மொத்தப் பக்கக்காட்சிகள்

Health ஆழ்ந்த தூக்கம் ஏன் அவசியம் தேவை?

ஆழ்ந்த தூக்கம்  ஏன் அவசியம் தேவை?


_தூக்கம் மனிதனுக்கு அவசியத் தேவை. ஒருவருடைய ஆழ்ந்த தூக்கமே அவரை எப்போதும் விழிப்பு உடையவராக இருக்கச் செய்யும்._

_*ஆழ்ந்த தூக்கம் தான் மனிதனை ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.*_

_இந்தத் தூக்கம் தான் உடலில் வளர்சிதை மாற்றம் நன்கு நடைபெற்று உடல் வளர்ச்சி அடைய பெரிதும் உதவுகிறது._

_*அனைத்து உறுப்புகளும் புத்துணர்வும் பலமும் பெற ஏதுவாகிறது.*_

_நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. நரம்பு, தசை, எலும்பு சம்பந்தப்பட்ட மண்டலங்களைப் பலப்படுத்துகிறது._

_*மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எது சரியில்லாமல் போனாலும்*_ _*முதலில்*_
_*பறி போவது*_ _*தூக்கம் தான்.*_

_தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஒரு நாளின் வெற்றி என்பது அதற்கு முந்தைய இரவில் நாம் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்பதைப் பொருத்தே அமைகிறது._

_*இரவு சரியாக தூங்கவில்லையெனில் அடுத்த நாள் முழுவதும் பதட்டத்துடனும், கோபத்துடனும் பெரும்பாலானவர்களுக்கு அந்த நாள் செல்கிறது.*_

_அன்றைய நாளின் சோர்வுக்கு மருந்தாகவும், அடுத்த நாள் வேலைக்கு விதையாகவும் இருப்பது நிம்மதியான தூக்கம் தான்._

_*தூக்கம் போனாலே நிம்மதி போய் விடும். ஆரோக்கியம் போய் விடும்..*_

_இன்றும் லட்சக்கணக்கானோர் தூக்கத்தைத் தொலைத்த வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்..._

_*நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்திற்குப் பல வழிமுறைகள் உள்ளன. அவை...*_

_இரவு தூக்கம் தான் நல்லது. பகலில் சாப்பிட்டப் பிறகு 20 நிமிடங்களுக்குத் தூங்கலாம். ஆனால், நீண்ட நேரம் தூங்கக் கூடாது._

_*மனித ஆரோக்கியத்தையே ஆட்டிப் பார்க்கும் தூக்கத்தைப் பெற முறையான உணவும், உடற்பயிற்சியும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.*_

_நிம்மதியான தூக்கத்தைப் பெற நினைப்பவர்கள், அமைதியான, காற்று வசதி நன்கு கொண்ட அறையில் தூங்க வேண்டும்._

_*மெத்தை மற்றும் தலையணைகள் சரியான நிலையில் இருக்க வேண்டும்.*_
_*காலையில் எழும் போது முகுது வலி, கழுத்து வலி, உடல் வலி போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால் உங்கள் படுக்கை சரியில்லை என அர்த்தம்.*_

_சத்தம் இல்லாத சுற்றுச்சூழலில் தூங்குவதும் முக்கியம்._
_விளக்கு வெளிச்சத்தில் தூங்காமல், இருள் நிறைந்த அறையில் தூங்க வேண்டியது அவசியம்._

_*இரவு நேரத்தில் அதிக நீர் அருந்துவது உங்கள் தூக்கத்தை கெடுக்கக் கூடியது. தாகத்தால் தூக்கம் கெடாமலிருக்க தூங்குவதற்கு முன்னரே போதுமான அளவு தண்ணீர் குடித்து விட வேண்டும்.*_

_அதே நேரம் இரவில் உடலில் அதிகமாக சேர்ந்துள்ள சிறுநீரை வெளியேற்ற நீங்கள் எழ வேண்டியிருக்கும்._

_*உடலின் கடிகாரத்தை முதலில் சீராக்குங்கள். சாப்பிடுவது, படுக்கைக்குச் செல்வது, எழுவது என அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதை வழக்கமாக்குங்கள்.*_
_நேரத்திலேயே உறங்கி நேரத்திலேயே எழும் பழக்கத்தை உருவாக்குங்கள்...._

_*முறையான நேரப்படி, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் தூக்கமின்மை தொந்தரவு தீரும்.*_

_மன அழுத்தத்தையும் குறைக்க வேண்டும். இல்லை என்றால் தூக்கமின்மை தீராத துன்பத்தைக் கொண்டு வந்து சேர்த்து விடும்.._


_*மனித வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கம் தான். நாம் பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்க உதவுவது , இரவில் நாம் மேற்கொள்ளும் ஆழமான தூக்கம் தான்..*_

_உடலும் ,மனமும் ஒருங்கே ஓய்வு எடுத்தால் தான் சிறந்த தூக்கம் உண்டாகும் .._
_களைப்புற்ற உடல் உறுப்புகள் மற்றும் மனதிற்கு_ _இயற்கை கொடுத்த ஓய்வு தான் தூக்கம் என்பது._

_*எல்லாவற்றிற்கும் மேலாக ஒழுக்கமும் , சுயகட்டுப்பாடும் இருக்கும் ஒருவருக்கு தூக்கம் என்பது ஒரு ஆனந்தமான பயணம்..*_
_*இந்த ஆனந்தத்தினால் நல்ல ஆரோக்கியம் பெறலாம்.............*_ 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...