Share Trading
பங்கு வர்த்தகம் சென்னையின் பங்களிப்பு எவ்வளவு தெரியுமா?
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்குச்சந்தை முக்கிய பங்காற்றி வருகிறது.
நிறுவனங்கள் அதன் வளர்ச்சிக்கு தேவையான பணத்தை வட்டி இல்லாமல் பெற பங்குச் சந்தை ஒரு முக்கியமான கருவியாக இருக்கிறது.
நிறுவனங்கள் பங்கு வெளியிட்டு பொதுமக்களில் இருந்து பணம் திரட்டுகின்றன இந்த பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டு வர்த்தகம் ஆகின்றன.
இப்படி பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளில் நாம் அவர்கள் டிரேடிங் என்கிற வர்த்தக மேற்கொள்வது நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதமாக இருக்கிறது.
முதலீட்டின் அளவும் கிட்டத்தட்ட இதே அளவுக்கு தான் இருக்கிறது.
அண்மைக்காலத்தில் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டுகள் மூலம் இந்தியர்களிடையே பங்கு சார்ந்த முதலீடுகள் பிரபலமாகி வருகின்றன.
அதற்கு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற SIP எஸ்ஐபி மிகவும் உதவி வருகிறது. இதன் மூலம் மட்டும் மாதத்திற்கு 12 ஆயிரம் கோடி மியூச்சுவல் பண்டு முதலீட்டுக்கு வருகிறது.
நீங்கள் பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்து இருக்கிறீர்களா? மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்தீர்களா?
லாபம் பெற்று இருக்கிறீர்களா என்பதை இங்கு பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.