ஓசூருக்கான புதிய நகர மேம்பாட்டுத் திட்டம்: கிரெடாய் தமிழ்நாடு வரவேற்பு
~ தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நகரங்களுக்கான பிரதான திட்டத்தை அறிவிக்க அரசுக்கு வேண்டுகோள் ~
சென்னை, நவ.23 2022: ஓசூருக்கான புதிய நகர மேம்பாட்டுத் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பது குறித்து இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (கிரெடாய்) தமிழ்நாடு மண்டலம் வரவேற்றுள்ளது. ஓசூர் நகரம் 190.20 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளது.
இது குறித்து கிரெடாய் தமிழ்நாடு மண்டல தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் கூறுகையில், ஓசூர் நல்ல தொழில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், கட்டுமானத் துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பிற வளர்ச்சி திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில் புதிய நகர மேம்பாட்டுத் திட்டம் தற்போதை காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும். மாநிலத்தில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட நகரங்களில் பிரதான திட்டங்களை செயல்படுத்துமாறு நாங்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம் என்று தெரிவித்தார்.
கிரெடாய் தமிழ்நாடு பற்றி :
கிரெடாய் தமிழ்நாடு (இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு) 21 மாநில மண்டலங்கள் மற்றும் 221 நகர மண்டலங்கள் மூலம் 13 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கிரெடாய் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கிரெடாய் தமிழ்நாடு என்பது தமிழ்நாடு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரிவாகும். இது மாநிலத்தின் ஒன்பது குறிப்பிடத்தக்க நகர மண்டலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சங்கம் ஆகும். இதில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, ஈரோடு, திருநெல்வேலி, தர்மபுரி, ஓசூர் மற்றும் சேலம் உள்ளிட்ட இடங்களில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதன் முக்கிய நோக்கம் வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாடு தொடர்பான செயல்பாடுகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து வர்த்தகத்தை மேம்படுத்துவதோடு, கட்டுமான நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுவதாகும்.
தொற்று நோய் காலத்தில், கிரெடாய் தமிழ்நாடு சார்பில், அதன் பிராந்திய மண்டலங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் ஈரோடு ஆகியவை இணைந்து தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் குறுகிய காலத்தில் பல கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவுடன் 13 மாவட்டங்கள் மற்றும் 39 இடங்களில் 5500 இடைக்கால ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை தமிழகம் முழுவதும் இது ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன் 7 கொரோனா சிகிச்சை மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் ஒவ்வொரு மையங்களும் 5 நாட்களுக்குள் அமைக்கப்பட்டது குறிப்படத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக