Rent vs own சொந்த வீடா வாடகை வீடா எது சிறந்தது? க. முரளிதரன் நிதி ஆலோசகர் கடலூர்
நேற்று இளைஞர் ஒருவர் முதலீடு குறித்த ஆலோசனைகளை பெற என்னை நேரில் சந்தித்து பேசினார். 65 லட்சம் ரூபாய் விலையில் வீடு வாங்கலாம் என்று இருக்கிறேன்.
.
இதில் வீட்டுக் கடன் 60 லட்சம் ரூபாய் வாங்கி அதற்கான EMI 50000 அடுத்த 20ஆண்டுகளுக்கு செலுத்த முடியும் என்று சொன்னார். .
பத்திர பதிவு செலவு 6 லட்சம்.
அவர் 20 ஆண்டுகளில் செலுத்த போகும் வட்டி மட்டும் 60 லட்சம் ரூபாய் ஆகும்.
20 ஆண்டுகளில் செலுத்த போகும் வீட்டு வரி 2 லட்சம்.
அவர் வீட்டின் மொத்த அடக்க விலை 1.33கோடி. அடுத்த 20 ஆண்டுகளில் வீடு தேய்மானம் அடையும் விலை குறைந்த பட்சம் 30 லட்சம்.
ஆக அடுத்த 20 ஆண்டுகளில் அந்த வீட்டின் விற்பனை விலை அதிக பட்சமாக ஒரு கோடி என்ற அளவில் மட்டுமே இருக்கும்.
இதற்கு பதிலாக 50000 EMI தொகையில் 25000 ரூபாய்க்கு வாடகை வீட்டில் வசிக்கலாம். மீதமுள்ள 25000 ரூபாய்க்கு மியுச்வல் ஃபண்டில் ஒரு SIP துவங்கி அடுத்த 20 ஆண்டுகளில் செலுத்தி வந்தால் கிடைக்கும் முதிர்வு தொகை 3.62 கோடி என்ற தெரிவித்தேன்.
குறிப்பு: MF returns 12.5% என்ற அளவில் மட்டுமே கணக்கிட பட்டுள்ளது.
க. முரளிதரன்
நிதி ஆலோசகர் கடலூர்
இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா என்பதை இங்கே தெரிவிக்கவும்