வருங்கால வைப்பு நிதி மூலம் ஓய்வூதியம் பெறுவதற்கான உச்சநீதிமன்ற தீர்ப்பு சிறிது ஏமாற்றத்தை தந்துள்ளது.
13 உயர் நீதிமன்றங்களும், உச்சவரம்பு இல்லாத பென்ஷன் பெறுவது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களின் அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்த போதும், உச்ச நீதிமன்றம் அதற்கு முரணாக தீர்ப்பை எழுதியுள்ளது.
கேரள உயர்நீதிமன்றம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் டெல்லி உயர்நீதிமன்றம் மூன்றும் 2014ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டு வந்த employee's pension scheme 1995 ல் செய்யப்பட்ட திருத்தம் செல்லாது என சட்ட ரீதியாக அறிவித்ததற்கு மாறாக, உச்சநீதிமன்றம் மோடி அரசு எழுதிக் கொடுத்த தீர்ப்பை அப்படியே வாசித்து இருக்கிறது.
இருந்தாலும் தீர்ப்பில் நமக்கு சில ஆறுதலான விஷயங்கள் இருக்கின்றன அதனை பார்ப்போம்.
நாம் employees pension scheme 95 பிரிவு 11(3) கீழும், உச்சநீதிமன்றத்தில் 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஆர் சி குப்தா வழக்கின் தீர்ப்பு அடிப்படையிலும் ஓய்வூதியம் கேட்டு வழக்கு தொடுத்திருந்தோம்
.ஆனால் உச்ச நீதிமன்றம் பிரிவு11(3) ரத்து செய்யப்பட்டது செல்லும் எனவும், பிரிவு 11(4)ன் கீழ் நீங்கள் ஓய்வூதியம் பெறலாம் எனவும் தீர்ப்பில் கூறியுள்ளது. அதேபோல் ஆர் சி குப்தா வழக்கு 2014 க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், அவர்கள் 2014 க்கு முன்பே விருப்பம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றது.
2014ஆம் ஆண்டு மோடி அரசால் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தில் பென்ஷன் பெறுவதற்கு கூடுதலாக 1.16% செலுத்த வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் நீக்கி உள்ளது. இதற்காக பாராளுமன்றத்தில் ஆறு மாத காலத்திற்குள் 2014 amendment ல் திருத்தம் கொண்டு வர அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நாம் பிரிவு 11(3)ன் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கு கடிதம் கொடுத்திருந்தோம். நாம் மீண்டும் பிரிவு 11 (4) ன் கீழ் கடிதம் கொடுத்து பென்ஷன் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்கு 4 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரிவு 11 (4)ன் கீழ் பென்ஷன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பார்ப்போம்.
உதாரணத்திற்கு ஒரு ஊழியர் 01/09/1996 ல் பணியில் சேர்ந்து 31/08/2025. ல் ஓய்வு பெறுகிறார் என்றால் அவர் பெறும் பென்ஷன்.
01/09/1996 லிருந்து 31/08/2014 வரை ஒரு கணக்கீடு. பணிக்காலம் 18 வருடம்
கடைசி 12 மாத சராசரி சம்பளம் (basic+da)ரூ 25000 என்றால்
Pensionable service (18)×pensionable salary (25000)/70=6428.57
பென்ஷன் 6,428 ரூபாய்
அடுத்து 01/09/2014 முதல் 31/08/2025 வரை பணிக்காலம் 11 வருடம். 60 மாத சராசரி சம்பளம்
2020ம் வருடம் ரூ 50000 basic Da
2021ம் வருடம் 52,000
2022ம் வருடம் 54,000
2023 ம் வருடம் 56000
2024 ம் வருடம்
58000 என்றால் சராசரி சம்பளம் 60 மாதத்திற்கு 54000
Pensionable salary (54000)×pensionable service (11)/70=8485.71
Total=6428+8485=
14913
14913/service (29வருடம்)=514.25
20 வருடம் பணி செய்தால் இரண்டு ஆண்டுகள் போனஸ். அதன்படி
514.25×31=15942.
ஆக இவர் பெரும் பென்சன் தொகை 15942.
இந்த அடிப்படையில் தான் பென்ஷன் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் தங்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும் என்பதை கணக்கீடு செய்து கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக