புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும்
நாக்கு ஒன்று தான்
வெற்றிக்கும் தோல்விக்கும்
களம் ஒன்று தான்
இரவுக்கும் பகலுக்கும்
நாள் ஒன்று தான்
நன்மைக்கும் தீமைக்கும்
விதி ஒன்று தான்
வாழ்வுக்கும் தாழ்வுக்கும்
வாழ்க்கை ஒன்று தான்
வரவுக்கும் செலவுக்கும்
பொருள் ஒன்று தான்
அன்பிற்கும் ஆத்திரத்திற்கும்
இதயம் ஒன்று தான்
உள்ளம் தராசு ஆனால்
ஏற்றத்தாழ்வு இல்லை
கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே!