் வழங்கப்படுகிறது. . 
இந்த 2023 ஆம் புத்தாண்டில் அனைத்து jio பயனரும், ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் சேவைகளை அனுபவிக்கும் வகையில், 5G சேவைகள் வழங்குவதை விரைவு படுத்தியுள்ளதாக, ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.   

மேலும் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்திற்குள், இந்தியா முழுவதும் 5G சேவைகள் விரிவுபடுத்தப்படும். ஜியோவின் சேவைகளை விரிவுபடுத்த உறுதுணையாக இருந்த ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நன்றி என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...