சுத்தமான பனங்கருப்பட்டி உற்பத்தி மிகவும் குறைவு .
காரணம் பனை ஏறுவதற்கு ஆட்கள் கிடையாது
பனை ஏறும் தொழிலாளி உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.
காப்பீடு கிடையாது .
கிடையாது என்பதை விட
அப்படி மருத்துவக் காப்பு ஈடு செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களிடையே இல்லை.
தென்னை மரம் ஏறுவதற்கு புதிய கருவிகள் வந்துவிட்டன .
ஆனால் பனை ஏற நல்ல கருவிகள் இல்லை.
தனது உடல் திறனை வைத்துத் தான் பனை ஏற முடியும் .
அவ்வாறு பனை ஏறுபவரின் கால்கள் வளைந்து ,
நெஞ்சு .கைகள் எல்லாம்
தோல் மரத்து விகாரமான உருவத்தைத் தந்து விடுகிறது
எனவே, பனை ஏறினால் அவர்களுக்கு பெண் கொடுக்கும் நிலை கூட குறைந்து விட்டது.
அதனால் தான் பனைத் தொழில் நசிந்தது.
மேலும் டாஸ்மாக் விற்க அனுமதிக்கும் அரசுகள்
கள் விற்பதை தடை செய்து விட்டது .
பக்கத்து மாநிலமான கேரளாவில் கள் இறக்கப்படுகிறது.
அந்த நடைமுறையைப் பின்பற்றி இருக்கலாம்.
இதனால் பனை ஏறுவோர் குறைந்து கருப்பட்டி உற்பத்தி அதல பாதாளத்திற்குப் போய்விட்டது
ஆனால் கடந்த ஒரு சில ஆண்டுகளாக
சமூக
ஊடகங்களில் கருப்பட்டி பற்றி மக்கள் இடையே அதிக விழிப்புணர்வு ஏற்படும் வகையில் செய்திகள் வெளியாகின.
இதன் காரணமாக கருப்பட்டிக்கு சந்தை மதிப்பு உயர்ந்து, தேவையும் பெருகி உள்ளது.
இந்தத் தேவையை நிறைவு செய்ய, பதநீரில் சர்க்கரை கலந்து கருப்பட்டி ஆக்கி விற்கின்றார்கள்.
எனவே சுத்தமான கருப்பட்டி என்பது குதிரைக்கொம்பாக உள்ளது.
தென் மாவட்டங்களில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தாது பஞ்சம் என்று கூறப்படும் கொடிய பஞ்சம் வந்தபோது
அந்தப் பகுதி மக்கள் வாழ்வாதாரத்திற்காக வெள்ளைக்கார கலெக்டர் ஒருவர் 60 லட்சம் பனை மரங்களை நட்டதாக திருநெல்வேலி வரலாறு கூறுகின்றது .
அதன் விளைவாகவே அந்தப் பகுதி மக்களுக்கு நிலப்பட்டா இல்லாமல் பனை மரத்திற்கு மட்டும் பட்டா வழங்கும் ஒரு நடைமுறை வந்தது .
பனைக்கு மட்டும் வரி கட்டி அதனைப் பயன்படுத்தினார்கள்.
ஆனால்
ஆறு மாதமே நடைபெறும் இந்தத் தொழிலுக்கு
நான் மேல் சொன்ன காரணங்களால் மதிப்பு குறைந்தது.
இப்போது கூட கம்போடியாவிலும் இலங்கையிலும் பனை பொருட்களை வைத்து
அதற்கு மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தும் நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன.
அதையெல்லாம் பார்த்து இங்கும் செய்யலாம்.
பனை மரத்தை ஏதோ காடு கரையிலும் குளத்தின் கரையிலும் நடுவதைவிட
அதையும் ஒரு தொழிற்சாலையாக ஒரே இடத்தில் பத்தாயிரம் பனை அரசு புறம்போக்கு நிலங்களில் நட்டு வளர்த்து
அதனை ஒரு தொழில் போல நடத்தினால்
அந்தத் தொழில் மேம்படும்.
மக்களுக்கு வாழ்வாதாரமும் பெருகும்.
பனை ஒரு கற்பகத் தரு .
நாம்தான் எப்படிப் பயன்படுத்துவது என்பது தெரியாமல் இருக்கிறோம்.
2. வெங்கடேஷ்
நாட்டுச் சர்க்கரை செய்முறையில் சுண்ணாம்பு பதிலாக பிளீச்சிங் பவுடர் கலப்பதாகச் செய்தி.
3. பிரபாகரன் பிரபு
உண்மை.
நாட்டுச் சர்க்கரை பனங் கருப்பட்டி போன்றவகைளில்
வெள்ளைச் சக்கரை கலப்படம் செய்கிறார்கள்
சர்க்கரை பொங்கல் செய்யப் பயன்படும் குண்டு வெல்லம் கெட்டுப் போகாமல் இருக்க,
மருந்து கலப்பதாகத் தகவல்.
ஆகவே சர்க்கரை இனிப்பு இல்லாத காப்பியே நல்லது.
4. குமார் ராமசாமி ஆதித்தன்
நமது கிராமங்களில் கருப்பட்டி போட்டு காபி தருவார்கள் .
பால் சேர்த்து குடிக்கும் பழக்கம் கிடையாது.
கருப்பு நிறத்தில் இருக்கும்.
கடுங்காப்பி என்று கூறுவார்கள்.
பதிவு
அருணகிரி
FB Arunagiri Sankarankovil
3.12.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக