Insurance பிரதமர் காப்பிட்டுக்கு பிரீமியம் கட்டி விட்டீர்களா?
இந்தியாவில் ஒரே பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வங்கிகள் மூலம் செயல்படுத்தும் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு நடைமுறையில் உள்ளது.
இரண்டு லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுக்கு ஆண்டு பிரிமியம் 436 ரூபாயாகும்.
இதில் சேர 18 வயது முதல் 50 வயது வரை தகுதி ஆகும். இதற்கான பிரிமியத்தை ஆண்டுதோறும் கட்டி வர வேண்டும். இந்தத் திட்டம் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என அழைக்கப்படுகிறது.
விபத்து காப்பீடு பாலிசியில் இரண்டு லட்ச ரூபாய் வரைக்கும் கவரேஜ் அளிக்கப்படுகிறது. இதற்கான பிரிமியம் ஆண்டுக்கு 20 ரூபாய் மட்டுமே. இந்தத் திட்டத்தில் சேர 18 வயது முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டுதோறும் பிரீமியம் கட்டி இந்த பாலிசியை புதுப்பிக்க வேண்டும். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது இந்த திட்டத்தின் பெயராகும்.
இந்த பாலிசிகளுக்கான பிரிமியம் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும் எனவே வங்கி கணக்கில் போதிய அளவுக்கு பணத்தை வைத்திருக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக