LIC எல் ஐ சி முதலீடு செய்து உள்ள பங்குகள் விவரம் இதோ
இந்தியாவின் ஒரே பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்ஐசி ஆகும்.
இந்திய பங்குச் சந்தை அவ்வப்போது அதிகம் இறங்காமல் தடுப்பது இந்த எல்ஐசி நிறுவனம் தான்
சந்தை மிகவும் அதிகமாக இறங்கும் சூழ்நிலையில் இந்த நிறுவனம் நன்றாக விலை இறங்கி இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யும் போது பங்குகள் விலை ஏறி பங்குச்சந்தை தானே ஏற்றம் காணத் தொடங்கும்.
இந்த நிறுவனம் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் அதிக பங்கு முதல் தினத்தை போட்டிருக்கிறது உதாரணத்திற்கு பல்துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் மிக அதிக முதலீடு செய்திருக்கிறது. மற்றொரு பல்துறை மற்றும் முன்னணி நுகர்வோர் துறை நிறுவனமான ஐடிசி ல் இந்த நிறுவனம் அதிக பணத்தை போட்டு இருக்கிறது
இதனை அடுத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ் இன்போசிஸ் ஆகியவற்றில் அதிக முதலீடு செய்திருக்கிறது.
இந்தியாவின் முன்னணி வங்கிகளான ஐசிஐசிஐ பேங்க், எஸ் பி ஐ, hdfc, ஐடிபிஐ ,கோடக் மகேந்திரா, ஆக்சிஸ் பேங்க் ஆகியவற்றிலும் எல்ஐசி நிறுவனம் மிக அதிக முதலீட்டை மேற்கொண்டிருக்கிறது.
இதைத் தவிர எல்என்டி ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்களிலும் இந்த நிறுவனம் அதிக முதலீட்டை மேற்கொண்டுள்ளது.
நாட்டில் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி மிக அதிக முதலீட்டை செய்திருக்கிறது உதாரணமாக அதானி போர்ட்ஸ், அதானி என்டர்பிரைசஸ், அதானி கேஸ் உள்ளீட்ட நிறுவனங்களில் அதிக பணத்தை போட்டுள்ளது.
இந்த முதலீடு நீண்ட காலத்துக்கானது சிறு முதலீட்டாளர்கள் எல்ஐசி பார்த்து முதலீடு செய்யும் முன் அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் இந்த நிறுவன பங்கின் விலை எதிர்காலத்தில் எப்படி ஏறும் என்கிற விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து அதன் பிறகு தான் முதலீட்டு முடிவு எடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக