அப்பன்...
***** *****
சமீபத்தில் வெளிவந்த மலையாள சினிமா...
ஒரு வீட்டைச் சுற்றியே சுழலும் கேமரா...
மனிதர்களின் மாறுபட்ட அகவாழ்வினை காட்சிப்படுத்துகிறது...
எழும்ப முடியாமல் படுக்கையில் கிடக்கும் திமிர் பிடித்த ஒரு தந்தையின் கதை...
படுக்கையில் கிடந்துகொண்டே அந்த மனிதர் செய்யும் சேட்டைகளும், அநியாயங்களும் அதை சகித்து வாழும் மனைவியும், மகனும், மருமகளும்...
சொத்திற்காக சுற்றும் மகள்...
அந்த மனிதரை கொல்ல வரும் பகையாளி...
கிழவனின் பெண் தோழி(கள்)...
என நகரும் கதையில் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லை...
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்க இயலாது.
படுக்கை கிழவனின் மனைவியும், மகனும் மகத்தான கதாபாத்திரங்கள்.
சாக கிடக்கும் ஒரு மனிதனை வைத்து இத்தனை அழகான சினிமாவை தர மலையாளிகளாலே இயலும்.
ஒரு குடும்பத்தின் உளவியல் சிக்கல்களை கூறும் 'அப்பன்' மனித வாழ்வின் மறுபக்கம்.
***** ***** ***** *****
லியோ, திருவரம்பு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக