ஐசிசிஐசி பேங்க் வீட்டுக் கடன்
வழக்கில் தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் அதிரடி உத்தரவு.. கடன்தாரர்களுக்கு கடும்பாதிப்பு?
வீட்டுக் கடன் வட்டி விகித மாற்றம் குறித்து கடன் வாங்குபவர்களுக்கு வங்கி தெரிவிக்க தேவையில்லை: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்
மாறுபடும் வட்டி விகிதத்தில் (floating rate) கடன் வாங்கி இருக்கும்பட்சத்தில் வட்டி விகித அதிகரிப்பு அல்லது குறைப்பு பற்றி கடன் வாங்குபவர்களுக்கு வங்கி தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
ஐசிஐசிஐ வங்கிக்கும் (ICICI Bank) அதன் வாடிக்கையாளருக்கும் இடையேயான சர்ச்சையில் சமீபத்திய தீர்ப்பில், புதுதில்லியின் தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் (National Consumer Disputes Redressal Commission - NCDRC) தெரிவித்துள்ளது.
என்சிடிஆர்சியின் தலைமை உறுப்பினர் திரு. தினேஷ் சிங் மற்றும் உறுப்பினர் திரு. கருணா நந்த் பாஜ்பாய் ஆகியோர், மாநில நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து இவ்வாறு தீர்ப்பளித்துள்ளனர்.
"மாறுபடும் வட்டி விகிதத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டிருக்கும்பட்சத்தில், ஒரு வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். இதற்கு புகார்தாரரிடமிருந்து கூடுதல் ஒப்புதல் பெறத் தேவையில்லை. வங்கிக்கும் புகார்தாரருக்கும் இடையே நிறைவேற்றப்பட்ட கடன் ஒப்பந்தத்தில், அது ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட அம்சம் ஆகும்."
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு எதிராக புது தில்லி மாநில ஆணையத்தை அணுகி 2019 ஆம் ஆண்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்ததாகவும், தனக்குத் தெரிவிக்காமல் மாதத் தவணைகளின் (EMI) காலத்தை விரிவுபடுத்தியதாகவும் வாடிக்கையாளர் குற்றம் சாட்டினார்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு எதிராக மாநில ஆணையம் (State Commission) முடிவு செய்தது. இழப்பீடு மற்றும் வழக்கு செலவுக்காக ரூ. 1 லட்சம் சேர்த்து மொத்தம் ரூ. 1.62 லட்சம் வங்கி வாடிக்கையாளருக்கு வழங்க உத்தரவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி என்சிடிஆர்சியில் மேல்முறையீடு செய்தது.
என்சிடிஆர்சி, வங்கியின் முறையீட்டை ஏற்றுக் கொண்டது. வங்கிக்கும் புகார்தாரருக்கும் இடையே நிறைவேற்றப்பட்ட கடன் ஒப்பந்தத்தில், மாறுபடும் வட்டி விகித விதிமுறையின்படி, "வட்டி விகிதத்தை அதிகரிக்க அல்லது குறைக்க வங்கிக்கு உரிமை உள்ளது" என்பதைக் கவனித்தது.
என்சிடிஆர்சி உத்தரவின்படி, புகார்தாரரிடமிருந்து மேலும் ஒப்புதல் எதுவும் பெறத் தேவையில்லை.
"வங்கி எந்தவொரு தவறான வழியிலும் வட்டி விகிதங்களை நிர்ணயிக்கவில்லை. பொருந்தக்கூடிய கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்பவே செயல்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கியின் தரப்பில் குறைபாடு அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் நிலைத்திருக்க முடியாது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்சிடிஆர்சி, மேலும் குறிப்பிட்ட தேதிகளில் வங்கி அதன் இணையதளத்தில் மாற்றத்திற்கான அறிவிப்புகளை வெளியிட்டது மற்றும் அவ்வப்போது வாடிக்கையாளருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்ட தேதிகளையும் சுட்டிக்காட்டியது.
வங்கி தாக்கல் செய்த மேல்முறையீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. குறைபாடு அல்லது சலுகை எதுவும் இல்லாமல், நல்ல எண்ண நடவடிக்கையாக வாடிக்கையாளருக்கு வங்கி ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக