Life insurance agent
இந்தியா 25 லட்சம் ஆயுள் காப்பீட்டு ஏஜெண்டுகள்
இந்தியாவில் கடந்த ஓராண்டில் மட்டும் புதிதாக ஒரு லட்சம் ஏஜெண்டுகள் பணியில் சேர்ந்து இருப்பதாக லைப் இன்சூரன்ஸ் கவுன்சில் தெரிவித்துள்ளது
ஆயுள் காப்பீட்டு ஏஜென்ட்களின் எண்ணிக்கை 2022 செப்டம்பர் மாதத்தில் 25 லட்சமாக அதிகரித்துள்ளது இது கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பரில் 24 லட்சமாக இருந்தது. இது நான்கு சதவீத வளர்ச்சியாகும்
25 லட்சம் ஏஜெண்டுகளில் எல்ஐசி 53% பங்களிப்பை கொண்டுள்ளது .அதாவது எல்ஐசிக்கு மட்டும் 13 லட்சத்து 34,000 ஏஜெண்டுகள் இருக்கிறாரகள்.
அதே நேரத்தில் வளர்ச்சி என்கிற போது தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்களில் தான் புதிதாக அதிக ஏஜெண்டுகள் பணியில் சேர்ந்து இருக்கிறார்கள்
கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் தனியார் நிறுவனங்களில் இன்சூரன்ஸ் ஏஜெண்டாளாக சேர்ந்திருக்கிறார்கள்.
எல்ஐசி யில் 9 ஆயிரம் ஏஜெண்டுகள் குறைந்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் மொத்தம் 11 லட்சத்தி 66 ஆயிரம் பேர் ஏஜெண்டுகளாக பணிபுரிகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக