வட்டி விகித மாற்றம் குறித்து கடன் வாங்குபவர்களுக்கு வங்கி தெரிவிக்க தேவையில்லை: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்
மாறுபடும் வட்டி விகிதத்தில் (floating rate of interest) கடன் வாங்கி இருக்கும்பட்சத்தில் வட்டி விகித அதிகரிப்பு அல்லது குறைப்பு பற்றி கடன் வாங்குபவர்களுக்கு வங்கி தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கும் (ICICI Bank) அதன் வாடிக்கையாளருக்கும் இடையேயான சர்ச்சையில் சமீபத்திய தீர்ப்பில், புதுதில்லியின் தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் (National Consumer Disputes Redressal Commission - NCDRC) இதை தெரிவித்துள்ளது.
என்சிடிஆர்சியின் தலைமை உறுப்பினர் தினேஷ் சிங் மற்றும் உறுப்பினர் கருணா நந்த் பாஜ்பாய் ஆகியோர், மாநில நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து இவ்வாறு தீர்ப்பளித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக