சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்: சிறிய வர்த்தகர்கள், கடைகளுக்கு தனித்துவ கடனுதவி
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் சிறிய வர்த்தகர்கள் மற்றும் கடைகளுக்கு ஏற்ற விதத்தில் தனித்துவமான வணிக கடனுதவித் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது
இப்பிரிவினருக்கு சேவையளிக்க மதுரையில் பிரத்தியேகமான கிளையைத் துவக்கியுள்ளது
மதுரை, அக்டோபர் 5, 2022:
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் சிறிய வர்த்தகர்கள், கடைகள் மற்றும் வர்த்தக உரிமையாளர்களுக்கு ஏற்ற தனித்துவமான வணிக கடனுதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகையில் மதுரையில் இன்று சிறு வணிக கடனுதவிக்காக பிரத்தியேகமான கிளை ஒன்றை இந்நிறுவனம் துவக்கி வைத்தது. வர்த்தகர்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் செயல்பாட்டு மூலதனத்திற்கும் தேவைப்படும் தொகைக்கு அவர்கள் குடியிருக்கும் வீட்டுப் பத்திரங்களுக்கு எதிராக சிறு வணிக கடனுதவியை அளிப்பதை இக்கிளை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று தென்காசியில் அதன் மற்றொரு பிரத்தியேகமான சிறு வணிக கடனுதவி வழங்கும் கிளையை துவக்க உள்ளது.
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர். திரு. லக்ஷ்மி நாராயணன் துரைசாமி கூறும்போது, ''சிறு வணிகத் துறை தற்போது தமிழ்நாட்டின் 2 மற்றும் 3ஆம் அடுக்கு நகரங்களில் முன்னேற்றம் கண்டு வருவதோடு, வர்த்தக செயல்பாடுகளுக்கும் விரிவாக்கத்திற்குமான வாய்ப்புகளையும் அவை எதிர்நோக்கியுள்ளன. இந்த சிறு வணிகப் பிரிவினருக்கு முறையான கடனுதவி திட்டங்களை அளிப்பது இத்தருணத்தில் அவசியமாகிறது. மதுரை மற்றும் தென்காசி ஆகிய ஊர்களில் உள்ள எங்களது புதிய அலுவலகங்கள் சிறிய கடை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம் வரை வர்த்தக கடனுதவி அளித்து அவர்கள் வர்த்தகம் வளர உதவுகிறோம்'' என்றார்.
மேலும் அவர் கூறியபோது,''70 ஆண்டு காலமாக வாடிக்கையாளர் சேவைக்கு சுந்தரம் குழுமம் ஓர் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. மேலும் இப்பிரிவில் உள்ள வாடிக்கையாளர்கள் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் மூலம் கடனுதவியை பெறும்போது ஒர் முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை அவர்கள் பெற்றுணர்வார்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்'' என்றார்.
சுந்தரம் ஃபைனான்ஸிற்கு முற்றிலும் சொந்தமான நிறுவனமான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், வீட்டு கடனுதவிகள், மனை வாங்குவதற்கான கடன்கள், வீட்டு சீரமைப்பு மற்றும் விரிவுபடுத்துதலுக்கான கடனுதவிகள் மற்றும் சொத்துக்களுக்கு எதிரான கடனுதவிகள் ஆகிய திட்டங்களை வழங்கி இந்தியாவின் வீட்டுக்கடனுதவி வழங்கும் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு நாடு முழுவதிலும் 105 கிளைகள் உள்ளன.