டிஜிடல் கரன்ஸி என்றால் என்ன?
*அது எப்படி பிஸிகல் கரன்ஸியில் இருந்து வேறுபடுகிறது?*
நம் இந்திய அரசு
Nov 1, 2022 முதல் Digital Currency-யை Pilot Run ஆக ஆரம்பித்துள்ளது.
இந்திய சரித்திரத்தில் முக்கியமான முடிவு என்றே சொல்லலாம். இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினைகள் பலவற்றிற்கு இது முடிவுகட்டும்.
கருப்பு பணம், சட்டத்திற்கு புறம்பான பரிவர்த்தனையின் மூலத்தை ஆராய்தல், தடுத்தல் என்று இதன் மூலம் நாட்டிற்கு பல பயன்கள். தேசத்தை மதிக்கும் நல்லவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Digital Currency-யை புரிந்து கொள்ளும் முன், இப்போது இருக்கும் கரன்ஸியை பற்றிய அடிப்படை புரிதலும், அதில் இருக்கும் பிரச்சினைகளை பற்றியும் தெரிந்திருந்தால் டிஜிட்டல் கரன்சியை பற்றி இன்னும் கூடுதலான புரிதல் கிடைக்கும்.
நான் தென் ஆப்ரிக்காவில் தங்க சுரங்கத்தில் வேலை பார்க்கிறேன். என்னிடம் 1 கிலோ தங்கம் இருக்கிறது. நான் இந்தியாவில் வியாபாரம் செய்ய வேண்டும்.
எனது தங்கத்தை நான் RBI இடம் கொண்டு கொடுத்தால், அதற்கு இணையான பணத்தை எனக்கு இந்திய கரன்ஸியான ரூபாய் நோட்டுக்களாக கொடுக்கிறார்கள். அதை வைத்து வியாபாரம் செய்து லாபம் ஈட்டிவிட்டேன்.
இப்போது லாப பணத்தை பேங்க் மூலம் என் நாட்டிற்கு அனுப்பிவிட்டேன். தங்கத்துக்கு உண்டான பணத்தை RBI-ல் கொடுத்து மீண்டும் தங்கத்தை பெற்று கொள்கிறேன்.
ஆம். நம் ரூபாய் நோட்டுக்களின் அடிப்படை அப்படித்தான் உள்ளது.
இப்படி இந்திய ரிசர்வ் வங்கி அடிக்கும் நோட்டுக்கு இணையாக தங்கத்தை இந்தியா வைத்திருக்கும். நாம் அந்த நோட்டுக்களை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்கிறோம்.
இதில் தற்போது சம்பளம் வாங்கி, கிரிடிட் கார்ட் பில், வீட்டு லோன், கார் லோன் EMI எல்லாம் வங்கியில் இருந்து அப்படியே மாற்றிவிடுகிறோம். அப்போ அது Digital Currency அல்லவா?
இல்லை. அது Digital Transaction.
அதாவது என் Salary Account SBI Bank-ல் இருக்கிறது. எனது வீட்டு லோன் ICICI Bank-ல் இருக்கிறது. NEFT மூலம் Transfer செய்துவிட்டேன். நான் பணம் எதுவும் எடுத்து கொடுக்கவில்லை. ஆனால் எனக்கு பதிலாக அந்த நாளின் முடிவில் என் SBI வங்கி, லோனுக்கு உரிய Physical Currency-யை ICICI-க்கு ரூபாய் நோட்டுக்களாக சென்று கொடுத்துவிடும்.
அதேபோல் நாம் நினைத்தால் அந்த பணத்தை ATM-ல் Cash ஆக எடுத்துக்கொள்ளலாம். அல்லது Cash ஆகவே எடுத்து ICICI வங்கியில் Cash ஆகவே EMI செலுத்தி விடலாம். ஆனால் Digital Currency-யில் அந்த பணத்தை ஒருபோதும் Cash ஆக எடுக்கவே முடியாது.
இதனால் என்ன லாபம்?
1️⃣ ரூபாய் நோட்டுக்களை அடிக்க நிறைய செலவு ஆகிறது. உதாரணமாக ₹500 நோட்டு அடிக்க ₹2.57 செலவாகிறது.
2️⃣ அந்த நோட்டுக்கள் சில வருடங்களில் கிழிந்து போய்விடுகிறது. அதனால அதை மீண்டும் அடிக்க வேண்டிய பராமரிப்பு தேவை உள்ளது.
3️⃣ என்னதான் பாதுகாப்புகள் இருந்தாலும், Counterfeit Currency என்று கள்ள நோட்டுக்களை அடிக்க முடிகிறது. நம்ம ப.சி கொடுத்த ரூபாய் அடிக்கும் மெஷின்களை வைத்து, நமது இந்திய ரூபாய் நோட்டுக்களை பாகிஸ்தான் கண்டெய்னர் கண்டெய்னராக அச்சடித்து, அதை வைத்தே தீவிரவாதத்தை பரப்பி வாழ்ந்து வந்தது. Demonetization செய்தது முக்கியமாக அதையும் தடுக்கத்தான். நமது நாட்டு பணத்தை மதிப்பிழப்பு செய்தவுடன் பாகிஸ்தான் விரைவில் பிச்சைக்கார நாடாகியது.
4️⃣ மேற்சொன்ன உதாரணத்தில் நான் GPay மூலம் என் வீட்டு லோன் கட்டினாலும், அந்த வங்கிகளுக்கு இடையே பணம் வாகனங்கள் மூலம் பாதுகாப்புடன் எடுத்து செல்ல வேண்டி இருக்கிறது. அதற்கும் செலவுகள் அதிகமாகிறது.
5️⃣ ரூபாய் நோட்டுக்களை இந்தியாவில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் அது வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அதை முழுவதுமாக தடுக்க முடிவதில்லை.
6️⃣ கருப்பு பணம் என்பதற்கு முக்கிய காரணம் Physical நோட்டுகளே..
7️⃣ கரன்ஸி நோட்டுகளால் சட்டத்திற்கு உட்பட்ட பரிவர்த்தனை மட்டுமல்லாமல், சட்டத்திற்கு புறம்பான கஞ்சா விற்பது, லஞ்சம் வாங்குவது போன்றவற்றையும் செய்ய முடியும். அதனால் பல சட்டத்திற்கு புறம்பான காரியங்களும் அதன் மூலமாகவே நடக்கிறது.
8️⃣ பணமாக வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, கொள்ளை அடிக்க அது அனுமதிக்கிறது.
டிஜிட்டல் கரன்சியில் திருட்டு என்பது கிட்டத்தட்ட முடியாத ஒன்று. அதையும் மீறி ஏமாற்றியோ, மிரட்டியோ நம் பணம் திருடப்பட்டால், ஒரே ஒரு தகுந்த ஆதாரத்துடன் கூடிய புகாரின் மூலம் எளிதில் நம் பணத்தை திரும்ப பெற முடியும்.
9️⃣ வரி ஏய்ப்புகளுக்கும் முக்கிய காரணம் ரூபாய் நோட்டுகளாக இருப்பதால்தான். உதாரணமாக, தங்கம் கார்டில் வாங்கினால் 2.5% GST. ஆனால் cash கொடுத்தால் வரியினை தவிர்க்க முடியும் எனும்போது, நம்மை அறியாமல் கருப்பு பணத்தை ஊக்குவிக்கிறோம்.
இப்படி பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
டிஜிடல் கரன்ஸி என்பது எப்படி இருக்கும்?
நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டுக்களில் ஒரு எண் இருக்கும். அந்த எண் வேறு எந்த நோட்டிலும் இருக்காது, இருக்கக்கூடாது. அதாவது Unique Serial Number. அது போலவே டிஜிடல் கரன்ஸியிலும் ஒரு எண் இருக்கும். அது Encrypt செய்யப்பட்டிருக்கும். அதை RBI பிரிண்ட் செய்யும் முன், அதற்கு இணையான தங்கத்தை தன்னிடம் அடமானமாக வைத்துக்கொண்டு, கிரிப்டோ கரன்ஸியாக வங்கிகளுக்கு கொடுக்கும்.
எனக்கு நாளை ஆபீஸில் சம்பளம் கொடுக்கும்போது அதை Digital Currency-யாக கொடுத்தால், அது கம்பெனியின் வங்கி கணக்கில் இருந்து என் அக்கவுண்டிற்கு வந்து சேரும். அதாவது Encrypt செய்யப்பட்ட கிரிப்டோ நோட்டுகள் என் கணக்கில் வந்து சேரும்.
அதை நான் ICICI வங்கிக்கு EMI கட்டினால், அதற்கு இணையான Digital Currency-யை அந்த வங்கிக்கு RTGS, NEFT போன்ற ஏதாவது ஒரு வகையில் RBI மூலமாக மாறிவிடும். அல்லது நேரடியாக CBDC மூலமாக அது நடக்கலாம்.
இங்கே இந்த டிஜிடல் கரன்சிக்கு எனக்கு வங்கி கணக்கு கூட தேவையில்லை என்கிறார்கள். அப்படியே இருந்தாலும் RBI-யே எனது வங்கியாக செயல்படும்.
அல்லது RBI-க்கு பதிலாக, CBDC (Central Bank of Digital Currency) எனும் அமைப்பு நமது வங்கியாக செயல்படும்.
இந்த டிஜிடல் கரன்ஸி என்பதை எங்கேயும் பிஸிகலாக ஒரு போதும் பயன்படுத்த முடியாது. ATM-ல் கூட எடுக்க முடியாது. அதன் மூலம் மேற்சொன்ன 9+ பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
நாளை ஒரு அமைச்சருக்கு அரசு வேலை வாங்க காசு கொடுக்க வேண்டுமெனில், டிஜிடல் கரன்ஸியில் கொடுத்தால் மாட்டிக்கொள்வார்கள்.
இப்போதைக்கு டிஜிட்டல் கரன்சியை Wholesale CBDC என்ற பெரிய நிறுவனங்கள், வங்கிகள் போன்றவை மட்டுமே பயன்படுத்த போகிறது.
அதை Pilot Run ஆக நவம்பர் 1, 2022 முதல் தொடங்கி இருக்கிறார்கள். அடுத்து Retail CDBC வரும்போது நம்மை போன்றவர்கள் பயன்படுத்தலாம்.
முதலில் பாதி சம்பளம் Physical Currency-யாகவும், மீதியை Digital Currency ஆகவும் என்பது போல கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் Digital Currency-க்கு மாற்றி விடுவார்கள்.
கடைசியில் ஒரு நாள் இனிமேல் ரூபாய் நோட்டுக்களே செல்லாது என்று சொல்வார்கள். அப்போது நாம் நம்மிடம் இருக்கும் பணத்தை RBI அல்லது CDBC-யிடம் கொடுத்து, அதற்கு இணையான Digital Currency-யை நம் கணக்கில் வரவு வைத்துக்கொள்ள முடியும்.
சரி, நமக்கு ஓகே. ஊரை ஏய்த்து, உலையில் போட்டு, மூட்டை மூட்டையாய் வைத்திருகிறானே, அவன் என்ன செய்வது?
அவ்வாறு பணம் வைத்திருப்பவர்கள் கடந்த கால வருமான வரி சான்றிதழ் மூலம், நேர்மையான முறையில் சம்பாதித்த பணத்தை எளிதாக டிஜிட்டல் கரன்சியாக மாற்ற முடியும். அதற்கு வழியில்லாத அளவிற்கு தவறான முறையில் சேர்த்த பணமெல்லாம் கடந்தமுறை பண மதிப்பிழப்பிற்கு பின்பு குப்பையானது போல போய்விடும்.
இதுவரை 10+ நாடுகள் தங்கள் கரன்ஸியை டிஜிட்டலுக்கு மாற்றி உள்ளார்கள்.
50+ நாடுகள் நம்மை போல Pilot Run-ல் உள்ளார்கள். அதில் ரஷ்யாவும் ஒன்று. இதுவரை 12 நாடுகள் முயற்சி செய்து தோல்வியும் அடைந்துள்ளது.
இந்த Digital Currency என்பது Bitcoin போல Encrypt செய்யப்பட்ட எண்களை கொண்டது. அதன் BlockChain மூலம் அதன் ஆதியும், அந்தமும் அறிய முடியும் என்பதால் ஏமாற்றுவது சிரமம்.
நம் இந்திய அரசின் Digital Currency-யை *e₹* என்ற குறியீட்டின் மூலம் வேறுபடுத்துகிறார்கள். இதுவும் Bitcoin என்பதும் வேறு.
BitCoin-ஐ எந்த அங்கீகரிக்கப்பட்ட நாடுகளும் ஏற்கவில்லை என்பதால் அது illegal currency.
அனைத்து வகையான Digital Currency-யையும் பொதுவாக Crypto Currency என்றுதான் சொல்கிறார்கள். ஐ.நா சபையின் கணக்கின்படி, 2021-ல் 7.3% இந்தியர்கள் Crypto Currency வைத்திருந்தார்கள் என்கிறது. அது BitCoin போன்ற சட்டத்திற்கு புறம்பானவை.
ஆனால் *e₹* என்பது நமது நாட்டின் சட்ட திட்டத்தின் படி, நமது நாட்டிற்காக, நமக்காக உருவாக்கப்பட்டது. எனவே இது நடந்து முடிந்தால் கருப்பு பணம் எல்லாம் பெரியளவில் இருக்காது என்பது நிதர்சனம். மோடி என்னத்தை கிழித்தார் கருப்பு பணத்தை தடுக்க என்று கேள்வி கேட்பவர்களுக்கு, இது புரிந்தாலே காய்ச்சல் வரலாம்.
_முதுகுவலியும் சேர்ந்து வரலாம்._
கடந்த சில ஆண்டுகளாக கருப்பு பணம் சம்பந்தமாக பல மாற்றங்கள், உத்திகள் *தொடர்ந்து* மத்திய அரசால் முயற்சிக்கப்பட்டு கொண்டே வந்துள்ளன. அதில் இதுவும் ஒன்று. ஆனால் இதோடு இது நின்று விடாது. ஊழல், கருப்பு பணத்திற்கு எதிராக நிரந்தர தீர்வு என்று ஒன்று கிடைக்கும் வரை இதுபோல் பல சோதனை முயற்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
ஊழல், கருப்புப்பணம், லஞ்சம், திருட்டு எல்லாம் நம் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் பலவகையான கேன்சர் நோய்கள். அவை அனைத்திற்கும் சிறந்த ஒரே மருந்தாக, சர்வரோக நிவாரணியாக, இந்த Digital Currency என்பது பெரிய அளவில் உதவும் என்றே சொல்லலாம்.
வரி ஏய்ப்புகள் பெரிய அளவில் தடுக்கப்படும். சட்டத்திற்கு புறம்பான பண பரிவர்த்தனைகள் மிகப்பெரிய அளவில் சரியும்.
_*ஒரு நாட்டின் தலைமை ஊழலற்று,*_
*_எதன் மீதும் பற்றற்று,_*
*_தேசத்தின் வளர்ச்சி மீது மட்டுமே மாபெரும் காதல் கொண்டு இருக்குமாயின்,_*
*_நேர்மையாக வரியை கட்டுவதில் எந்த தவறும் இல்லை._*
கடந்த சில ஆண்டுகளில் நடந்த ஓரளவு சீர்திருத்தத்திற்கே இந்தியா இந்த அளவு முன்னேறி உள்ளது என்றால், இன்னும் சில ஆண்டுகளில் நாம் கட்டும் வரிப்பணம் *முழுவதும்* இந்தியாவின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படக்கூடிய சூழலில் இந்தியாவின் வளர்ச்சி எத்தனை வேகமாக, வலிமையாக இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்.
*புதிய தலைமை,*
*புதிய பாரதம்.*
*ஜெய் ஹிந்த்.*
🇮🇳🇮🇳🇮🇳