குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும் பத்திரிகையாளர்கள் காட்சி ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துகள்
National Journalist Day
இந்த பத்திரிக்கையாளர் தினத்தை ஓட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பத்திரிக்கையாளர் நல வாரியம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.
அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.
இந்த பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் பத்திரிக்கை நிருபர்கள் உதவி ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.
தற்போதைய நிலையில் அரசு அங்கீகார அடையாள அட்டை மற்றும் அரசு செய்தியாளர் அடையாள அட்டை இலவச பேருந்து பயண அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
இவர்களுடன் செய்தி தொடர்பாக மற்றும் கட்டுரை தொடர்பாக பணிபுரியும் அனைவரையும் நல வாரியத்தில் சேர்த்துக் கொள்ள நிதி முதலீடு கேட்டுக் கொள்கிறது.