2016 நவம்பர் பண மதிப்பு நீக்க திட்ட பிறகு இந்தியாவில் பொதுமக்களிடம் உள்ள ரூபாய் தாள்கள் கரன்சி ரூ.30.88 லட்சம் கோடியாகி 71.84 சதவீதம் அதிகமாக உள்ளது.
நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை அறிவித்தார்.
பொருளாதாரத்தில் ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
மோசமான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டிற்காக பல நிபுணர்களால் விமர்சிக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் நோக்கம், இந்தியாவை "குறைவான பண, பணமில்லா பரிவர்த்தனை" பொருளாதாரமாக மாற்றுவதாகும் என்றார்.
ஆனால் அதற்கு எதிர்மறையாக இப்போது மக்கள் வசம் யாராலமான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன